அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி.
தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.
தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.
உங்கள் கருத்துகளையும், பிழைத் திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-javascript-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
து. நித்யா
கிழக்கு தாம்பரம்
31 அக்டோபர் 2018
மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com
வலைப் பதிவு: nithyashrinivasan.wordpress.com
உரிமை
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
• யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
• திருத்தி எழுதி வெளியிடலாம்.
• வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
நூல் மூலம் :
static.kaniyam.com/ebooks/Learn-Javascript-in-Tamil.odt
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.
[wpfilebase tag=file id=59/]