லேங்க்ஸ்கேப், பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் வெப் டிசைனிங் இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறை முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து வெப் டிசைனிங் (HTML, CSS,JS, Canvas) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழியே ஆறு (கூடினால் எட்டு) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் வரை இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள: 1) ஏதாவது ஒரு நிரல்மொழி(programming) அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். 2) ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள்… Read More »

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – பங்குபெற்றவர்கள் (LibreOffice Hackathon – Participants) | Tamil

21-05-2022 அன்று நடைபெற்ற லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் பக்குபெற்றவர்கள் கருத்துக்களை இங்கு காணலாம். நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம். இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux

மொசில்லா பொதுக்குரல் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 29.05.2022 ஞாயிறு – மாலை 6.00… Read More »

GitDuckஎனும் மேம்படுத்துநர்களின் திறமூலக்கருவி

  GitDuck என்பது மேம்படுத்துநர்களுக்கான ஒரு திறமூல ஒத்துழைப்புக் கருவியாகும். GitDuck என்பது தொலைநிலையில் பணிபுரியும் மேம்படுத்து நர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க கருவியாகும்.அதாவது மேம்படுத்துநர்கள் தங்கள் திரையைப் பதிவுசெய்து, அவர்களின் குறிமுறைவரிகளை கானொளி நேர முத்திரைகளுடன் இணைக்கவும், ஊடாடும் குறிமுறைவரிகளின் கானொளிகளை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது. Duckly என்பது ஒரு IDE செருகுநிரலாகும், இது குறிமுறைவரிகளின் முறையை பலமுறைஇயங்கச் செய்கிறது. மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகள், சேவையாளர், முனைமம் ஆகியவற்றைப் பகிரவும், வெவ்வேறு IDEகளைப் பயன்படுத்தும் நபர்களுடன்… Read More »

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – ல்மாரி பேச்சு (LibreOffice Hackathon – Ilmari talk) | Tamil

கடந்த 21-05-2022 அன்று நடந்த லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் லிபரிஆப்பீசின் டெவலப்மன்ட் மார்கட்டிங் தலைவர் ல்மாரி லவ்வாகன்காஸ் வழங்கிய பேச்சு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம் இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux

லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்!

எதிர்பார்த்த படி, லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் இணையவழி ஹேக்கத்தானுக்கு ஆர்வத்துடன் பலர் குவியத் தொடங்கினார்கள். சரியாகப் பதினொன்றரைக்கு உள்ளே நுழைந்தார் இல்மாரி. அவர் உள்ளே நுழையும் போதே இருபதுக்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். சில மணித்துளிகளில் நிகழ்வை இல்மாரி தொடங்கும் போது இணைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டிருந்தது. மிக இயல்பாக, லிப்ரெஆபிஸ் தொகுப்பில் எப்படி வேலை செய்ய வேண்டும்? விண்டோஸ், லினக்ஸ் என ஒவ்வொரு இயங்குதளத்திலும் எப்படி நிறுவ வேண்டும்? வழுக்களை(bug) எப்படிப் பதிய வேண்டும்? என அனைத்தையும் நாற்பது… Read More »

தசம எண்கள் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 5 (Decimal Number – Linux in School – Episode 5) | Tamil

இந்த அத்தியாயத்தில் தசம எண்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை கற்போம். இது நமக்கு இரும எண்களை கற்க உதவியாக இருக்கும். நிகழ்படம் வழங்கியவர் : மோகன் .ரா, இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னை குறிச்சொற்கள்: #DecimalNumbers #Linux

குறிமுறைவரிகளில்லாத((No Code) முதன்மையான திறமூல கருவிகள்(Tools)

அறிமுகம் “ஒரு குறிமுறைவரிகளில்லாத மேம்படுத்திடும் தளமானது, நிரலாளர்கள், நிரலாளர்கள் அல்லாதவர்கள், பாரம்பரிய கணினி நிரலாக்கத்திற்கு பதிலாக வரைகலை பயனாளர் இடைமுகங்கள் , உள்ளமைவு மூலம் பயன்பாட்டு மென்பொருளை உருவாக்க அனுமதிக்கிறது.” ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இவ்வாறான பல்வேறு மென்பொருள் கருவிகளும் , பயன்பாடுகளும் உருவாக்கப் பட்டு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. “அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கு கின்றார்கள்?” என நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம். பல மேம்படுத்துநர்கள் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத குறிமுறைவரிகளை எழுதுகின்ற ஒரு வளர்ந்துவரும் படபிடிப்புநிலையத்தினை… Read More »

லிப்ரெஆபிஸ் இணையவழி டெஸ்டிங் ஹேக்கத்தான்

கட்டற்ற அலுவலகத் தொகுப்பாகிய லிப்ரெஆபிஸ்,தி டாக்குமென்ட் பவுண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம். “லிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடன் உழைப்பைப் பற்றியது” என்பதைத் தன்னுடைய மந்திரமாகக் கொண்டிருக்கும் லிப்ரெஆபிஸ் மென்பொருளைச் சோதிக்கும் (டெஸ்டிங்) ஹேக்கத்தான் இணையவழி நடக்க இருக்கிறது. நிகழ்வைப் பயிலகம் கி. முத்துராமலிங்கம் ஒருங்கிணைக்கிறார். நிகழ்வில் பின்லாந்தைச் சேர்ந்த லிப்ரேஆபிஸ் பொறுப்பாளர் திரு இல்மாரி(Ilmari) கலந்து கொண்டு டெஸ்டிங் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவருடைய அறிமுகத்தைத்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 15 – இனிதே துவங்கிய பயணம்

இனிதே துவங்கிய பயணம் மதன் மற்றும் கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்தைய நாள். காஞ்சிபுரத்தில் மதனின் குடும்பத்தின் சொந்த மண்டபத்தில் மதன் மற்றும் கார்த்திகாவின் ரிஷப்ஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் பட்டு வேட்டியுடன் மதனும் தங்கநிற பட்டுப்புடவையில் கார்த்திகாவும் நின்றிருந்தனர். கயலும் குருவும் கார்த்திகா வீட்டினரையும் தன்வீட்டினரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சுரேஷும் தீப்தியும் விருந்தினர்களுக்கு என்ன வேண்டும் என்று கவனித்துக் கொண்டிருந்தனர். மதனின் தங்கை மதன் வீட்டாரை கவனிக்க பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள். வழக்கம்… Read More »