Ex-OR கதவு| நான் கொஞ்சம் வேற ரகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 42

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். லாஜிக் கதவுகளின் வகைகளில் இன்று நாம் கடைசியாக பார்க்க விருப்பது Ex-OR கதவு. லாஜிக் கதவுகளிலேயே பலரையும் குழப்பக்கூடிய, ஒரு வகையிலான கதவாக இந்த EX-OR கதவு இருக்கிறது. IC7486 எனும் உள்ளார்ந்த மின்சுற்றே இந்த கதவிற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கதவு ஒரே விதமான உள்ளீடுகளை அனுமதிப்பதில்லை. வெவ்வேறான உள்ளீடுகள் வழங்கப்படும் போது மட்டுமே வெளியீடை வழங்குகிறது. கேட்பதற்கே சற்று வினோதமாக இருக்கலாம். அடிப்படையில் லாஜிக்கல்… Read More »

புகைப்பட வேலைகள் அனைத்தையும் பார்க்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் 13

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் வரிசையில் பல்வேறு சுவாரசியமான சேவைகள் குறித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பல நண்பர்களும் விருப்பப்பட்டு கேட்கக்கூடிய செயலி என்னவென்றால், சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்கள் என தங்கள் மொபைல் போனில் நிரம்பி வழியும் புகைப்படங்களில் விதவிதமாக edit செய்து பார்ப்பதற்கு ஏதாவது சிறந்த கட்டற்ற செயலி இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியை நான் பலமுறை கடந்து வந்து விட்டேன். ஒரு சில கட்டற்ற செயலிகளை நான் பயன்படுத்தியும் பார்த்தேன்.ஆனால் அவற்றின் செயல்… Read More »

USB cable க்குள் என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 41

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது… Read More »

எளிய தமிழில் Generative AI – 3

Gradient Descent இதன் cost மதிப்பு infinity என்பதால், இதைக் குறைப்பதற்கு ஒன்றுமில்லை, இருந்தாலும் gradient descent முறையில் சரியான பெராமீட்டர்ஸ் கண்டுபிடிக்கலாம். லீனியர் ரெக்ரேஷனில் ஒரு குறிப்பிட்ட error மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும்போது, அதற்கான வரைபடமானது கின்னம் போன்று குவிந்த நிலையில் அமையும். இந்நிலைக்கு convex என்று பெயர். ஆகவே அக்குவிநிலையின் அடிப்பாகமே குளோபல் ஆப்டிமம் ஆகும். ஆனால் லாஜிஸ்டிக் ரெக்ரேஷனில் error மதிப்பு 0,1 0,1 என ஏறியிறங்கி ஏறியிறங்கி… Read More »

நம்முடைய சொந்த செய்யறிவை(AI) நாமேஉருவாக்குதல் -பகுதி 1:- செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும் ஒருஅறிமுகம்

தற்போது செய்யறிவு(AI), இயந்திர கற்றல்(ML) ஆகியவை நம்முடைய வாழ்வையே உருமாற்றுகின்ற தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன, இவை சுகாதாரப் பராமரிப்பு முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து தொழில்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சுய-ஓட்டுநர் மகிழ்வுந்துகளை இயக்குவது, பரிந்துரை அமைப்புகளை இயக்குவது அல்லது சிறந்த மெய்நிகர் உதவியாளர்களை வழங்குவது என எதுவாக இருந்தாலும், செய்யறிவும்(AI) இயந்திர கற்றலும்எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. இந்த கட்டுரையானது அவைகளின் கருத்தமைவுகளில் தெளிவை வழங்குவதையும், நம்முடைய சொந்த செய்யறிவு(AI), அமைப்புகளை உருவாக்குவதற்கான நம்முடைய பயணத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும்… Read More »

சில்லுவின் கதை 13. எல்லாம் நாமே தயாரிக்க வேண்டியதில்லை எனும் வெற்றிக் கொள்கை

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) முதன்முதலில் காண்புறு (visible) ஒளியைப் பயன்படுத்தினர் 0:00 ஒளி அரித்தல் (Photolithography) என்பது அடிப்படையில் ஒளியைக் கொண்டு ஒரு சமதளத்தில் தேவையான வடிவமைப்பை அரித்து எடுத்தல் (etching). இதை எளிமையாகப் பார்க்கும்போது, ஒளியை ஒரு கத்தியைப் போல் பயன்படுத்தி வெட்டி எடுக்கிறோம் என்றும் சொல்லலாம். சிலிக்கான் வில்லைப் பரப்பில் ஒளியைப் பயன்படுத்தி… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

கணினி சுட்டி எப்படி வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 40

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக சமீபத்தில் தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஆனால் இந்த தொடுதிரை(Touch screen)தொழில்நுட்பமானது, இன்றளவும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. அடிப்படையில் தொடுதிரை என்பது விலை உயர்ந்தது மற்றும் எளிதில் சேதம் அடையக் கூடியது. கணினி மற்றும் தொலைக்காட்சி பற்றி போன்றவற்றிற்கு தொடுதிரைகள் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. தற்காலத்தில் வெளியாக கூடிய, கணினி திரைகளில்(Monitors amd displays)கூட பெரும்பாலும்,… Read More »

எளிய தமிழில் Generative AI – 2

Polynomial Features லீனியர் அல்காரிதம் போடும் கோடு, ஒரிஜினல் டேட்டாவுக்கு மத்தியில் இல்லாமல், எங்கோ ஒரு ஓரமாகக் காணப்படின் underfitting என்று பெயர். அந்த ஓரத்தில் உள்ள டேட்டாவை மட்டும் அல்காரிதம் cover செய்கிறது என்று அர்த்தம். டேட்டா Non-linear ஆக இருப்பின் இவ்வாறு அமைந்துவிடும். இது போன்ற சமயங்களில் அல்காரிதம் உருவாக்கும் கோடு, நேர்கோடாக இல்லாமல் வளைந்து நெளிந்து அனைத்து மூலைகளில் உள்ள டேட்டாவையும் கவர் செய்யுமாறு அமைப்பதற்கு polynomial Regression என்று பெயர். அன்டர்ஃபிட்டிங் … Read More »

குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில்… Read More »