Category Archives: kaniyam foundation

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். 2018 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான… Read More »

கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் NLP… Read More »

NLP பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை  சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 05.02.2019 இயல்மொழி ஆய்வுக் கருவிகள்  பயிற்சிப் பட்டறை (Natural Language Processing Workshop) நடத்தப்பட்டது. திரு. இலட்சுமிகாந்தன், இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்கள் ஏற்கெனவே பைதான் மொழி கற்றிருந்ததால், நேரடியாக NLTK, SpaCy பைதான் நிரல் தொகுதிகள் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது. பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. Natural Language Processing in a nutshell Regular Expression Tokenization Simple topic identification… Read More »

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள் உருவாக்கினர். Git, Github, Issues, Workflow, Labels ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.  மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்த நிகழ்வு 5 மணிக்கு… Read More »

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை

டிசம்பர் 22 2018 அன்று, கணியம் அறக்கட்டளையும் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியும் இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கவும், ஆய்வுகளுக்கும் கணியம் அறக்கட்டளை உதவி புரியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் அவர்கள் கட்டற்ற மென்பொருட்கள், கட்டற்ற அறிவு மூலங்கள் உருவாக்க உதவி செய்யப்படும். கணியம் மின்னிதழில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அச்சு இதழாக கல்லூரி… Read More »

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் Tamil NLP using open-tamil python library –… Read More »

12 ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடத்தில் மின்னூல் உருவாக்கம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டங்களின் படி, 11 ஆம் வகுப்பில் தமிழ் தட்டச்சு தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம் வரை கற்கின்றனர். 12ஆம் வகுப்பு, தமிழுக்கான புதுப் பாடத்திட்டத்தில், மின்னூல்கள் உருவாக்கம் பற்றிய அறிமுகம், செய்முறைப் பயிற்சிகளை சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதற்காக, நவம்பர் 29, 2018 அன்று சென்னை DPI வளாகத்தில், த.சீனிவாசன், பாடநூல் எழுதும் ஆசிரியர்களுக்கென ஒரு மின்னூல் உருவாக்கம் பயிற்சி அளித்தார்.  மின்னூலின் கட்டமைப்பு, முன்விவரம், பின்விவரம், மேலடி,… Read More »

தமிழும் தொழில்நுட்பமும் – உரை – காரைக்குடி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளையின் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை மகரிக்ஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 10 2018 ல்  நடைபெற்ற நிகழ்வில் ‘தமிழும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. கணியம் அறக்கட்டளை சார்பாக லெனின் மற்றும் பாலபாரதி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு கணினியில் ஒருங்குறியின் முக்கியத்துவம், தமிழ் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும்… Read More »