பயிலகம் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.” கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல மென்பொருள் வல்லுநராக முடியும் என்ற கேள்வியுடன் தொடங்கியது அந்த உரையாடல்… முன் தினம், சீனிவாசன் அவர்கள் “கட்டற்ற மென்பொருள், பைதான்,… Read More »

தினமொரு தமிழ் சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து மற(றை)ந்த சொற்களையும் தெரியப்படுத்தும் ஒரு முயற்சி. பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள்: Python நிரலாக்க மொழி Back4App Heroku விக்சனரி-யில் இருந்து சொற்களை… Read More »

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது அதிகரித்து கொண்டேவருகின்றது.மேலும் , ஜாவாஎனும் கணினிமொழியைத் தவிர, ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது விளங்குகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு வலுவான நிலையான நிரலாக்க மொழியாகும். இது JetBrains எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது ஜாவா மெய்நிகர் இயந்திரம் சார்ந்த மொழியாகும்.… Read More »

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால்… Read More »

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது… Read More »

அதிகபாதுகாப்பான தனிநபர் இணையஉலாவலுக்கு NextDNS ஐப் பயன்படுத்திகொள்க

NextDNS என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கியசேவையாகும்: இது தீங்கிழைக்கும் வலைத்தளங்கள், விளம்பரங்கள் இருப்பிடத்தின் கண்டுபிடிப்பார்களைத் தடுக்கிறது, நம்முடைய தனியுரிமை மீது முழு கட்டுப்பாட்டையும் தருகிறது, தணிக்கை வழிமுறைகளைத் தவிர்த்து,நம்முடைய கோரிக்கைகளை மிகவும் பாதுகாப்பானதாக்குகிறது, பெற்றோரின் கட்டுப்பாடுகளை இயக்க உதவுகிறது, நிகழ்வுநேர பகுப்பாய்வுகளை வழங்குகிறது, இது பெரும்பாலும் திற மூலபயன்பாடாகும் என்பதே, இன்னும் கூடுதலான, தகவலாகும் இது நம்முடைய தரவுகளைக் கொண்டு நாம் பயன்படுத்திடும் நம்முடைய பயன்பாட்டிற்கு எப்போதும் ஒரு பெரிய கூடுதல் வசதியாக… Read More »

கட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை

இன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி. அதன் பதிவு இங்கே – த.சீனிவாசன்

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 2020

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக… Read More »

உரையுடனான பணிகள் (TeXworks )

இது ஒரு எளிய உரையின் முன்-இறுதி நிரலை (உரைத்தொகுப்பில்பணிசெய்திடும் சூழலை) உருவாக்கு வதற்கான பயன்பாடகும், இது இன்றைய கணினிகளில்இயங்குகின்ற முக்கிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும்திறன்மிக்கது-குறிப்பாக, எம்.எஸ். விண்டோ (7/8 / 8.1 / 10), வழக்கமான அனைத்து குனு / லினக்ஸ் வெளியீடுகள் பிற எக்ஸ் 11 அடிப்படையிலான அமைப்புகள், அதே போன்று மேக் இயக்கமுறைமையின் அனைத்து பதிப்புகள்ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்கது . இது வேண்டுமென்றே Mac OSஇயக்கமுறைக்கான Dick Kochஎனும் விருது பெற்ற மேஜைக்கணினியில்… Read More »