உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம்.

இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க வேண்டி இருக்கும். மேலும், அவை எதுவும் திறந்த நிலை திட்டங்களாக(OPEN SOURCE PROJECT) இருக்காது. எனவே, இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருப்பது UPSCAYL எனும் சிறந்த மென்பொருள்.

upscayl என்பது ஒரு திறந்த நிலை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும்.

இதனைக் கொண்டு, உங்களுடைய பழைய புகைப்படங்களை உயர்தரத்திற்கு மெருகேற்ற முடியும்.

Upscayl

இந்த மென்பொருள் உங்களுடைய லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் சிறப்பாக இயங்கக் கூடியது.

RPM or DEB தொகுப்புகளை பயன்படுத்தும், உங்களுடைய லினக்ஸ் கணினிகளில் எளிமையாக நிறுவ முடியும். மேலும் பொதுவான லினக்ஸ் Appimage உம் இதற்கு உள்ளது.

நீங்கள் மேக் அல்லது விண்டோஸ் இயங்குதளங்களில் நிறுவ விரும்பினால், அதற்குரிய வழிகளும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும் இது AGPL உரிமையின் கீழ் இயங்குகிறது.

எப்படி பயன்படுத்துவது

உங்களுடைய கணினியில் மென்பொருளை நிறுவிய பிறகு, ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பயன்படுத்துவது அனைவருக்கும் மிகவும் எளிமையாகவே இருக்கும். குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் இன்றி, உங்களால் ஒரு புகைப்பட கோப்பை(Photo folder) மொத்தமாக தேர்ந்தெடுத்தும், மெருகேற்ற முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

(Don Watkins, CC BY-SA 4.0)

புகைப்படத்தை தேர்ந்தெடுத்த பிறகு, உங்களுக்கு விருப்பமான முறையை தேர்வு செய்யவும்.Real-ESRGAN எனும் முறை இயல்பாகவே செயல்பாட்டில் இருக்கும். மேலும், உங்களுக்கு ஆறு வகையான மெருகேற்றும் முறைகள் உள்ளன.

  • REAL-ESRGAN உடன் கூடிய இயல்பான புகைப்படம்.
  • remacri உடன் கூடிய இயல்பான புகைப்படம்
  • ultra mix balanced உடன்கூடிய இயல்பான புகைப்படம்
  • Ultrasharp உடன் கூடிய இயல்பான புகைப்படம்
  • டிஜிட்டல் ஓவியம்
  • தீட்டப்பட்ட (sharpen) புகைப்படம்

மேற்கண்ட முறைகளில், உங்களுக்கு பிடித்த உள்ளீடை(option) தேர்வு செய்துவிட்டு, Upscayl எனும் பொத்தானை அமிழ்த்தவும்.

உங்கள் கணினியில் உள்ள, வரைகலை செயலாக்க அமைப்பின்(GPU) அளவைப் பொறுத்து, குறிப்பிட்ட நேரத்தில் உங்களுடைய புகைப்படம் மெருகேற்றப்பட்டு வெளியீடாக கிடைக்கும்.

மாதிரி புகைப்படம்

(Derived from Jurica Koletić, Unsplash License)

இன்னும் ஏன்? காத்துக் கொண்டிருக்க வேண்டும்? உடனடியாக முயற்சி செய்து பாருங்கள். ஆனால் உங்களிடம் மிகவும் பழைய  வரைகலை செயலாக்க அமைப்பு(GPU) இருந்தால், புகைப்படம் வெறுக்கேற்ற மிக அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே, உங்களுடைய கணினியில் சிறந்த வரைகலை செயலாக்க அமைப்பு (GPU),  இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

மேற்படி, இந்த கட்டுரையானது opensource.com இணையதளத்தில் Donwatkins அவர்களால் எழுதப்பட்டது.

இதை எளிமைப்படுத்தி,எளிய தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, நான் வெளியிட்டு இருக்கிறேன். இதில் பிழைகள் இருக்கலாம்! அவ்வாறு இருப்பின் தயக்கமின்றி என்னுடைய மின்மடல் முகவரிக்கு(Email) தெரிவிக்கவும். குறைகள் வரும் கட்டுரைகளில், நிவர்த்தி செய்யப்படும். இந்த கட்டுரையோடு இணைந்திருந்தமைக்கு நன்றி.

மொழிபெயர்த்தவர்

ஸ்ரீ காளீஸ்வரர்.செ ,

தொடக்கநிலை மொழிபெயர்ப்பாளர்,

இளங்கலை இயற்பியல் மாணவர்.

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: