Category Archives: Linux News

லினக்ஸை புதிதாக அமைக்கவேண்டாம், தயார்நிலை வெளியீடுகள்( Turnkey distros ) நமக்காக அதைச் செய்கின்றன

நம்முடைய சொந்த சேவைகளை சுயமான புரவலராக செய்வது சந்தாக்களில் பணத்தைச் சேமிப்பதற்கும் தனியுரிமையை அதிகரிப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். நம்முடைய வளாகவலைபின்னலில் சேவைகளை இயக்குவதால், வேறு யாரும் தரவைகாண மாட்டார்கள். தயார்நிலை லினக்ஸ் வெளியீடு என்றால் என்ன? சாதாரண லினக்ஸ் வெளியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிரலாக்கங்களும், நூலகங்களும் முன்பே தொகுக்கப்பட்டுள்ளவைகளாகும். எடுத்துக்காட்டாக, குபுண்டு ஆனது பிளாஸ்மா, மேசைக்கணினி ஆகிய சூழல் போன்ற பல்வேறு KDE பயன்பாடுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், உபுண்டு மேசைக்கணினி சூழலுக்கான Gnome உடன்தொகுக்கப்பட்டுள்ளது, ஆனால்… Read More »

லினக்ஸ்ஆனது ‘உண்மையான நடைமுறையிலான பணியை’ செய்திடுகின்றது

லினக்ஸஆனது வீட்டு ஆய்வககங்களுக்கு அல்லது சேவையகங்களுக்கு மட்டுமே என்று நினைக்கின்றோமா? தொழில்முறை பணிப்பாய்வை அது கையாள முடியாது என்று கவலைப்படுகின்றோமா? அவ்வாறான எண்ணம் தவறாகும், அது உண்மையில் அனைத்து பணிகளையும் செய்கின்றது அவற்றுள் நம்முடைய பணிகளைச் செய்ய உதவும் ஐந்து வழிகள் மட்டும் பின்வருமாறு. லினக்ஸ் ஆனது “உண்மையான நம்முடைய வேலை எதையும்” கையாள முடியாது என்ற ஒரு பிடிவாதமான கட்டுக்கதை இப்போதும் பரவலாக கூறப்பட்டுவருகின்றது – அதனோடு இது சேவையாளர்களுக்கு மட்டுமேசிறந்தது, பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு நல்லது,… Read More »

விரலியை(USB)பயன்படுத்தாமல் லினக்ஸின்வெளியீட்டை(Linux Distro)ஆய்வுசெய்திடும்வழிமுறைகள்

நாமெல்லோரும் Linuxசெயல்படுகின்ற விரலியை(USB)கொண்டு கணினியை துவக்குவது மட்டுமே ஒரு லினக்ஸ்வெளியீட்டினை ஆய்வுசெய்திடுவதற்கான ஒரே வழி என்று தவறாக நினைத்துகொள்கின்றோம். உண்மையில் லினக்ஸ் செயல்படுகின்ற விரலியை(USB)கொண்டு கணினியின் துவக்கசெயலை செய்வதை விட புதிய லினக்ஸின் வெளியீட்டினை முயற்சிக்க எளிதான பல்வேறு வழிகள் கூட உள்ளன என்ற செய்தியை மனதில்கொள்க.தற்போதைய நம்முடைய நடைமுறை பயன்பாட்டிலுள்ள கணினிகளில் பல்வேறு லினக்ஸின் வெளியீட்டினை முயற்சிக்க பயன்படுத்தக்கூடிய மூன்றுவழிமுறைகள் பின்வருமாறு. 1 மெய்நிகர்கணினி(Virtual Machine) மேசைக்கணினியில் ஒரு இயக்க முறைமையை ஆய்வுசெய்திட மெய்நிகர் கணினி(Virtual… Read More »

சிறந்த செயல்திறனையும், செயல்பாட்டையும் பெற பயன்படுத்த வேண்டிய லினக்ஸின் வசதிவாய்ப்புகள்

