துருவங்கள் – அத்தியாயம் 14 – உடன்கட்டை

உடன்கட்டை அன்று வெள்ளிக்கிழமை, சுரேஷ் மற்றும் தீப்தியின் திருமனத்திற்கு முந்தைய நாள். சுரேஷின் பார்ம் அவுஸ் அவன் திருமனத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருந்தது. அவன் பார்ம் அவுஸ் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கோவலம் கடற்கரையை தாண்டி ஒரு இடத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்களை கொண்டு முழுவதும் காம்பவுன்ட் சுவர்கள் எழுப்பி அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர் ரோட்டில் இருந்து சுரேஷின் பார்ம் அவுஸ்ஸுக்கு சொன்னையிலிருந்து பாண்டிக்கு போகும் திசையில் இடதுபுறம் திரும்பி ஐநூறு மீட்டர் சென்றாலே வந்துவிடும்.… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 13 – அந்த ஒரு நம்பர்

அந்த ஒரு நம்பர் காலை நான்கு மணி, ‘எந்திரா டைமாச்சு’ மதன் வழக்கம்போல் சுரேஷை எழுப்பினான். இருவரும் குளித்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். தீப்தியும் தன் பைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்து சுரேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். கார்த்திகாவின் தந்தையும் வெளியில் போய் செவ்வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, என்று பல கனிகளை மூன்று பைகளில் போட்டு கொண்டுவந்து மதனிடமும் சுரேஷ் மற்றும் தீப்தி இடமும் கொடுத்தார். ‘எதுக்கு சார் இதெல்லாம்’, மதன்… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து கார்த்திகா யாரும் பார்க்காதவாறு மீண்டும் மிரரை பார்க்க, அங்கே மதன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். இருவரும் ஒருவரை… Read More »

மேககணினி சேவை வழங்குநர்களைப் பற்றி திறமூல மேம்படுத்துநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

  பொதுவாக மேககணினியில் அடுக்குகளானவை(layer) கணினிகளின் இயக்க நேரத்தில் இணைந்து செயல்படும் வகையில்வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதனை பலர் மேககணினியின் புதிய எல்லையாக கருது வதால்,கடந்த பல ஆண்டுகளாக இவை மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இருப்பினும்,இது தனிப்பட்ட ஈடுபாட்டுடன் தொழிலகங் களிலும் கணினியிலும் மேககணினியை எவ்வளவு பயன்படுத்துகின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது ஆகும். ஒரு நிரலாளராக இருந்தால்,தன்னுடைய பணியைசெய்வதற்காகவோ அல்லது வேடிக்கையாகவோ கணினியின் மேம்பாட்டை மேகக்கணியில் நகர்த்த விரும்பிடுவோம், ஆயினும் தற்போது ஏராளமான… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற ‘வர சண்டே மேரேஜ், நீ போறியா இல்ல நாங்க போகட்டுமான்னு எங்க வீட்லயும் கேட்டாங்க’ மதன் கூற ‘போன்ல சொன்ன… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 10 – குலசாமி

குலசாமி ‘எங்கடா இருக்க ரூம்லயா?’ தீப்தி சுரேஷை போனில் கேட்க ‘இல்லடி வீட்டுக்கு வந்திருக்கேன்’ சுரேஷ் கூற ‘கோயிங் டு பி பிக் ப்ராப்ளம் இன் மை ரூம், கயல் அக்காவோட அம்மாகிட்ட கயல் அக்காவோட மாமா பையன் மறுபடியும் போய் பொண்ணு கேட்டிருக்கார், கொடுக்கலைன்னா மெட்ராஸ்ல இருக்கிற உங்க பொண்ண கூட்டிட்டு போய் தாலி கட்டி அப்படியே ஸ்ரீநகர் கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்லி இருக்கார். அவங்க அம்மா உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லி இருக்காங்க, இந்த… Read More »

துருவங்கள் – அத்தியாயம் 9 – மழலை காதல்

மழலை காதல் அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, கயல் வழக்கம் போல தன் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்து ஆற வைத்துக் கொண்டிருந்தாள், கார்த்திகா தன் லேப்டாப்பில் ஏதோ நோண்டி கொண்டிருந்தாள், தீப்தி படுத்துக்கொண்டு வாட்சாப்பில் சுரேஷுடன் சேட் செய்துகொண்டிருந்தாள். ‘தீப்தி, எப்பப்பாரு அந்த வாட்சப்ல இருக்கியே அப்படி என்னதான்டி பேசுவ’ காயல் கேட்க ‘நீங்க உங்க ஆள் கூட என்ன பேசுரீங்களோ, அதத்தான் நானும் பேசுரேன், என்ன நீங்க மேக்சிமம் ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாத்தையும் பேசி… Read More »

ஜிம்ப் – நிற வளைவுகள் (Gimp – Color Curves) | Tamil

ஜிம்ப் பயன்படுத்தி எப்படி ஒரு நிழற்படத்தில் உள்ள கருமை நிற எழுத்துக்களை மேலும் கருமைபடுத்தி தெளிவுபடுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் கற்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: www.gimp.org/tutorials/Basic_Color_Curves/ குறிச்சொற்கள்: #Gimp #ColorCurves #Linux

துருவங்கள் – அத்தியாயம் 8 – ஒன் ஆப் அஸ்

ஒன் ஆப் அஸ் வழக்கம் போல் கார்த்திகா அன்று காலையிலேயே மதன் கியூபிக்கலுக்கு வந்திருந்தாள். ‘நேத்து நீங்க ப்ராசஸ் பத்தி விலக்கி சொன்னீங்கல்ல, போய் படிச்சேன். சிஸ்டத்துல என்னென்ன ப்ராசஸ் ரன் ஆகுது, அந்த ப்ராசஸ்கல எப்படி பார்க்கிறது, என்ன கமாண்ட் யூஸ் பண்ணனும், எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கேன். சொல்லட்டுமா’ கார்த்திகா கேட்க ‘ஓக்கே’ என்று மதன் கூறினான். ‘முதல்ல ps கமாண்ட், இந்த கமாண்ட் மூலம் நம்ம சிஸ்டத்தில் ரண் ஆகிக்கொண்டிருக்கும் அத்தனை ப்ராசஸ்களையும் பார்க்க… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத் தான் இருந்தது. அதிலும் ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பாட்டுப் போட்டியில் மதனுக்குப் போட்டியாகக் கார்த்திகா பாடிய ‘யமுனை ஆற்றிலே… Read More »