விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – தொடக்க விழா – நிகழ்வுக் குறிப்புகள்

கல்விக்கு மறுபெயர் காசு என்கிற மோசமான நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கோம்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை பலர் உணராமல் மக்களுக்கு இன்றும் கல்வியை எட்டா கனியாக மாற்றி வருகின்றனர். கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில்… Read More »

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம்   சுருக்கமாக –   1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal இப்போது, கணினியில் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் வகையில் புது வலைத்தளத்தை வெளியிட்டுள்ளோம். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இம்முயற்சியில்… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 1. கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி

நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு புது மாதிரியான மின்சார ஆட்டுக்கல் என்ற தோசை மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கும் யோசனை வருகிறது. அதை நன்கு பகுப்பாய்வு செய்து உங்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு காட்சிப் படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் உங்கள் யோசனை பிடித்து விட்டது. இந்தத் தயாரிப்பை சந்தையில் நன்றாக விற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். உங்கள் திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்படி உற்பத்திப் பொருள்… Read More »

துவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு-1 ‘

(ML) என சுருக்கமாக அழைக்கப்பெறும் இயந்திர கற்றல் ( Machine learning ) என்பதுவழிமுறைகள் (algorithms), புள்ளிவிவர மாதிரிகள் ஆகியவை பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும் அதாவது வெளிப்படையான அறிவுரைகள் எதையும் பயன்படுத்தா–மலேயே கைவசமுள்ள கணினி அமைவுகளைமட்டுமே பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பணியை திறம்படச் செயற்படுத்துவதாகும். ,ஆயினும் இதுவெளிப்படையான அறிவுரைகளுக்குப் பதிலாக வடிவங்களையும் அனுமானங்களையும் சார்ந்துள்ளது. அதைவிட இது செயற்கை நுண்ணறிவின் துணைக்குழுவாகவே பார்க்கப்படுகிறது. ’ என விக்கிபீடியாவானது இயந்திர கற்றல் (ML)குறித்து வரையறுக்கின்றது மேலும் இவ்வியந்திர… Read More »

Mozilla Common Voice in Tamil – தமிழில் மொசில்லா பொதுக்குரல் திட்டம் அறிமுகம் – காணொளி

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலம், மற்றும் பதிவுசெய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலம் நீங்கள் பங்களிக்கலாம். படிப்பதற்குத் தேவையான சொற்றொடர் சேகரிப்பில் உதவ, உங்கள் சொற்றொடர்களை, இக்கருவியின் (common-voice.github.io/sentence-collector/) மூலம் சேர்க்கலாம். குறிப்பு: சொற்றொடர்கள் CC0 உரிமத்தில்… Read More »

மெய்நிகர் கணினியை உருவாக்கிடGNOME Boxes எனும் கட்டற்றபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

புதிய சூழலில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என கணினியின் பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்த விழையும் நிரல்தொடராளர்கள் அல்லது புதியவர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவத்தை வளர்த்து கொள்ளவும் புதிய செயல்திட்டத்தை செயல்டுத்தி வெவ்வேறு சூழல்களில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் அறிந்து கொள்ளவும் விழைபவர்களுக்கு GNOME Boxes எனும் கட்டற்ற பயன்பாடானது ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது மேஜைக்கணினியில் தங்களுடைய புதிய செயல்திட்டத்தினை modeling, testing, development ஆகிய பணிகளுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் தரவுமையத்தில் தங்களுடைய… Read More »