Category Archives: Tamil

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம்.… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன. “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு… Read More »