1 சனவரி 2012ல் கணியம் தளம், கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னிதழாக, கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களால் தொடங்கப்பட்டது.
பல்வேறு கணித்தமிழ் பணிகளை ஒருங்கிணைக்க, கணியம் அறக்கட்டளையாக 18 செப்டம்பர் 2018 ல் வளர்ந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புகள், நன்கொடைகள் பல அரும்பணிகளை சாத்தியமாக்கியுள்ளன.
பல்வேறு கனவுகள் நனவாகும் நிகழ்வுகளின் தொடர்வாக, 4 பிப்ரவரி 2024 அன்று கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் Kaniyam Foundation என்ற அமைப்பு பதிவு செய்யப்பட்டதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என்பதே கட்டற்ற மென்பொருட்களின் வாழ்வியல் வடிவம்.
பன்னாட்டு அமைப்பாக வளர்ந்து வரும் கணியம் அறக்கட்டளையின் பணிகளைத் தொடர, உலகெங்கும் இருந்து உதவிக் கரங்கள் நீட்டும் அனைத்து அன்பர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
உங்களோடு இணைந்து தமிழுக்கும் கட்டற்ற மென்பொருட்களுக்கும் பங்களிப்பதில் மகிழ்கிறோம்.
ஊர் கூடித் தேர் இழுக்கும் திருவிழாக்களை தொடர்ந்து நடத்துவோம் வாருங்கள்.