FOSSWeeks’20 – வாரம் 2: தமிழ் விக்கிப்பீடியா வெபினார்

இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா  திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.   #FOSSWeeks என்றால் என்ன ?   #FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை  அதிகரிக்கும் முயற்சியாகும். இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள் மற்றும் FOSS பங்களிப்பாளர்களை கொண்டு உங்களுக்கு பல்வேறு திறந்த… Read More »

ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும். 1) ஜாவா – மொழி அடிப்படைகள் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCfsFtL526RNHQ8a8p2-2m1V 2) ஜாவா – எக்செப்ஷன் ஹேண்ட்லிங் – www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCcqkxnlN0msmmFATnDEDCKM 3)… Read More »

பல Git கணக்குளை ஒரே கணினியிலிருந்து இயக்குதல் ! 

அன்புடையீர் வணக்கம் இந்த பதிவில் நாம் நிரலாக்கர்களின் இரண்டு பொதுவான செயல்பாடுகளை தானியங்க வைப்போம். நம்மிடம் பல Git கணக்குகள் இருக்கும் நிலையில் ஒரே கணினியில் இருந்து, 1. பயனர்பெயர், கடவுச்சொல் உள்ளீடு தானகவே நடத்தும்படி இயக்குவது. 2. பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி repository கு ஏற்றவாறு அமைத்தல் நிரலாக்கர்கள் தன்னுடைய தினம்தோறும் கடமையில் Version Control System யில், அன்றைய தினத்தின் நிரல் புதுப்பிப்புகளை புதுப்பிப்பார்கள். Github , Gitlab , Bitbucket… Read More »

gretl எனும் பயன்பாடு ஒருஅறிமுகம்

gretl என சுருக்கமாக அழைக்கப்படும் குனு பின்னடைவு, பொருளாதார அளவியல் கால-தொடர்களின் நூலகம் (Gnu Regression, Econometrics and Time-series Library)என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பொருளாதார அளவீட்டு பகுப்பாய்விற்கான ஒரு குறுக்கு-தள பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு ஆகும். இது இலவசமென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தொரு இலவச, திற மூல பயன்பாட்டு மென்பொருளாகும் . இது குனு பொது மக்களின்பொது உரிமத்தின் (GPL) அனுமதி விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் அல்லது… Read More »

எளிய தமிழில் IoT 15. தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

சந்தையில் போட்டிபோட்டு விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாகம் தரக்குறைவாக இருந்து உடைந்து விட்டால் இலவசமாக மாற்றிக் கொடுக்க (warranty claims) வேண்டிவரும். மேலும், தொழிற்சாலையிலேயே பாகங்கள் தரக்கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்டால் (rejection) அல்லது மறுசெயற்பாட்டுக்கு (rework) அனுப்ப வேண்டி வந்தால் வீண் செலவுதானே. இம்மாதிரி நிராகரிப்புகள், மறுசெயல்பாடுகள் மற்றும் உத்தரவாத காலத்தில் இலவசமாக மாற்றிக் கொடுத்தல் ஆகியவற்றைக் குறைக்க நாம் நிலையான தரத்தில் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை மேம்பாடு செய்து கொண்டே இருக்க… Read More »

ஜிட்சி – வீடியோ கான்பிரன்சிங் – இலவச கட்டற்ற மென்பொருள்

ஜிப்சி – இராஜூ முருகன் இயக்கத்தில் அண்மையில் வெளி வந்த படம். படத்தின் நாயகன் ஊர் ஊராக நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அதனால் ஜிப்சி என்று பெயர் வைத்திருப்பார் இராஜூ முருகன். கொரோனா சூழ் இன்றைய சூழலில் யாராலும் ஜிப்சியாகத் திரிய முடியாது. ஒன்றிய அரசின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு – ஊரையே உள்ளே அடக்கியிருக்கிறது. ஜிப்சியாகத் திரிந்த பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் வீட்டில் இருந்த… Read More »

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன. ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள் கணினி அறிவியலைக் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் மாபெரும் உதவியாளராக விளங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது… Read More »

எளிய தமிழில் IoT 14. சோதனைகள் செய்யத் திறந்த வன்பொருட்கள்

நாம் முழுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் குறைந்த செலவில் கருத்துருவை நிரூபிக்க (proof-of-concept) முடிந்தால் நல்லது. இதற்கு வன்பொருட்கள் குறைந்த விலையில் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மன்றங்களில் நாம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்குத் தோதான சில திறந்த வன்பொருட்களைக் (open hardware) கீழே பார்ப்போம். அர்டுயினோ (Arduino) நுண்செயலி கூடிய அம்சங்கள் இல்லாமல்… Read More »

COVID-19 எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல்திட்டங்கள்

தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா நச்சுயிரைஎதிர்த்துபோராடுவதற்காகபின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன . Opentrons இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய அமைப்புகளுடன் அதன் தயாரிப்புகள் வியத்தகு அளவில் COVID-19 பரிசோதனைக்கு உதவக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. வருகின்ற ஜூலை 2020 இற்குள் 1 மில்லியன்… Read More »

எளிய தமிழில் IoT – 13. இயங்குதளங்கள் (Operating systems – OS)

IoT சாதனங்கள் வளங்கள் குறைந்த சாதனங்கள் (resource Constrained devices) என்று முன்னரே பார்த்தோம். நாம் கணினிகளில் பயன்படுத்தும் இயங்குதளங்கள் வளங்களை மிக தாராளமாகவே பயன்படுத்துபவை. கொஞ்சம் பழைய கணினிகளில் புது வெளியீடு இயங்குதளங்கள் திணறுவதை நாம் பார்க்கிறோம். கணிப்பியின் வேகம் மற்றும் நினைவகத்தின் அளவு அவற்றுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே IoT சாதனங்களில் இவற்றைப் பயன்படுத்த முடியாது. வேறு சிறிய, சிக்கனமான இயங்குதளங்கள் தேவை. IoT இயங்குதளங்களுக்கு முக்கிய அம்சங்கள்  ஆகவே, IoT சாதனங்களில் ஓடக்கூடிய… Read More »