GDB book part2
Topic : GDB book part2 Name : Annamalai
Topic : GDB book part2 Name : Annamalai
எப்போதாவது, செய்யறிவு(AI) பற்றி அறிய விரும்புகின்றோமா, ஆனால் எங்கு தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? கவலையேப்பட வேண்டாம் – நம்மைபோன்ற பலர் இந்த செய்யறிவு(AI) கருவிகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எங்கு,எவ்வாறு தொடங்குவது என்பதுதான் தெரியவில்லை. இந்த வழிகாட்டியில் குறிப்பிடுகின்ற ஐந்து பயனுள்ள திறமூலக்கருவிகளை பயன்படுத்தி செய்யறிவை(AI) கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளம் செய்திடுக ஏன் திறமூலபயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்? நாம் முதன்முதல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது குறித்து சிந்தித்திடுக அதற்காக. பைக்குகளைப் பற்றிய புத்தகத்தைப்… Read More »
சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது 0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக… Read More »
என்னதான் விதவிதமாக ஸ்மார்ட் கடிகாரங்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் என வந்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஜப்பான்காரன் அறிமுகப்படுத்திய குவார்ட்ஸ்(Quartz) கடிகாரங்களுக்கு மதிப்பு குறைவதில்லை. இந்த கடிகாரத்தில் இருந்து வரும் டிக்,டிக் சத்தத்திற்காகவே, இதை வாங்கி கைகளிலும் வீட்டின் சுவரிலும் மாட்டிக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் நாடெங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த குவார்ட்ஸ் கடிகாரம் எப்படி தான் வேலை செய்கிறது? எளிமையாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இதற்கு முன்பாக என்னுடைய இன்னபிற எளிய எலக்ட்ரானிக்ஸ்… Read More »
கடந்த வாரம் லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரைக்கு விடுமுறை விட்டு விட்டேன். எங்கே இந்த தொடரை இப்படியே கைவிட்டு விடுவேனோ? என எனக்குள்ளேயே சந்தேகம் கிளம்பிவிட்டது. அதற்காகத்தான் வேகவேகமாக NOTகதவு குறித்து கட்டுரை எழுதுவதற்கு என்று வந்திருக்கிறேன். கடந்த இரண்டு லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND மற்றும் OR கதவுகள் குறித்து பார்த்திருந்தோம். NOT கதவு என்றால் என்ன? அது தொடர்பாகத்தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஆங்கில வார்த்தையான NOTஎன்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேறு… Read More »
Ruby on Rails Series Contd. – Boopalan S
எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு வகையிலான தலைப்புகள் குறித்து பார்த்திருக்கிறோம். கடந்த சில வாரங்களாக லாஜிக் கதவுகள் குறித்த தொடர் ஒன்றை தொடங்கியிருந்தேன். வாரந்தோறும் லாஜிக் கதவுகளையே எழுதி சற்றே சோர்ந்து போய் விட்டேன். இந்த முறை சற்று மாற்றாக இருக்கட்டும் என்று, led பல்புக்குள் எத்தகைய எலக்ட்ரானிக்ஸ் பொதிந்து இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதற்காக லாஜிக் கதவுகள் தொடர் இத்தோடு முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் ! வரும் நாட்களில் லாஜிக் கதவுகள் தொடர்பாகவும்… Read More »
தற்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வகையிலான வசதிகளுடன் சமீபத்திய சாதனங்களைக் காண்பிக்கின்ற மடிக்கணினி உற்பத்தியாளர்களின் மிகஅதிக அளவிலான விளம்பரங்களின் வெள்ளத்தை காணலாம். அவ்வாறான விளம்பரங்களின் வாயிலாக நமக்கு சிறந்த காட்சி, அதிக சேமிப்பு ,பல்வேறு மென்பொருள் துணை நிரல்கள் தேவை என மிகைப்படுத்தலில் நம்பி நம்மை சிக்கவைப்பது மிகஎளிது. ஆனால் அவையனைத்தும் உண்மையாகவே இருக்கட்டும்: மின்னஞ்சல்களைச் சரிபார்க்கவும், இணையத்தில் உலாவரவும், புதிய ஆவணங்கள் விளக்கக்காட்சிகளை உருவாக்கவும் நம்மில் பெரும்பாலோனருக்கு அவ்வாறான மிகையான வசதிகளுடனான மடிக்கணினி தேவையேயில்லை. அவ்வாறான… Read More »
சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப்… Read More »
அனைவருக்கும் வணக்கம்! கடந்த இரு ஆண்டுகளாக எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்று வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த ஆண்டு கருத்தரங்கு நேரடியாகவும் மெய்நிகராகவும் (hybrid), எதிர்வரும் சனவரி 25, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும். அன்று தமிழ் தொடர்பான ஆவணப்படுத்தல், நூலகவியல், ஆவணகவியல், தமிழியல் உட்பட்ட துறைகளில் இங்கு செயற்படுபவர்கள் நேரடியாக சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். பேராசிரியர் வில்சன் அவர்களின் ஆவணக்… Read More »