நாள் 28: find
find : இந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட கோப்புறையிலும் அதனுடைய துணைக்கோப்புறையிலும் இருக்கும் கோப்பினையோ அல்லது கோப்புறையையோ கண்டறிய பயன்படுகிறது.
இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்புறையை கொடுக்கவில்லையெனில் தற்போது பணி புரியும் கோப்புறையினுள் தேடும்.
இந்த கட்டளையை -name தெரிவுடன் பயன்டுத்தலாம்.-name தெரிவு குறிப்பிட கோப்பின் பெயரையோ அல்லது கோப்புறையையோ கொடுத்து தேட பயன்படுகிறது அதில் முழு பெயரையும் நினைவில் இல்லையெனில் பகுதியளவு பெயரை மட்டும் உள்ளீடாக அளித்து தேட முடியும்.
-type எனும் தெரிவை f எனும் மதிப்பை அளித்து பயன்படுத்தும் போது கோப்புகள் மட்டும் தேடும் or கோப்புறை மட்டும் தேடவேண்டும் எனில் -type d தெரிவுடன் d எனும் மதிப்பை அளித்து பயன்படுத்தவேண்டும்.
தொடரியல் :
hariharan@kaniyam : ~/odoc $ find /home/user1
hariharan@kaniyam : ~/odoc $ find /home/user1 -name “file.extension”
hariharan@kaniyam : ~/odoc $ find /home/user1 -type f
hariharan@kaniyam : ~/odoc $ find /home/user1 -type f -name “file.extension”
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com