PlantUML எனும் கட்டற்றகருவி

PlantUml என்பது ஒரு எளிய உரை விளக்க மொழியைப் பயன்படுத்தி ஒரு சில UML வரைபடத்தை விரைவாக உருவாக்க அனுமதிக்கின்ற ஒரு திறமூல கருவியாகும். இது எளிய மனிதர்களால் படிக்கக்கூடிய உரை விளக்கத்தை மட்டுமே பயன்படுத்தி UML வரைபடங்களை வரைய உதவுகின்றது. இதில் வரைபடத்தினை வரையும்போது மிககவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் சீரற்ற வரைபடங்களை வரைவதிலிருந்து இது நம்மைத் தடுக்காது (எடுத்துக்காட்டாக, இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று மரபுரிமையாகக் கொண்டிருப்பது போன்றவை). எனவே இது ஒரு மாதிரி கருவியை விட… Read More »

eXp OSஎனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

eXp OS என சுருக்கமாக அழைக்கப்பெறும் செயல்முறையிலான இயக்க முறைமை (eXperimental Operating System) என்பது இணைய வாயிலான நேரடி கல்வி தளமாகும், இது ஒரு சிறிய பல்லடுக்கு நிரலாக்க இயக்க முறைமையாகும் . , இது ஒரு புதிய இளங்கலை கணினி அறிவியல் மாணவனை ஒரு சில மாதங்களில் புதிய இயக்கமுறைமை ஒன்றினை உருவாக்கி செயல்படுத்தி பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கிறது, அதாவது இது புதிய இளங்கலை மாணவர்களுக்கு ஒரு இயக்க முறைமைஎவ்வாறு செயல்படுகின்றது என நேரடியாக… Read More »

எளிய தமிழில் IoT 18. சரக்கு மேலாண்மை (Inventory Management)

சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி சரக்கு மேலாண்மை மென்பொருட்களில் உள்ளீடு செய்வதை எளிதாக்கலாம். தொழிற்சாலையில் சரக்கு வகைகள் தொழிற்சாலைக்குள் இருக்கும் சரக்குகள் கீழ்க்கண்ட விதங்களில்… Read More »

யூடியூப் “செயலி”யை மூடிய பிறகும் கேட்பது, விளம்பரம் இல்லாமல் கேட்பது எப்படி?

யூடியூப் தான் இன்றைய நிலையில் இரண்டாவது மிகப் பெரிய தேடுதல் பொறி. சமையலில் தொடங்கி, படம் வரைவது, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று யூடியூபைப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் யூடியூப் செயலியை அலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. யூடியூப் தளத்தைக் கணினியில் பார்க்கும் போது நாம் வேறு தத்தல்(Tab)களில் வேறு வேலைகள் பார்க்கலாம். யூடியூபைச் சுருக்கி(minimize) வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் யூடியூப் செயலியில் செய்யவே முடியாது. யூடியூபைத்… Read More »

விக்கிமூலம் : பழைய தமிழ் புத்தகங்களுக்கு புது வடிவம் – தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம் ? தங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதா ? அப்படி இல்லையென்றாலும் இக்காலகட்டத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.… Read More »

அருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது

அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என கவலைப்பட வேண்டாம்; அதற்கான தீர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக நாம் அனைவரும் 2G / 3G இலிருந்து Wi-Fi எனும் அருகலைக்கு மேம்படுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சினையும் உடன்துவங்கிவிட்டது. .தனிப்பட்ட கைபேசியில் 2 ஜி / 3 ஜி இணைப்பைக் காட்டிலும் அருகலை அதிக செலவு குறைந்ததாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரேயொருஅருகலை மோடத்தில் 32 சாதனங்கள்வரை நாம் இணைத்து பயன்டுத்திகொள்ள முடியும், அவ்வாறு இணைத்த பின்னரும்… Read More »

எளிய தமிழில் IoT 17. வானலை அடையாளம் (RFID)

நீங்கள் பெரிய வணிக வளாகங்களிலோ அல்லது மற்ற பெரிய கடைகளிலோ ஒரு ஆடையை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது பீப் ஒலி கேட்கலாம். திரும்பவும் கடைக்குள் சென்று ஆடையை சோதனை செய்தால் அதில் மாட்டியுள்ள ஒரு சாதனத்தை நீங்கள் வாங்கும் போது எடுக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரியவரும். அதுதான் வானலை அடையாளம். அருகில் வந்தால் கதவுக்கு இரண்டு பக்கமும் வைத்துள்ள அலைவாங்கிகள் உணர்ந்து ஒலியெழுப்பும். வானலை அடையாளத்தில் இரு வகைகள்  இந்த வானலை அடையாளத்தில் இரு வகைகள் உண்டு.… Read More »

BlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

BlissRoms என்பது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டற்ற இயக்கமுறைமையாகும் ,இதுஅப்பாச்சி உரிமம் V2.0, குனு பொது உரிமம் 3.0 (GPLv3) ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இது பல தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் உள்ளடக்கியது. நம்முடைய எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான ROM/OS வழங்குவதிலும், எல்லா தளங்களிலும் ஒத்திசைவாக செயல்படுவதன் மூலம் தனிப் பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதிலும் இது முக்கிய கவணம் செலுத்துகின்றது. எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும்… Read More »

இணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு

தனிப்பட்டமுறையில் திறமூல இணைய உலாவல் அனுபவத்தை பெறுவதற்கு  Brave எனும் கட்டற்ற இணைய உலாவி பயன்பாடு பேருதவியாய் விளங்குகின்றது. இது விண்டோ, மேக் லினக்ஸ், ஆண்ட்ராய்டு, iOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. கூகிளின் திறமூல குரோம் செயல்திட்டத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட, Bweb உலாவி என்பது வலைத்தள கண்காணிப்பாளர்களை தானாக முடக்குவதன் மூலமும், தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலமும் நம்முடைய இணைய உலாவல் செயல்பாட்டை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைவிட மேலும்… Read More »

எளிய தமிழில் IoT 16. பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code)

மேலை நாடுகளில் சமீபத்தில் செய்த ஆய்வின்படி மூன்றில் ஒரு நிறுவனத்தில் தான் சரக்கு மேலாண்மை (Inventory Management) மென்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்தது. நம் நாட்டில் குறு, சிறு நிறுவனங்களில் இந்த விழுக்காடு இன்னும் குறைவாகத்தான் இருக்கும். மற்றவர்கள் காகிதப்பதிவேடு அல்லது விரிதாளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இம்முறையில் வேலை மெனக்கெடு அதிகம் மட்டுமல்லாமல் தரவுகள் சரியாக இல்லாததால் பிரச்சினைகள் பல வரக்கூடும். தேவையான பாகங்கள் தட்டுப்பாடாக ஆகிவிடலாம், மாறாக தேவையற்ற பாகங்கள் அதிக அளவில் பண்டகத்தில் வீணாக இருக்கலாம். … Read More »