லிப்ரெஓபிஸ் என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது இலாப நோக்கமற்ற தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம்.
இந்தக் கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் பங்களிப்பதன் மூலம், நாமும் சமூகமும் இணைந்து வளர முடியும்.
வரும் ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சென்னை பயிலகத்தில் லிப்ரேஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் நிகழ்வு நடக்க இருக்கிறது. நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்கள் மடிக்கணினியுடன் நிகழ்விடத்திற்கு வந்து பங்கேற்கலாம்.
காலம்: 08.09.2022 ஞாயிறு காலை 9.30 மணி
களம்: பயிலகம், விஜய நகர் முதல் தெரு, வேளச்சேரி, சென்னை 600042
8344777333
ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை
முகவரியை ஓப்பன்ஸ்டிரீட்மேப்பில் தேட: www.openstreetmap.org/node/5230078138