பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்
பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு இணைகளை (terse keyword-value pairs) விட, பெரும்பாலும் படிக்கக்கூடியதாக உள்ளது. rc கோப்பு அறிவிப்புகள் எந்த அளவு ஒரு குறுமொழியை… Read More »