“எளிய இனிய கணினி மொழி” – ரூபிக்கு இதை விட பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணைய பயன்பாடுகள் ரூபியில் எழுதப்படுகின்றன. நிரலை சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். மென்பொருட்களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ரூபியில் உருவாக்க முடியும். ரூபியின் அடிப்படையையும், பரவலாக பயன்படுத்தப்படும் அம்சங்களையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ரூபியின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் வியாபித்திருப்பது அவரது சிறப்பு.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;”
பாரதியின் இக்கனவினை மெய்ப்பிக்கும் முயற்சியில் கணியம் 2012 முதல் ஈடுபட்டிருக்கிறது. கட்டற்ற மென்பொருட்களைப்பற்றிய தகவல்களையும், மென்பொருள் உருவாக்க முறைகளப்பற்றியும் தொடர்கட்டுரைகள் கணியம் இதழில், தமிழில் வெளியாகி வருகின்றன. இதில் ரூபி என்ற நிரலாக்க மொழியை பற்றிய பதிவுகளைத் தொகுத்து இந்த மின்னூலை வெளியிடுகிறோம்.
kaniyam.com/learn-ruby-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
உங்கள் கருத்துகளையும், பிழைதிருத்தங்களையும் editor@kaniyam.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
படிப்போம்! பகிர்வோம்!! பயன் பெறுவோம்!!!
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
நன்றி,
இல. கலாராணி
lkalarani@gmail.com
ஆசிரியர் – பிரியா சுந்தரமூர்த்தி priya.budsp@gmail.com
பதிப்பாசிரியர், பிழை திருத்தம், வடிவமைப்பு : இல. கலாராணி lkalarani@gmail.com
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
இந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
[wpfilebase tag=file id=51/]
Most wanted one for me to work with chef .
Thank you very much
Pingback: Ebooks – எளிய இனிய கணினி மொழி – ரூபி(RUBY) – Master CFU
I have already websites developed in HTML and ms front page now I search through tamil tech about ruby software I am fully interested to learn and develop the web site using this software pls give some tips thanking u n
By khader tiruvarur
python PDF apply for this websites