Category Archives: Python

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால்… Read More »

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »

பைதான் கருவிகளின் மூலம் வானியலை துவங்கலாம்

பைதான் ஆனது அறிவியல்ஆய்விற்காகஉதவிடும் ஒரு மிகச்சிறந்த கணினிமொழியாகவும்திகழ்கின்றது குறிப்பாக . NumPy, SciPy, Scikit-ImageandAstropy ஆகிய பல்வேறு தொகுப்புகள் அனைத்தும் வானியல் ஆய்விற்காக மிகபொருத்தமானவை என்பதற்கான சிறந்த சான்றுகளாகும், மேலும் ஏராளமான அளவில்  வானியல் ஆய்விற்காக இவை பயன்படும் பயன்பாட்டு வழக்காறுகள் உள்ளன. வானியல் ஆய்வாளர்கள் பலரும் இந்த தொகுப்புகள் அனைத்தையும் தங்களுடைய ஆராய்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தி கொண்டுவருகின்றனர் .இப்போது எங்கும் காணப்படும் இவ்வானியல் ஆய்வின் பெருங்குவியலான தரவுகளை சலித்து வடிகட்டி அவைகளிலிருந்து அர்த்தமுள்ளவைகளாக உருவாக்க கூடிய… Read More »

Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு

வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு ஆனது. இந்த நிரல் தொகுப்பு முற்றிலும் திறமூல MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது. இதனை கொண்டு நீங்கள் பைத்தான் கணினி மொழியில் தமிழ் மொழி ஆய்வுகளை செயல்படுத்தலாம். உதாரணமாக இரண்டு திறமூல சேவைகள்/செயல்பாடுகள் (அதாவது எழில், தமிழ்சந்தி மற்றும் தமிழ்பேசு-வலை என்பவற்றை தவிற்த்து [எங்கள் குழுவினர் அல்லாதவர்]) பயன்பாட்டில் பொதுவெளியில் உள்ளது தெரியவந்தது-  1) பைதமிழ் என்ற (அவலோகிதம் போல) வேண்பா திரிப்பு நிரல்… Read More »

PyTorch ஒரு அறிமுகம்

பைடார்ச் என்பது பைதானிற்கான ஒரு திறமூல இயந்திர கற்றல் நூலகமாக வரையறுக்கப் படுகின்றது. இது இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பயன்பாடுகளுக்காகபயன்படுத்திகொள்ளப்படுகின்றது. பேஸ்புக் எனும் நிறுவனத்தின் செயற்கை–நுண்ணறிவு ஆராய்ச்சி குழுவானது இதனை முதன்முதல் உருவாக்கியது அதாவது முதலில், Torchஎனும் வரைச்சட்டத்தின் அடிப்படையில் LusJITஇற்கான பைத்தான் மேலட்டையாக இந்த PyTorchஆனது உருவாக்கப்பட்டது.அதன்பின்னர் இதனுடைய நிகழ்தகவு நிரலாக்கமானது உபேர் எனும் நிறுவனத்தினுடைய Pyro எனும் மென்பொருளால் கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்–பட்டது. இதில் பின்புல குறிமுறைவரிகளுக்கான சிஎனும் கணினிமொழியின் அதேமைய நூலகங்களைப் பகிர்ந்துகொண்டு… Read More »

சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் – தமிழ் இணைய மாநாடு 2019 உரை – காணொளி

Algorithms for certain classes of tamil spelling correction   சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழ் இணைய மாநாடு 2019 ல் நிகழ்த்திய உரை.   ஆய்வுக் கட்டுரை இங்கே – Click to access algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-final.pdf   உரையின் போது பயன்படுத்திய வழங்கல் – www.slideshare.net/tshrinivasan/algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-174649552 Open-Tamil திட்டப் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் !   நிகழ்வின் அனைத்து காணொளிகளைகளையும் இங்கே காணலாம் liveibc.com/tic2019/

பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது

பைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய குறிமுறைவரிகளை எழுதும்போது பரிசோதித்து பார்த்திடவும் நம்மை அனுமதிக்கிறது. இந்த பைதான் எனும் கணினிமொழியினைமிகஎளிதாக கற்றுகொள்ளமுடியும் இவ்வாறான வசதிவாய்ப்பினை கொண்ட பைதான்எனும்… Read More »

எளிய தமிழில் Robotics 21. டர்டில்பாட் 3 – பர்கர் (Turtlebot 3 – Burger)

இது வரை நாம் பார்த்த எந்திரன் தொகுதிகள் கீழ்க்கண்ட வகையில் மிகவும் பயனுள்ளவை: ஆறு வயது முதல் பல்வேறு வயது வரம்புக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்றுக்கொள்ள எளிதாக நிரல் எழுதும் வகைகள் பல உண்டு. கைமுறையாக செயல்படுத்திப் பார்க்க பல வழிமுறைகள் இருப்பதால் எந்திரனியல் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், நிரல் எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வழிவகுக்கின்றன. நாம் இதுவரை பார்த்த பாவனையாக்கியில் செய்யக்கூடிய பயிற்சிகளை… Read More »