Category Archives: Open source softwares

ஓப்பன் சோர்ஸ் கூட்டங்களில் புதியவர்கள்[Freshers] ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

இன்று மதியம் மூன்று மணிக்குச் சென்னைப் பை நிகழ்வு நடக்கவிருக்கிறது. நிகழ்வில் பங்கேற்க: www.meetup.com/chennaipy/events/286420134/ இது போன்ற கூட்டங்களில் புதிதாக இணைபவர்களுக்குச் சில / பல கருத்துகள் புரியாமல் இருக்கலாம். ஆனால், முதல் முயற்சி எல்லா இடங்களிலும் எப்போதுமே அப்படித்தான் இருக்கும். இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைக் குறிப்புகள்: 0. பெரும்பாலான [99%] கூட்டங்கள், இலவசம். இலவசமாக ஒருவர் நம்முடைய துறையைப் பற்றிப் பேசுகிறார், அதிலும் பல ஆண்டு… Read More »

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல் களத்தை வெளியிட்டோம். இங்கு தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றிய எதையும் கேட்கலாம். நீங்களும் பதில் சொல்லலாம். தமிழ் தட்டச்சு சிக்கல்… Read More »

GitDuckஎனும் மேம்படுத்துநர்களின் திறமூலக்கருவி

  GitDuck என்பது மேம்படுத்துநர்களுக்கான ஒரு திறமூல ஒத்துழைப்புக் கருவியாகும். GitDuck என்பது தொலைநிலையில் பணிபுரியும் மேம்படுத்து நர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க கருவியாகும்.அதாவது மேம்படுத்துநர்கள் தங்கள் திரையைப் பதிவுசெய்து, அவர்களின் குறிமுறைவரிகளை கானொளி நேர முத்திரைகளுடன் இணைக்கவும், ஊடாடும் குறிமுறைவரிகளின் கானொளிகளை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது. Duckly என்பது ஒரு IDE செருகுநிரலாகும், இது குறிமுறைவரிகளின் முறையை பலமுறைஇயங்கச் செய்கிறது. மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகள், சேவையாளர், முனைமம் ஆகியவற்றைப் பகிரவும், வெவ்வேறு IDEகளைப் பயன்படுத்தும் நபர்களுடன்… Read More »

Sambaஎனும் திறமூல கருவி மூலம் கோப்பு பகிர்வு

Samba என்றால் பகிர்ந்துகொள்ளுதல் என பொருளாகும்.Samba எனும் கருவியானது கோப்புகளை பகிர்ந்துகொள்வதை எளிதாக்குகிறது. பயனாளர்களின் குழுக் களுக்கான பொதுவான கோப்புறைகள், உள்வரும் கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் உள்வருகை பெட்டிகள் நமக்குத் தேவையானவை உட்பட பகிரப்பட்ட இருப்பிடங்களை உருவாக்க, Samba இல் உள்ள பல செயல்திட்டங்களைப் பயன் படுத்திகொள்ளலாம். இந்த திறமூலமான கருவியானது, நெகிழ்வானது, மேலும் இது நம்முடைய நிறுவனத்தில் இயங்கக்கூடிய அனைத்து வெவ்வேறு தளங்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த கருவியானது ஜிபிஎல் உரிமத்துடன்வெளியிட பெற்றுள்ளது, இது பெரும்பாலான… Read More »

NETGENஎனும்தானியங்கி முப்பரிமான tetrahedral வலைக்கன்னி உருவாக்கி

NETGEN என்பது ஒரு தானியங்கி முப்பரிமான(3d) tetrahedralவலைக்கன்னி(mesh) உருவாக்கியாகும். இது STL கோப்பு வடிவத்தில் இருந்து ஆக்கபூர்வமான திட வடிவியல் (CSG) அல்லது எல்லை பிரதிநிதித்துவத்திலிருந்து(BRep) உள்ளீட்டை ஏற்றுக்கொள்கிறது. இதுவடிவியல் உருவாக்கமையத்திற்கான இணைப்பு IGES , STEP ஆகிய கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது. NETGEN ஆனது கண்ணி மேம்படுத்தல் , படிநிலை வலைக்கன்னி(mesh) சுத்திகரிப்புக்கான தொகுதிக் கூறுகளைக் கொண்டுள்ளது.Netgen/NGSolve என்பது உயர் செயல்திறன் கொண்ட பல்இயற்பியல் வரையறுக்கப்பட்ட உறுப்பு மென்பொருளாகும்.இதனை பரவலாக திட இயக்கவியல், திரவ இயக்கவியல்… Read More »

Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் 

அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து  செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால் அவைகளை கொண்டு குறிப்பிட்ட பணியை செய்து சமாளிக்க முடியும். ஒரு பயன்பாடு உண்மையில் நூற்றுக்கணக்கான சிறிய நூலகமும்  கணினி முழுவதும்… Read More »

திறமூலக் கருவி மூலம் எந்தவொரு இணையதளத்தையும் லினக்ஸின் மேசைக்கணினி பயன்பாடாக மாற்றலாம்

Nativefier, Electron ஆகியவை எந்தவொரு இணையதளத்திலிருந்தும் மேசைக்கணினியின் பயன்பாடுகளை உருவாக்குகிறது. Mastodonஎன்பதுபரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னலிற்கான ஒரு சிறந்த திற மூலகருவியாகும், .தற்போது பெரும்பாலானவர்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக Mastodon ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் Mastodon ஐ அதன் இணைய இடைமுக வசதியின் மூலம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும் (திற மூலமாக இருந்தாலும், முனைமத்தின் அடிப்படையிலான பயன்பாடுகள் கைபேசிபயன்பாடுகள் உட்பட அதனுடன் தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன), ஆனால் சிலர்தனிப் பயன்பாட்டு சாளரங்களை விரும்புவார்கள் . அவ்வாறானவர்களுக்கும் பொருத்தமானதாக… Read More »

இந்த மூன்று எளிய படிமுறைகளுடன் யார் வேண்டுமானாலும் மூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிமாற்றம் செய்து பயன்பாடாகஆக்கலாம்

பயன்பாட்டிற்கான மூலக்குறிமுறைவரிகளை தொகுக்க, குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது அல்லது படிப்பது என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகைசெய்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன, ஆனால் திறமூலத்துடன் வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்பினை பெறமுடியும்: குறிமுறைவரிகளைநாமே தொகுக்கலாம். மூலக் குறிமுறை வரிகளைத் தொகுப்பதற்கான உன்னதமான மூன்று-படிமுறைகளின் செயல்முறைகள் பின்வருமாறு: $ ./configure $ make $ sudo make install மென்பொருளை உருவாக்க கட்டளைவரிகளை நிறுவுகைசெய்திடுதல் நாம் குறிமுறைவரிகளை தொகுப்பது இதுவே முதல் முறை என்பதால், மென்பொருளை… Read More »

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் எனும் பயன்பாட்டிற்கு மாற்றானதிறமூல பயன்பாடுகள்

பல தசாப்தங்களாக, மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்ஆனது மின்னஞ்சல், குழுவான மின்னஞ்சல் ஆகிய சேவைகளுக்கான சந்தையை ஆட்சி செய்து வருகிறது. இது மிகஉயர்நந்த கார்ப்பரேட் உலகில் தன்னிகரற்ற பயன்பாடாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது, மேலும் அவுட்லுக் மின்னஞ்சல் வாடிக்கையாளர் குழு விற்க்கான உண்மையான தரநிலையாக மாறியுள்ளது. மிகமுக்கியமாகஇந்த பயன்பாடு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால், பயனாளர்கள் மேசைக்கணினி அல்லது கைபேசி வாடிக்கையாளரைப் பயன்படுத்தினாலும், பல்வேறு வகையிலும் உதவிடுகின்ற திறன்மிக்க மென்பொருளாகவும் தன்னுடைய வசதிகளை அணுகிடுமாறு அமைந்துள்ளது. இருப்பினும்,… Read More »

திறமூல மென்பொருட்களுக்கிடையிலானப் போட்டிகள்

பொதுவாக மனிதர்களுக்கு தத்தமது தனித்துவத்தின்மீது வலுவான உணர்வு உள்ளது. இது அற்பமான செயல்களில் கூட பலவிதமான கண்ணோட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் கணினி உலகம்கூட சிறப்பாக அமையவில்லை. ஒரு எளிய உதாரணத்தின் மூலம் இந்தசெய்தியை தெளிவுபடுத்தமுடியும். C, C++ அல்லது Java ஆகிய கணினிமொழிகளில் நிரலை எழுதும் போது, அடைப்புக்குறியை எங்கு பயன்படுத்திடுவோம்? பல தொழில்முறை நிரலாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளில் உள்ள இரண்டு பாணிகளில் ஒன்றைப் பின்பற்றுகின்றார்கள்: fun( ) { //Body of the… Read More »