எளிய தமிழில் Computer Vision 5. வண்ண மாதிரிகள் (Color models)

வண்ண மாதிரி என்பது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான வண்ணங்களையும் உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாகும். சேர்க்கை வண்ண மாதிரிகள் (additive color models) மற்றும் கழித்தல் வண்ண மாதிரிகள் (subtractive color models) என்று இரண்டு வெவ்வேறு வண்ண மாதிரிகள் உள்ளன. சேர்க்கை மாதிரிகள் கணினித் திரைகளில் வண்ணங்களைக் குறிக்க ஒளியைப் பயன்படுத்துகின்றன. மாறாக கழித்தல் மாதிரிகள் படங்களை காகிதங்களில் அச்சிட மைகளைப் பயன்படுத்துகின்றன. கணினியில் சிபநீ வண்ண மாதிரி (RGB color model) சேர்க்கை மாதிரிகளில்… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும் பொது வடிவத்தில் எழுதுவோம் அல்லவா! அதாவது முதலில் இரண்டு எண்கள்(தேதிக்கு), பிறகு இரண்டு எண்கள்(மாதத்திற்கு), பிறகு நான்கு எண்கள்(ஆண்டுக்கு) என்பது… Read More »

பைத்தான் ரிஜெக்ஸ் 3 – ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல் கையாளுமா? என்று கேட்டிருந்தார். சிலர் 91 என நாட்டுக்குறியீடு கொடுப்பார்கள். சிலர், சுழி(0) கொடுப்பார்கள். ரிஜெக்சில் இதை எப்படிக் கையாள்வது? 91 அல்லது 0 என்பதை ரிஜெக்ஸ் முறையில் எழுத வேண்டும். (91|0) அவ்வளவு தான்! இங்கே நடுவில் இருக்கும் |… Read More »

போய் வாருங்கள் கோவை ஞானி ஐயா

எழுத்தாளர் கோவை ஞானி நேற்று காலை இயற்கை எய்தினார். நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி எண் இந்த எண்களில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. STD என்று சொல்லப்படும் பகுதிக் குறியீடு, பிறகு தொலைபேசி எண். இந்த… Read More »

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9): if not text[i].isdecimal(): return False if text[0] == ‘0’: return False return True print(‘Is 8344777333… Read More »

ஒலிபீடியா – ஒலிப்புத்தகங்கள் உருவாக்கலாம் வாங்க!

ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே. பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப் புத்தகங்கள் பேருதவியாக இருக்கும். நாமும் ஒலிப்புத்தகங்ளைக் கேட்டு மகிழலாம். தமிழில் அரிய மூலங்கள் பல இருந்தாலும், நாம் அதனை ஆவணப்படுத்துவதில் சற்று தடுமாறுகிறோம்.… Read More »

அனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)

EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு மேம்பாட்டுக் கருவிகள் எதையும் கற்றுக்கொள்ளாமலேயே எளிதாக , ஜாவாஎனும் கணினிமொழியைக் கற்றுக்கொள்ள உதவிடும் மிகவும் எளிமையான மிகச்சரியானகருவியாகும். இந்த EJE என்பது பல தளங்கள் (ஜாவாவில் எழுதப் பட்டுள்ளது), குறைந்த எடை, பயனாளர் நட்பு என்பன போன்ற பல்வேறு பயனுள்ள அடிப்படை வசதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. நம்முடைய… Read More »

கணியம் அறக்கட்டளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன் 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் விக்கிமூலம் தொடர் தொகுப்பு நிகழ்வு/ Spell4Wiki ஆன்டிராய்டு செயலி… Read More »

எளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்

படத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary Image). கருப்பு வெள்ளை அல்லது இருமப் படங்கள்  நாம் பொதுவழக்கில் கருப்பு வெள்ளைப் படங்கள் என்று சொல்பவை தொழில்நுட்ப ரீதியாக… Read More »