எளிய GNU/Linux commands

நித்யா

<nithyadurai87@gmail.com>

Users-ஐ கையாளுதல்

இந்தப் பகுதியில் நாம் user management-க்கு உதவும் ஒருசில commands-ஐப் பற்றி விரிவாகக் காண்போம்.

sudo command

sudo-ஆனது நம்மை root user-ஐப் போன்று செயல்பட வைக்கும் ஒரு command ஆகும்.

இதற்கு முதலில் root-ஆனது நமக்கு sudo-வை பயன்படுத்துவதற்கான அனுமதிகளை வழங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் நாம் sudo-வை வைத்து, root user செய்யும் வேலைகளை செய்ய முடியும்.

உதாரணத்துக்கு root-க்குத் தான் நமது கணினியில் ஒரு புதிய பயனரை உருவாக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் நாம் இந்த sudo-ன் துணை கொண்டு ஒரு புதிய பயனரை உருவாக்க முடியும். இதனை நாம் பின்வரும் adduser command-ல் பார்க்கலாம்.

adduser command

sudo மூலம் இந்த adduser command-ஐ நாம் இயக்கும்போது நமது கணினியில் ஒரு புதிய user-ஐ நாம் உருவாக்க முடியும். இது பின்வருமாறு:

$ adduser harini

இதன் தொடர்ச்சியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் சரியான விவரங்களை அளித்த பின்னர், harini எனும் பெயரில் ஒரு புதிய user உருவாக்கப்படும்.

பொதுவாக ஒரு கணினியில் உள்ள users பற்றிய விவரங்கள் அனைத்தும் /etc/passwd எனும் பகுதியில் சேமிக்கப்படும். எனவே இந்தப் பகுதியில் நாம் உருவாக்கிய harini எனும் user இணைக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பின்வருமாறு சரிபார்க்கலாம்.

$ cat /etc/passwd

இங்கு password எனுமிடத்தில் வெறும் x உள்ளதைக் காணலாம். /etc/shadow எனும் இடத்தில் மட்டுமே அனைத்து users-ன் encrypt செய்யப்பட்ட password-ம் காணப்படும்.

இது பின்வருமாறு.

$ sudo cat /etc/shadow

su command

su ஆனது switch user எனப் பொருள்படும். su மூலம் ஒரு பயனர் நமது கணிணியில் நேரடியாக செய்ய முடியும். இது நாம் logout செய்த பின்னர் மற்றொருவர் login செய்வதைக் காட்டிலும் சுலபமானது.

$ su harini

ஒரு சாதாரண user-க்கு sudo அனுமதிகளை வழங்குதல்

root user அல்லது sudo அனுமதிகளைப் பெற்ற ஒரு user, ஒரு சாதாரண user–க்கு sudo அனுமதிகளை வழங்க முடியும்.

உதாரணத்துக்கு harini-க்கு நாம் sudo அனுமதிகளை விரும்பினால், /etc/group-க்குள் harini-யை நாம் இணைக்க வேண்டும். இது பின்வருமாறு.

இங்கு nano என்பது vi-ஐப் போன்று செயல்படும் ஒரு editor ஆகும். எனவே nano-வை கொண்டு ஒரு file-ஐ open செய்யும்போது பின்வருமாறு ஒரு திரை வெளிப்படும்.

இதில் arrow mark key-ஐப் பயன்படுத்தி sudo-க்கான entry வரும்வரை நகர்ந்துகொண்டே செல்லவும். sudo-க்கான entry வந்தவுடன் அந்த வரியின் இறுதியில் சென்று comma-வை இணைத்து ‘harini’ என type செய்துவிட்டு ctrl+O வை அழுத்தவும். இது நாம் செய்த மாற்றங்களை file-ல் overwrite செய்யப் பயன்படும்.

இப்போது harini-க்கு sudo அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டது

chown command

chown command-ஆனது ஒரு file-ன் owner-ஐ மாற்றி அமைக்க உதவும். உதாரணத்துக்கு LKG file-ன் user, ‘Nithya’ ஆவார். இதனை ‘Harini’ என்று மாற்றி அமைக்க விரும்பினால், command-ஐ பின்வருமாறு அமைக்கவும்.

$ chown harini LKG

chgrp command

chgrp command-ஆனது ஒரு file-ன் group-ஐ மாற்றி அமைக்க உதவும். உதாரணத்துக்கு LKG file-ன் group, ‘Nithya’ ஆகும். இதனை ‘Harini’ என்று மாற்றி அமைக்க விரும்பினால், command-ஐ பின்வருமாறு அமைக்கவும்.

$ chgrp harini LKG

ஒரே நேரத்தில் owner மற்றும் group-ஐ மாற்றுதல்

chmod command மூலம் நாம் ஒரே நேரத்தில் owner மற்றும் group-ஐ எவ்வாறு மாற்றுவது என்று பின்வருமாறு பார்க்கலாம்.

$ chmod nithya:shrini LKG

இது owner-ஐ nithya-ஆகவும், group-ஐ shrini-ஆகவும் மாற்றுகிறது. இங்கு நாம் இடையில் colon-ஐப் பயன்படுத்துவதற்கு பதிலாக dot-ஐக் கூடப் பயன்படுத்தலாம்.

userdel Command

userdel command-ஆனது ஒரு user-ஐ கணிணியில் இருந்து நீக்கப் பயன்படுகிறது.

$ userdel harini

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: