வாராந்திர கூட்டம் 23-01-2022 (weekly meet 23-01-2022) | Tamil

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). இக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. அதன் காணொளி இது. Tags: #TamilLinuxCommunity #WeeklyMeet #Linux

இன்றைய கணினியின்கொள்கலண்களை(containers)இயக்கத் தொடங்குவதற்கான மூன்று படிமுறைகள்

நம்முடைய பணியின் ஒரு பகுதியாகவோ, எதிர்கால பணி வாய்ப்பு களுக்காகவோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவம் வாய்ந்த அமைவு நிருவாகிகளுக்குக் கூட இன்றைய கணினியின் கொள்கலண்களின் (containers) பயன்பாடு மிகவும் அதிகமானதாகத் தோன்றலாம். இருந்தபோதிலும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது .எனவே  உண்மையில் இந்த கொள்கலண்களை எவ்வாறு செயல்படுத்திட தொடங்குவது? மேலும், ஏன் கொள்கலணிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதற்கான ஒரு பாதை இருக்கிறது? நாம் எதிர்பார்ப்பது போல், இதனை தொடங்குவதற்கான… Read More »

க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 1

நரவலைகள் ஒர் அலசல் செய்யறிவின் (Artificial Intelligence) உறுப்பான கற்குங்கருவியியல் (Machine Learning) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். மனிதரின் உடலில் ஒவ்வொரு உறுப்பும் சிறப்பானதுதான். மூளையை தனிச் சிறப்பானதாகச் சொல்ல முடியும். காரணம் அதன் துணை கொண்டு கண்கள் வழியே வண்ணங்களைப் பார்க்க… Read More »

மீப்பெரும் தரவு(Big Data)

மீப்பெரும் தரவு(Big Data) என்பது நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட  பகுதி-கட்டமைக்கப்பட்ட ,முழுவதும் கட்டமைக்கப் பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளின் கலவையாகும், அவைகளை இயந்திர கற்றல், முன்கணிப்பு மாதிரியாக்கம், மோசடி கண்டறிதல், உணர்வு பகுப்பாய்வு ,பிற மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற பல்வேறுபயன்பாடுகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம். சமீபத்திய நாட்களில் மீப்பெரும் தரவின் தீர்வுகளைப் பயன்படுத்தும் நிறுமங்கள்(companies) , நிறுவனங்கள்(organisations) , ஆய்வு கழகங்கள்(institutions)  ஆகியவற்றின் எண்ணிக்கை, நாளுக்குநாள் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அளவைப் போலவே  மீப்பெரும் அளவாக உயர்ந்துவருகின்றன.  இவ்வாறு தினசரி உருவாக்கப்படும் தரவுகளின்… Read More »

புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக் கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய திறனாகும் எவரும் சிறிய அளவில் குறிமுறைவரிகளை எளிதாக எழுத கற்றுக்கொள்ளலாம். எவரும் ஏதேனும்ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக் கொள்ள… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 27.02.2022 ஞாயிறு – காலை 9… Read More »

Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் 

அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து  செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால் அவைகளை கொண்டு குறிப்பிட்ட பணியை செய்து சமாளிக்க முடியும். ஒரு பயன்பாடு உண்மையில் நூற்றுக்கணக்கான சிறிய நூலகமும்  கணினி முழுவதும்… Read More »

VGLUG – வலைத்தள உருவாக்க பயிற்சி – 2022

வலைத்தள உருவாக்கம்(Web development) பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? வெப் டெவலப்மென்ட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடிய React JS மற்றும் Node JS ஆகியவற்றை இலவசமாக கற்றிட VGLUG ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கீழ்காணும் சுட்டியில் சென்று விண்ணபிக்கவும். vglug.org/training2022 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-Feb-2022 மேலும் விவரங்களுக்கு: 9600789681, 9566547554