open-tamil பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை, மற்றும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 16.11.2018 கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை (Tamil Computing Workshop) நடத்தப்பட்டது. த.சீனிவாசன் இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட 30 மாணவர்களும் முதல் ஆண்டு மாணவர்கள். கணினி, இயந்திரவியல், மின்னணுவியல், உயிரி நுட்பவியல் என பல துறை மாணவர்களும் இருந்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் கணினி மொழியாக, பைதான் கற்று வருகின்றனர். ஏற்கெனவே பைதான் கற்றிருப்பதால், தமிழ்க்கணிமை பற்றிய பயிற்சியை அளிக்க… Read More »

GIMP மென்பொருள் மூலம் மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்குவது எப்படி?

  வணக்கம். FreeTamilEbooks.com ல் யாவரும் பகிரும் வகையில் இலவசமாக மின்னூல்கள் வெளியிட்டு வருகிறோம். முழுதும் தன்னார்வலர்களால் இயங்கும் இந்த சேவையில், அட்டைப்படங்கள் உருவாக்கி உதவ உங்களை அழைக்கிறோம். குறிப்புகள் – ஒரு அட்டைப்படத்திற்கு பின்னணி படம் முக்கியம். அது மின்னூலின் தலைப்பு அல்லது உள்ளடக்த்தைக் குறிப்பதாக இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறான படங்கள் கிடைக்காத போது, சாதாரண நிறங்கள் கொண்ட எளிய படங்களே போதும். அட்டைப்படத்தில், மின்னூலின் பெயர், நூலாசிரியர் பெயர் முக்கியம். நூல் வகை… Read More »

இயந்திர கற்றல் அல்லது செயற்கை நினைவகத்திற்கு பைத்தான் சிறந்த கணினிமொழியா

குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning) அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு வேண்டாம் என வெறுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  அஞ்சற்க. ஜாவா ,சி ,சி++ ஆகிய வற்றைவிட எளிய அதேசமயத்தில் மேல்நிலை… Read More »

Machine Learning – 10 – Feature Selection

ஒரு கோப்பினுள் பல்வேறு columns இருக்கிறதெனில், அவற்றுள் எந்தெந்த column மதிப்புகளைப் பொறுத்து நாம் கணிக்கின்ற விஷயம் அமைகிறது எனக் கண்டுபிடிப்பதே feature selection ஆகும். உதாரணத்துக்கு 400, 500 columns-ஐக் கொண்டுள்ள கோப்பிலிருந்து, prediction-க்கு உதவும் ஒருசில முக்கிய columns-ஐத் தேர்வு செய்வது feature selection ஆகும். இதற்கு முதலில் நம்மிடமுள்ள columns-ஐ process variables, manipulated variables & disturbance variables எனும் 3 வகையின் கீழ் பிரிக்க வேண்டும். இதில் manipulated மற்றும் disturbance இரண்டும்… Read More »

ZeroNet எனும் கட்டற்ற வலைபின்னல் பயன்பாடு ஒரு அறிமுகம்

ZeroNet எனும் பயன்பாடானது பரவலாக்கப்பட்ட தணிக்கைதடுப்பு வலைபின்னலை கட்டமைப்பதற்காக பிட்காயினின் மறைகுறியாக்கத்தையும் பிட்டோரன்ட்டின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்கின்றது. பயனாளர்கள் நிலையான அல்லது மாறக்கூடிய வலைதளபக்கங்களை இந்த ZeroNet இல் வெளியிடமுடியம் மேலும் பயனாளர்கள் இவைகளை தெரிவுசெய்து கொள்ளவும் இந்த வலைதள பக்கங்களே தமக்குள் சேவைசெய்து கொள்ளுமாறும் செய்யமுடியும். வலை தளங்களின் இணைப்பானது ஏதாவாதொரு பயனாளர் இணைப்பில் இருக்கும்வரை தொடர்ந்து இதன் இணைப்பு இருந்து கொண்டேஇருக்கும் .இந்த வலைபின்னலில் ஏதாவது ஒரு வலைதளபக்கம் அதனுடைய சொந்தக்காரரால் மேம்படுத்தப்படும்போது அந்த… Read More »

கணியம் அறக்கட்டளை செப்டம்பர், அக்டோபர் 2018 மாத அறிக்கை

  தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். அறக்கட்டளை செய்திகள் கணியம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/ வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது நிகழ்ச்சிகள் விக்கி மூலம்… Read More »