லினக்ஸ் சக்தி வாய்ந்தது, நெகிழ்வானது, மேலும் எதையும் செய்ய முடியும். இருப்பினும், லினக்ஸிலிருந்து உண்மையில் அதிகப் பலன்களைப் பெற, மேம்படுத்த வேண்டிய சில திறன்களும் பழக்கவழக்கங்களும் உள்ளன; இல்லையெனில், லினக்ஸிலிருந்து பெறக்கூடிய வளங்களை வசதிவாய்ப்புகளை உண்மையில் பயன்படுத்திகொள்ளவில்லை என்றே பொருள்கொள்ளலாம். எனவே, இதைப் பற்றி தீவிரமாக விவாதிக்க விரும்பினால், லினக்ஸ் செயல்படுகின்ற கணினிகளிலிருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கு பின்வருமாறான உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொள்க. 1. சிறப்பு விசைகளுக்கான முதன்மைகட்டுகளை (keybindings) உள்ளமைத்திடுக மிகநீண்டநாட்களாக லினக்ஸைப் பயன்படுத்தி வருபவர்கள்,… Read More »

சுட்டுமுனைகள்( inodes) பற்றிய அறிமுகம்

inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள… Read More »

நான்கு மாத லினக்ஸ் பயனரின் கதை | லினக்ஸ் புராணம் 1

என்னப்பா! எலக்ட்ரானிக்ஸ்,கட்டற்ற செயலிகள் என அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த நீயும், இப்பொழுது லினக்ஸ் புராணத்தை பாடத் தொடங்கி விட்டாயா என கேட்கிறீர்களா? நான்கு மாத காலம் மட்டுமே நான் லினக்ஸ் பயனராக அறியப்படுகிறேன். இல்லையே! நீ ஏழு,எட்டு மாதங்களுக்கு முன்பே லினக்ஸ் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறாயே என்று கேட்கிறீர்களா? உண்மையை சொல்லப்போனால், நான் கடந்து ஆறு மாதங்களாக மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்து வருகிறேன்(அதுவும் நம் பொறுப்பாசிரியரின் பொறுப்பான அறிவுரைகளை கேட்டு தான்… Read More »

லினக்ஸ் கடலுக்குள் நுழைந்து இருக்கிறேன்

கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக, கணியம் இணையதளத்தில் கட்டற்ற தரவுகள் தொடர்பாக கட்டுரைகள் எழுதி வருகிறேன். லினக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கணியம் இணையதளத்திற்குள் நுழைந்தவன் தான் நான். கொஞ்சம்,கொஞ்சமாக லினக்ஸ் தொடர்பாக கற்றுக் கொள்ள தொடங்கினேன். இன்றும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்திலேயே மொழிபெயர்ப்பு கட்டுரைகளை கணியத்தில் வெளியிட தொடங்கி விட்டேன். லினக்ஸ் பயன்படுத்தி பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. ஆனால், அதே நேரம் என்னிடத்தில் கணினி இருந்திருக்கவில்லை. அதன்… Read More »

விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள்

விண்டோவை பயன்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டோம், ஆனால் லினக்ஸை பயன்படுத்துவது பயம் ஏற்படுகின்றது எனில் சில லினக்ஸ் வெளியீடுகள் விண்டோவைப் போல தோற்றமளித்து, பயனாளரின் நட்புடன் கூடிய முனைம–கட்டணமற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.எனவே எளிதாக இந்த லினக்ஸ் வெளியீட்டினை பயன்படுத்தி கொள்க. விண்டோவை போன்ற அனுபவத்தை வழங்கும் ஐந்து லினக்ஸ் விநியோகங்கள் பின்வருமாறு, ! 1 Q4OS: லினக்ஸ்வெளியீடுகளில் ஒரு மறைக்கப்பட்ட இரத்தினம் போன்றது Q4OS என்பது டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் வெளியீடு ஆகும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை ,ஆகியவற்றுடன்… Read More »

உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும். பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை பார்க்கலாம். இந்தக் கட்டுரைக்கு அடிப்படையாக itsfoss community கட்டுரையை பயன்படுத்துகிறேன். 1. தரவை குறியாக்கம் செய்தல் (encrypting the disk)… Read More »

ஏன், நீங்கள் லினக்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும்?

கட்டற்ற பயனர்களின் ஆகச்சிறந்த இயங்குதளமாக, லினக்ஸ் விளங்குகிறது. தன்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில், கிட்டத்தட்ட லினக்ஸ் கால் பதிக்காத துறையே இல்லை என்று குறிப்பிடலாம் அப்படிப்பட்ட சிறப்புகள் மிக்க லினக்ஸ் ஐ, ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? என்பதற்கான சில தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் காணலாம். மேற்படி இந்த கட்டுரையானது, itsfoss தளத்தில் திரு.சாய் சுயம் தாஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 1. எங்கும் பயன்படுத்தலாம் லினக்ஸ் என்பது ஏதோ… Read More »