நாள் 31: du
சில நாட்கள் விடுப்பு முடித்துவிட்டு கோப்புறை பயன்பாட்டினை ஆராய விரும்பிய மஞ்சரி தன் காதலன் கார்த்திக்கிற்கு போன் செய்கிறாள்.
என்னப்பா திடீரென்று ஒரு கதை! ஆமாம் கதை தான். ஆங்கில கட்டளைகளுக்கான மூல மடல் அனுப்பி வந்த நண்பரிடமிருந்து சில மடல்கள் வராதிருக்க தினம் ஒரு கட்டளை தொகுப்பு தமிழில் பதிவிடப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் துருவங்கள் தொடரை படிக்க தொடங்கினேன். தமிழில் லினக்ஸ் போன்றதொரு நுட்பத்தினை கதை வடிவில் படித்ததில் மகிழ்ச்சி.
படித்தால் மட்டும் போதுமா நாமும் எழுதுவோம் என்றொரு முயற்சி. அம்முயற்சியின் வெளிப்பாடே இந்த சிறுகதை.
சரி கதைக்குள் செல்வோம். போன் மணி ஒலிக்கிறது ஏற்கனவே ஆபீஸ் சப்போர்ட் கால்களில் கடுப்பாகி ஒரு டீ அடித்துவிட்டு வேலையை தொடரலாம் என நினைத்த கார்த்திக்கிற்கு மஞ்சரியின் அழைப்பு வரவே ச இவ வேற நேரங்காலம் தெரியாமல் போன அடிச்சி தொலையிறா என சலித்துக்கொண்டே கார்த்திக் போனை எடுக்கிறான்.
கார்த்திக் : சொல்லு செல்லம் என்ன இந்த நேரத்துக்கு
மஞ்சரி : ஒன்னுமில்ல எனக்கு லினக்ஸ் ல ஒரு சந்தேகம் அத் கேக்க தான் போன் பண்ண
கார்த்திக் : சரி சொல்லு.
மஞ்சரி : டு(du) கட்டளை பத்தி கொஞ்சம் சொல்லேன்டா.
கார்த்திக்: டு கட்டளை தற்போதய கோப்பு மற்றும் அதன் உட்கோப்புறைகள் எடுத்துக்கிற இடத்தோட அளவை காட்ற கட்டளை. அதுல உனக்கு என்ன வேனும் இப்போ?
மஞ்சரி: இத பயன்டுத்தும் போது நான் ஒரு கோப்புறைல மட்டும் பாக்க நெனக்கிறேன் அன வரமாட்டுதுரா.
கார்த்திக்: இந்த கட்டளைய பயன்படுத்தும் போது -h எனும் தெரிவ (option) ஐ பயன்படுத்திப்பாரு.
மஞ்சரி: பயன்படுத்துனா என்னாகும் ?
கார்த்திக்: பயன்படுத்துனா நாம படிக்கிற மாறி KB, MB GB ல கோப்பு , கோப்புறை அளவை காட்டும். (சரி சரி மேனேஜர் போன் பன்றார் போனவை அப்பறம் பேசுரேன்)
மஞ்சரி: பேசிட்டிருக்கும்போதே கட் பன்றான் என்னச்சி அவனுக்கு என்றபடி கைப்பேசியை தூர வைத்து விட்டு இணையத்தில் தேடுகிறாள்.
இந்த இங்கிலிஷ்ல எல்லாத்துக்கும் எழுதிபுட்றானுவோ நமக்கு ஒன்னும் புரியமாட்டுது. ஐ ஒன்னு மாட்டிகிச்சி மகிழ்ச்சியுடன் –max-depth=n அதிகமாக உட்கோப்புறைக்கு செல்லாமல் மேல்மட்ட கோப்புறைகளை மட்டும் காண பயன்படுத்தவேண்டும் னு போட்டிருக்கு.
n பூச்சியத்திலிருந்து தொடங்குகிறது. பூச்சியம் ஆனது அந்த கோப்புறையை குறிக்கிறது
தொடரியல் :
சில (எ.கா)
hariharan@kaniyam: ~/odoc $ du
hariharan@kaniyam: ~/odoc $ du -h
hariharan@kaniyam: ~/odoc $ du /home/user
hariharan@kaniyam: ~/odoc $ du –max-depth=2
இதுவரை தாங்கள் பொறுமை காத்தமைக்கு நன்றி!
அடுத்த கட்டளையில் சந்திக்கிறேன்.
இவன்.
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com