ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக WT:Social எனும் சமுதாயவலைபின்னல்ஒரு அறிமுகம்

பொதுவாக போலி செய்திகளாலும் பிற விளம்பர நிதியுதவிகளாலும் தற்போதுநாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற சமுதாய வலைதளங்களில் குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் எழுச்சியுறுகின்றன அதனால் பெரும்பாலும் விளம்பரத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஃபேஸ்புக் போன்ற மிகவும் பிரபலமான சமூக வலைதளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சமுதாய வலைதளங்கள் அனைத்திலும் செயல்படுகின்ற குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் முற்றிலும் விளம்பர ஆரதவுடன் மட்டுமே இயங்குகின்றன அதாவது பயனாளர்கள் அந்த தளங்களில் விரியும் விளம்பரங்களை சொடுக்குவதன் வாயிலாக அவையனைத்தும் தேவையான அளவிற்கு போதுமானவருவாயை ஈட்டிடுகின்றன இதனை… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். நாம் ஒரு பாகத்தை CNC இயந்திரத்தில் வெட்டித் தயாரிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்கு G… Read More »

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது. ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன்… Read More »

மதுரையில் விக்கிப்பீடியா நிகழ்வு – நவம்பர் 30 2019

வணக்கம், இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு மதுரையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில்… Read More »

மதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை – டிசம்பர் 01, 2019

இடம்: குகன் பள்ளி ( goo.gl/maps/aaoYyw9eokQVggWU6 ) 3 வது மாடி ஐ.சி.டி அறை தெப்பக்குளம், ( தோரணை வாயில்நிறுத்தம் ) மீனாட்சி நகர், (அடைக்கலம் பிள்ளை காலனி) மதுரை-625009. தொடர்புக்கு – சிவா – 7010328830 நாள்: டிசம்பர் 01, 2019 ஞாயிறு காலை 10.00 முதல் 14.30(2.30 PM) வரை   அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். FreeTamilEbooks.comRead More »

இயந்திர கற்றல் பொறியாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய இரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு செயலையும் தொட்டுவிட்டன. அதாவது சிரி , அலெக்சா போன்ற குரலொலி வாயிலாக செயல்படுத்தப்பட்ட மெய்நிகர் உதவியாளர்களாகவும் அல்லது வாடிக்கையாளர்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள நெட்ஃபிக்ஸ் அமேசான் போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் முன்கணிப்பு தொழில்நுட்பங்களாகவும். நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன முன்பு.செயற்கை நுண்ணறிவானது கணினியில் மனித நுண்ணறிவு , இயந்திர கற்றல் ஆகியன தேவைப்படும் பணிகளைமட்டும் செய்ய வைப்பதற்காக பயன்பட்டது, இது இயந்திரங்களுக்கான… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை உருவாக்குவதற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கின்றன. அதன் பின்னர்தான் அந்த கருத்துருவை மேம்பாடு செய்து செயல்முறைக்குக் கொண்டுவர ஒரு குழுவை அமைக்கவும்… Read More »

Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு

வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு ஆனது. இந்த நிரல் தொகுப்பு முற்றிலும் திறமூல MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது. இதனை கொண்டு நீங்கள் பைத்தான் கணினி மொழியில் தமிழ் மொழி ஆய்வுகளை செயல்படுத்தலாம். உதாரணமாக இரண்டு திறமூல சேவைகள்/செயல்பாடுகள் (அதாவது எழில், தமிழ்சந்தி மற்றும் தமிழ்பேசு-வலை என்பவற்றை தவிற்த்து [எங்கள் குழுவினர் அல்லாதவர்]) பயன்பாட்டில் பொதுவெளியில் உள்ளது தெரியவந்தது-  1) பைதமிழ் என்ற (அவலோகிதம் போல) வேண்பா திரிப்பு நிரல்… Read More »

Ethereum – ஒரு அறிமுகம்

Ethereum என்பது, சங்கிலிதொகுப்பின் அடிப்படையிலான விநியோகிக்கப்பட்ட ஒரு திற மூல பொது கணினி த்தளமாகும் மேலும் இது திறனுடைய ஒப்பந்தங்களை செயல்படுத்திடும் ஒரு இயக்க முறைமையாகவும் விளங்குகின்றது. ஈதர் என்பது ஒரு டோக்கனாகும், இந்த டோக்கனானது பிளாக்செயின் எத்தேரியம் இயங்குதளத்தால் உருவாக்கப்படுகிறது. இருவேறு நபர்களின் கணக்குகளுக்கு இடையில் ஈதரை மாற்றலாம் மேலும் நிகழ்த்தப்பட்ட கணக்கீடுகளுக்கு பங்கேற்பாளர் சுரங்க முனைமங்களை ஈடுசெய்ய பயன்படுத்தலாம். Ethereum ஆனது EVM எனும் ஒரு பரவலாக்கப்பட்ட மெய்நிகர் இயந்திரத்தை (Ethereum Virtual Machine… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 17. சிறுகூறு பகுப்பாய்வு (Finite Element Analysis – FEA)

ஒரு பளு ஏற்றிய பாகத்தில் தகைவு (stress) மற்றும் அதன் விளைவுகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அல்லது ஒரு பாகத்தை ஓரிடத்தில் சூடாக்கும் போது அதன் வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை (temperature) எவ்வாறு மாறுபடும் என்று பகுப்பாய்வு செய்ய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம்.  இவற்றை முழுமையான, சிக்கலான வடிவங்களாக இல்லாமல் எளிய சிறு கூறுகளாகப் பிரித்துப் பகுப்பாய்வு செய்வது ஆகக்கூடியது. இந்த பாகத்தை நாம் கருத்தியல்படி சிறு கூறுகளாகப் பிரித்துக் கொள்வோம். இந்த… Read More »