Category Archives: Training

லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். பயிற்சி தொடங்கும் நாள்: பிப்ரவரி 11, 2021 நேரம்: பிற்பகல் 2 – 3.30 இந்திய நேரம் பயிற்சியில்… Read More »

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும். * பயிற்சி முற்றிலும் இலவசமா? ஆம். முற்றிலும் இலவசம். *… Read More »

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது… Read More »

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்ட் – சென்னையில் ஒருநாள் பயிற்சி முகாம்

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தமிழ் வழியில் சென்னையில் நடக்கிறது. கட்டற்ற மொழியான ஜாவா ஸ்கிரிப்டின் வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததே!  ஆங்குலர் போன்ற இணையத்தள வடிவமைப்பு நிரலாக்கத்தின் அடிப்படையாக ஜாவாஸ்கிரிப்ட் இருக்கிறது.  நம்மில் பலரும் ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்தவர்களாக இருப்போம். அதில் அடுத்த நிலைகளான கிளாஸ், அப்ஸ்டிராக்ட், டெக்கரேட்டர்ஸ் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது.  பயிற்சியில்… Read More »

ஒரு Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள்

Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள் ஐடி துறையில் நுழைந்து வல்லுநர் ஆவதற்கு வயதோ படிப்போ ஒரு தடையில்லை – ஆர்வமும் நேரமும் இருந்தால் மட்டும் போதும் – பைசா செலவில்லாமல் பெரிய ஆள் ஆகலாம் – அதற்கான எளிய வழிகளைப் பற்றி விளக்குகிறார் முத்துராமலிங்கம் (பயிலகம்)   பார்க்கவும் பகிரவும் – இணைப்பு youtu.be/BJiPDazIcdw

சாப்ட்வேர் டெஸ்டிங் – சென்னையில் 2 நாள் பயிற்சிப் பட்டறை

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா? சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதற்கான பயிற்சிக்கு நிறைய செலவும் ஆகும்! நேரமும் இல்லையே! என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! இதற்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை சென்னையில் வரும் செப்டம்பர் 28, 29இல் நடைபெறவிருக்கிறது. ஐடி துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி கொடுக்கவிருக்கிறார்கள். பயிற்சியோடு சேர்ந்து டெஸ்டிங் துறையில் கட்டற்ற மென்பொருட்கள் திட்டப்பணிகளில் நம்மை எப்படி ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்ற செய்முறையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.… Read More »

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை இடம் – தரைதளம் 4, சுபிக்‌ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம்,… Read More »