நாள் 17: reboot
reboot : இந்தக் கட்டளை கணினியின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள்துவக்கம் செய்ய பயன்படுகிறது.
தொடரியல் :
sudo reboot
தெரிவுகள் :
reboot “[message]” : இந்த கட்டளை கணிணியை மீள்துவக்கம் செய்யும் முன்னர் எதாவது செய்தியை காட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த கட்டளை எல்லா செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும்போது பயன்படும்.
hariaharan@kaniyam:~/odoc $ sudo reboot “message”
–force : கட்டளையை இந்த தெரிவுடன் பயன்படுத்தப்படும்போது reboot போலவே செயல்படுகிறது. அனால் இது கணினியை பொதுவாக இயக்கத்தை நிறுத்தும் போது இயக்கப்படும் எந்த ஒரு நிரற்தொடர்களையும் இயக்காமல் செய்கிறது. இவ்வாறு செய்யப்படும் மீள்தொடக்கம் கணினியின் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தொடக்கம் செய்வதற்கு ஒப்பாகும்.
hariaharan@kaniyam:~/odoc $ sudo reboot –force
நேரமிடப்பட்ட மீள்தொடக்கம் :
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கணினியை மீள்துவக்கம் செய்ய பின்வரும் கட்டளையை பயன்படுத்தலாம்.
hariaharan@kaniyam:~/odoc $ sudo shutdown -r +10
10 மணித்துளிகளில் கணினி மீள்தொடக்கம் செய்வதற்காக என கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி!
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com