டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி

இது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட் ஆனது ஜாவா மொழி போன்று வாடிக்கையாளர்கள் கட்டமைக்கபட்ட வடிவமைப்பை கட்டாயபடுத்தாத மொழியாகும். மேலும் இதில் ஜாவா மொழி,போன்று ஒழுங்கற்றநிலையை நோக்கி சார்ந்திருத்தல், கடினமாக குறிமுறையைjf பராமரித்தல் என்பன போன்ற பிரச்சினை தரும் செயல் எதுவும் இல்லை.

 

அதுமட்டுமல்லாது ஜாவா மொழி போன்ற இனங்களின் படிநிலையும் தலைமுறை நிலையும் நிரல் தொடரில் பேரளவு கடினநிலையை அளிப்பது ஆகியன இதில் இல்லை. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் டார்ட் எனும் மொழியானது எளிதாக தீர்வு செய்கின்றது. மேலும் இந்த டார்ட் எனும் மொழியானது ஜாவாவை விட இருமடங்கு விரைவாகவும், சமீபத்திய இணைய உலாவிகளை செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஜாவா மொழியின் மொழிமாற்றியை பயன்படுத்தி செயல்படுகின்றது. ஏராளமான வகையில் சேகரிக்கபட்ட நூலகத்தையும் கட்டுகளையும் தன்னகத்தே இது கொண்டுள்ளது. அடிக்கடி மேம்படுத்திடும் முன்மாதிரியான கட்டளைத்தொடரை விரைவாக இந்த டார்ட் எனும் மொழியை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும். மேம்பட்ட கருவிகளையும் நம்பகமான நூலகங்களையும் நல்லதரமான மென்பொருளில் பொறியியல் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இதனை அணுகமுடியும். இதனை www.dartlang.org/ எனும் இதனுடைய இணையப்பக்கத்திற்குச் சென்று இந்த தளம் வழங்கும் இடைமுக் குழுவின் வழிகாட்டுதல்களை அறிந்துகொண்டு இணையஉலாவியிலேயே டார்ட்மொழியின் குறிமுறைவரிகளை எழுதி செயல்படுத்தி சரிபார்த்திட முடியும். இந்த தளமானது பதிவிறக்கம் செய்திடும் Dart Editor எனும் உரைபதிப்பானை வழங்க தயாராக இருக்கின்றது. இந்த Dart Editor எனும் உரைபதிப்பானைக் கொண்டு நம்முடைய கணினியில் டார்ட்டின் பயன்பாடுகளை உருவாக்கி சரிசெய்து இயக்க அனுமதிக்கின்றது.

 

இதிலுள்ள பல்வேறு கட்டளைவரிகளைக் கொண்ட Dart SDK எனும் கருவியும் மெய்நிகர் டார்ட்டும்(DartVM) இந்ததளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த உள்பொதிந்த மெய்நிகர் டார்ட்டை(DartVM) பயன்படுத்துவதற்கு நம்முடைய இணையஉலாவி அனுமதிக்கவில்லையெனில் கவலையே படாதீர்கள். டார்ட் மொழியிலிருந்து ஜாவா மொழிக்கு மொழிமாற்றம் செய்திடும் மொழிமாற்றியான இதிலுள்ள Dart SDK எனும் கருவி தயாராக உள்ளது. அதனைக்கொண்டு ஜாவா மொழியாக மொழிமாற்றம் செய்து நிலைமையை சமாளித்து எதிர்கொள்ள முடியும். இது ஜாவாஸ்கிரிப்ட் பயனாளர்கள் ஜாவா கட்டமைவை மேம்படுத்துநர் ஆகிய இருதரப்பு பயனாளர்களும் பின்பற்றும் வடிவமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.

 

ஒரு எளிய சாதாரண டார்ட் நிரல்தொடரை எழுதுவது எவ்வாறு என இப்போது காண்போம். இதன் கட்டமைவானது நாம் பயன்படுத்திடும் வழக்கமான சி மொழிபோன்றே உள்ளது
//SimpleDart.dart
Voidmain(){
Print(“ வருக வருக வணக்கம்”);
}

இது ஒரு எளிய நிரல் தொடர்குறிமுறை வரிகளாக இருந்தாலும், டார்ட் மொழியை பற்றிய சில அடிப்படைத் தகவல்களை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது சி மொழியின் இலக்கண நடைமுறையை பின்பற்றுகின்றது. இந்த டார்ட் குறிமுறை கட்டளையானது main எனும் செயலியை நேரடியாக சார்ந்துள்ளது. இந்த ஒழுங்கு முறையையே அனைத்து இடங்களிலும் இது பின்பற்றுகின்றது. இந்த “வருக வருக வணக்கம்” எனும் நிரல் தொடர் மொழியானது எளிமையானதாகத் தோன்றினாலும் பாதுகாப்பு, பிரச்சினைகளை தீர்வுசெய்வது ஆகிய செயல்களில் ஜாவாஸ்கிரிப்டை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குகின்றது.
இது லினக்ஸ் ,விண்டோ ,மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமை தளத்திலும் செயல்படும் திறன் மிக்கது. இது சேவையாளராகவும், செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துதலிலும், இணைய பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துவதிலும் மிகமுக்கிய பங்காற்றுகின்றது. இந்த டார்ட் எனும் மொழியை ஆழ்ந்து அறிந்து தெரிந்து பயன்படுத்தி கொள்வதற்கு வாருங்கள். www.dartlang.org/docs/tutorials/ எனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு வந்து உங்களின் தேவைக்கு ஏற்ப இந்த டார்ட் மொழியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

ச.குப்பன்
kuppansarkarai641@gmail.com
www.vikupficwa.wordpress.com , www.skopenoffice.blogspot.in/ , www.arugusarugu.blogspot.in ஆகிய என்னுடைய வலைபூவை பார்வையிட்டு தங்களுடைய மேலான கருத்துகளை வழங்கிடுக

%d bloggers like this: