[தினம்-ஒரு-கட்டளை] sed ஒடைத் திருத்தி

நாள் 25: sed

இந்த கட்டளை stream editor எனும் ஆங்கில வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.இது உரையை நேரடியாகவோ அல்லது கோப்பில் உள்ளவற்றையோ திருத்த பயன்படுகிறது.

தொடரியல் :

hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new’ file.txt
hariharan@kaniyam : ~/odoc sed ‘s/old/new/g’ file.extension
hariharan@kaniyam : ~/odoc sed -i ‘s/old/new’ file.extension
hariharan@kaniyam : ~/odoc  sed ‘s/old/new/g’ file.txt

தெரிவுகள்:

-i எனும் தெரிவு திருத்தப்பட்ட உரையை திரையிடாமல் கோப்பினில் எழுதுகிறது.

s என்பது மாற்றத்தை(substitution) ஐ குறிக்கிறது. இதனை g உடன் பயன்படுத்தும் பொழுது எல்லா இடங்களிலும் மாற்றுகிறது.

d என்பது ஒரு வரியிலிருந்து குறிப்பிட்ட வரிசையில் இருக்கும் எழுத்துகளின் குழுவை நீக்குகிறது.

hariharan@kaniyam : ~/odoc $ sed ‘/characters/d’ file.extension
hariharan@kaniyam : ~/odoc $ sed -i ‘/characters/d’ file.extension

a என்பது ஒரு வரியை எழுத்துக் குழுவின் பின்னர் சேர்க்க பயன்படுகிறது.

hariharan@kaniyam : ~/odoc $ sed ‘/pattern/a line to append’ file.extension
hariharan@kaniyam : ~/odoc $ sed -i ‘/pattern/a line to append’ file.extension

i என்பது ஒரு வரியை எழுத்துக் குழுவின் முன்னர் சேர்க்க பயன்படுகிறது.

hariharan@kaniyam : ~/odoc $ sed ‘/pattern/i line to insert’ file.extension
hariharan@kaniyam : ~/odoc $ sed -i ‘/pattern/i line to insert’ file.extension

நன்றி !

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: