நாள் 16 : wc
wc: இந்த கட்டளை கோப்பாகவோ அல்லது உள்ளீடாகவோ கொடுக்கப்பட்ட சரத்திலிருந்து வரிகளின் எண்ணிக்கை (அ) வார்த்தைகளின் எண்ணிக்கை (அ) எழுத்துக்களின் எண்ணிக்கை (அ) பைட்டுகளின் எண்ணிக்கையை அளிக்கிறது.
தொடரியல் :
hariharan@kaniyam :~/odoc $ wc
மேற்கண்ட கட்டளை வரிகளின் எண்ணிக்கை,வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கையை ஒரு தத்தி (tab) இடைவெளியில் தரும்.
hariharan@kaniyam :~/odoc $ cat “filename” | wc -l
தெரிவுகள்:
உள்ளீடு அளிக்கும் வகையில்
wc -l : வரிகளின் எண்ணிக்கை
wc -w :வார்த்தைகளின் எண்ணிக்கை
wc -m :எழுத்துகளின் எண்ணிக்கை
wc -c : பைட்டுகளின் எண்ணிக்கை
கோப்பு அளிக்கப்படும் வகையில்
wc -l filename
wc -w filename
wc -m filename
wc -c filename
echo ‘hello world’ | wc -m
குறிப்பு : echo வேலைசெய்யவில்லை எனில் , உங்களுக்கான கட்டளை printf போன்ற வேறொன்றாக இருக்ககூடும்.
நன்றி!
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com