விக்கிமூலம் மெய்ப்புபார்க்கும் தொடர் நிகழ்வு – 2020 – முதல் அனுபவம்

விக்கிமூலம் – இது ஒரு “பதிப்புரிமையில்லா” விக்கிநூலகத் திட்டமாகும். இதில் நா. வானமாமலை, பண்டிதர் க. அயோத்திதாசர், தொ. மு. சி. ரகுநாதன் உட்பட தமிழின் 91 ஆசிரியர்களின், 2217 நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மின்னூல் வடிவிலும், PDF, Doc வடிவிலும் கிடைக்கும். விக்கிபீடியா-வை போல, விக்கிமூலமும் பல்வேறு மொழிகளிலும் உள்ளது. மே மாதம் 1ஆம் தேதி முதல், 10ஆம் தேதிவரை இந்திய மொழிகளுக்கான மெய்ப்புபார்க்கும்(Proofread) தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில் அசாமி, பெங்காலி, குஜராதி, தமிழ் உட்பட… Read More »

Spell4Wiki – விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…

கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு மற்றும் விக்கிப் பொதுவகத்திற்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்குவதில் பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான… Read More »

CudaText எனும் பயன்பாடு

CudaText என்பது Lazarus இல் எழுதப்பட்ட ஒரு குறுக்கு-தள உரை பதிப்பாளர் பயன்பாடாகும். இது ஒரு திற மூல செயல்திட்டமாகும். இது தன்னுடைய இயக்கத்தினை மிக வேகமாகத் துவங்குகின்றது (CPU 0.3 நொடி ~ 30 செருகுநிரல்களுடன், லினக்ஸில் CPU இன்டெல் கோர் i3 3Hz இல்). இது பைதான் துணை நிரல்களான செருகுநிரல்கள், linters, குறியீடு மர பாகுபடுத்திகள், வெளிப்புற கருவிகள் ஆகியவற்றால் விரிவாக்கம் செய்யக்கூடியதாகும் . இது தொடரியல் பாகுபடுத்தி வசதி நிறைந்ததாகும், இது… Read More »

எளிய தமிழில் IoT 21. சீரொளி (Laser) உணரிகள்

தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது கீழ்க்கண்ட அம்சங்களை அளவிட சீரொளி உணரிகளைப் பயன்படுத்தலாம்: உளது அல்லது இருப்பது (presence) இடப்பெயர்ச்சி (displacement) தூரம் (distance) இருப்பிடம் (position) தடிப்பளவு (thickness)  ஒரு பொருள் இருப்பதையும் (presence) இல்லாததையும் (absence) கண்டறிதல் குறைந்த தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டறியக்கூடிய அருகாமை உணரிகளைப் (inductive proximity sensors) பயன்படுத்தலாம். ஒளிமின்னழுத்த (Photoelectric) உணரிகள் ஒரு பொருள் இருப்பது அல்லது இல்லாததைக் கண்டறிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கண்ணாடி அல்லது நெகிழி (plastic)… Read More »

அதிநவீன அறிவியல் ஆய்விற்கு உதவும் BOINC எனும் கையடக்கபயன்பாடு

பொதுவாக நாம் அனைவரும் பயன்படுத்தி வருகின்ற கணினியில் செயல்படும் திறன்கொண்ட அதிநவீன அறிவியல் ஆய்விற்கு உதவுகின்ற கையடக்க BOINC 7.16.5 Rev 2 எனும் பயன்பாடானது தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப் பட்டுள்ளது. இந்த கையடக்க BOINC என்பது ஒரு சிறிய பயன்பாடாக தொகுக்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட கணினி செயல் திட்டமாகும்,, எனவே நம்முடைய பயணத்தின் போது அல்லது நிர்வாக உரிமைகள் இல்லாமல் எந்தவொரு கணினியிலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இது PortableApps.com எனும் வலைதளத்தின் வழிகாட்டுதலின்படி… Read More »

எளிய தமிழில் IoT 20. பழுதடைவதை முன்னறிந்து பராமரித்தல் (Predictive maintenance)

பழுதடைந்தவுடன் பராமரித்தல் (Breakdown Maintenance) தொழிற்சாலைகளில் சிலநேரங்களில் எந்திரங்களின் மின்பொறி (electric motor) அளவுக்கு மேல் சூடாகி எரிந்து போய் விடுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதிக செலவு செய்து செப்புக்கம்பியை மீள்சுற்று (rewinding) செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. உறுதி கூறிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க இயலாமல் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரலாம். இதைத் தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று பார்க்கலாம். பழுதடைவதைத் தவிர்க்கப் பராமரித்தல் (Preventive Maintenance) கவனமாக மேலாண்மை செய்யும் நிறுவனங்கள்… Read More »

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும். யார் யார் படிக்கலாம்? பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம் நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?… Read More »

Q4OS

Q4OS என்பது ஒரு பாரம்பரிய மேஜைக்கணினி பயனாளர் இடைமுகத்தை வழங்குகின்ற தற்போதைய சூழலில் சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவிரைவான சக்திவாய்ந்த தொரு இயக்க முறைமையாகும். மிகமுக்கியமாக சரிபார்க்கப்பட்ட புதிய வசதி வாய்ப்புகளைகொண்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நீண்டகால நிலைத்தன்மை பழமைவாத ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்த இயக்க முறைமையானது அதிக கவனம் செலுத்துகின்றது. இது கணினியில் செயல்படும் வேகம் , செயல்படுவதற்கான மிகக் குறைந்த வன்பொருள் தேவை ஆகியவற்றால் மற்ற இயக்கமுறைமைகளிலிருந்து முற்றிலும் இது வேறுபடுகின்றது, புத்தம் புதிய… Read More »

எளிய தமிழில் IoT 19. நிறுவனத்தின் சொத்துக்கள் மேலாண்மை

சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி மேலும் வாங்குவது? கைக்கருவிகளை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது? நாம் சரக்கு மேலாண்மையில் பார்த்ததுபோல… Read More »

தமிழ் IRC – மே 2, 2020 சந்திப்பு – 8-9 PM IST – #tamilirc – irc.freenode.net

தமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9  (8 PM IST) நடைபெறும். கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம். அனைவரும் வாருங்கள். webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள். Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள். Channels என்பதில் #tamilirc என்று… Read More »

Category: irc