Category Archives: Linus News

லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன்

கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன். லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனால், அதே நேரம் என்னிடத்தில் கணினி இருந்திருக்கவில்லை. அதன்… Read More »

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை பார்க்கலாம். இந்தக் கட்டுரைக்கு அடிப்படையாக itsfoss community கட்டுரையை பயன்படுத்துகிறேன். 1. தரவை குறியாக்கம் செய்தல் (encrypting the disk)… Read More »

கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் : 3

ஏற்கனவே இந்த தலைப்பில் இரண்டு கட்டுரைகளில் விவாதித்திருந்தோம். Itsfoss தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே எட்டு கட்டற்ற இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து தெரிவித்திருந்தேன். இந்தக் கட்டுரையிலும் மூலக்கட்டுரையில் உள்ள பிற ஐந்து இன்டர்ன்ஷிப் நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். 9. ICFOSS கேரள அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டற்ற தொழில்நுட்பங்களை நீங்கள் வளர்க்க முடியும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த நிகழ்வு ஒன்றரை மாத காலம்… Read More »

லினக்ஸ் இயங்குதளத்திற்கு 33 வயதாகிறது!

தலை சிறந்த திறந்த நிலை இயங்குதளம்( best opensource software) எதுவென்று கேட்டால், நம்மில் பலருக்கும் லினக்ஸ்(Linux)தான் நினைவிற்கு வரும். விண்டோஸ்(windows),மேக்(mac) போன்ற ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை சாராத , முற்று முழுதாக பயனர்களுக்கு முழு உரிமையையும், வழங்கக்கூடிய ஒரு ஆகச்  சிறந்த நிலை இயங்குதளமாக இயங்குகிறது லினக்ஸ். ஆனால்,  இந்த லினக்ஸ் இயங்குதளத்தை தொடங்கும் போது, இதன் வெற்றி இந்த அளவிற்கு இருக்கும்! என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இதே நாளில் (ஆகஸ்ட் 25) 1991… Read More »

லினக்ஸில் இயக்கி பயன்பெறுகின்ற நமக்குத் தெரியாத ஏழு செய்திகள்

பெரும்பாலான பொதுமக்கள் லினக்ஸை விண்டோ அல்லது மேக்ஸுக்கு மாற்றாக மேசைக்கணினியின் இயக்கமுறைமை மட்டுமேயென தவறாக நினைக்கிறார்கள், ஆயினும், நிறுவகைசெய்து செயல்படுத்திடுகின்ற லினக்ஸின் பெரும்பாலான பயன்பாடுகள் அலுவலகத்திற்குள் உள்ள மேசைக்கணினிகளில் மட்டுமன்று தனிநபர்கள் பயன்படுத்தி கொள்கின்ற கணினிகளில் கூட உள்ளது! என்பதே உண்மையான செய்தியாகும் 1 வீட்டு உபயோகப் பொருட்கள் திறன்மிகு தொலைகாட்சிகள் போன்ற திறன்மிகு சாதனங்கள் பெரும்பாலும் லினக்ஸிலிருந்து பெறப்பட்ட இயக்க முறைமையைக் கொண்டுள்ளன, ஆனால் திறன்மிகு குளிர்விப்பான்கள் அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட நுண்ணலைகள் (microwaves)போன்ற சாதனங்களில்… Read More »

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )என்பது ஒருகே.டி.இ(KDE) இன் மேஜைக்கணினி சூழலுடன்கூடிய ஆர்ச் லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும், பொது மக்கள்அனைவருக்கும் ஒரு உறுதியான நிரந்தமான இயக்க முறைமை தேவை என்ற புரிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இது பொது மக்கள் அனைவராலும் விரும்புகின்ற வகையிலானஒரு மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும், இது அழகான வடிவத்தை தியாகம் செய்யாமல் செயல்பாட்டின் விரிவாக்கத்தையும் பயன்பாட்டின் எளிமையை-யும் வழங்குவதே இந்த இயக்கமுறைமை வெளியீட்டின் நோக்கமாகும். இந்த ப்ளூஸ்டார் லினக்ஸ்இயக்கமுறைமையின் தற்போதைய வெளியீடானது மேஜைக்கணினி (desktop ), வல்லுனர்(Deskpro),… Read More »

KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள். peertube.mastodon.host/videos/watch/963e4e9f-6754-42b0-8b31-0495fb98f15b     20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/       KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/       mastodon.technology/@kde/102449852140716549

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே “கால்சியம்”. கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை (Periodical table) மென்பொருள். இது தனிமிங்களை பற்றிய விவரங்கள் அறிந்து… Read More »