Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு
SOURCE : upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png
Spell4Wiki
விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு விக்கி-அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான தகவலை(பொருளை) விக்சனரியிலிருந்து பெற்று தரும் என்பது மேலும் சிறப்பு.
இது ஒரு கட்டற்ற மென்பொருள் (GPLv3) ஆகும்.
அம்சங்கள்
1. Spell For Wiktionary – இதன் மூலம் விக்சனரியில் உள்ள சொற்களுக்கு ஒலியினை சேர்க்கலாம். தற்போது தமிழ் மொழிக்கு மட்டுமே இது உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பிற மொழிகளுக்கும் பங்களிக்கும் வகையில் உருவாக்கப்படும்.
2. Spell For Word List – இதன் மூலம் பல சொற்களை ஒரே நேரத்தில் நகலெடுத்து ஒட்டுவதன் மூலமாகவோ கோப்புகளிலிருந்து படிப்பதன் மூலமாகவோ அவ்வார்த்தைகளுக்கு ஒலிப்புக்கோப்பினை எம்மொழியிலும் எளிதாகப் பங்களிக்க முடியும்.
3. Spell For Word – இதன் மூலம் ஒரே ஒரு வார்த்தைக்காக விரைவாக ஒலிப்புக்கோப்பினை எந்த மொழிக்கும் பங்களிக்க முடியும்.
4. Wiktionary Explore – இதன் மூலம் எந்த ஒரு மொழிச் சொல்லின் பொருள், மூலம் மற்றும் விளக்கத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் இச்செயலியினை சாதாரண அகராதிபோல எவ்வித பங்களிப்புமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது மேலும் சிறப்பு. கடந்த ஒன்றரை வருட கடின உழைப்பின் மூலம் இச்செயலி இந்நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
SOURCE : upload.wikimedia.org/wikipedia/commons/9/94/Spell4Wiki_App_Features.png
இச்செயலியின் தேவை/பயன் என்ன?
விக்சனரியில் ஏராளமான வார்த்தைகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கு போதுமான உச்சரிப்பு ஒலிக்கோப்பு இல்லை எனவே இச்செயலின் மூலம் எளிமையான முறையில் நாம் வார்த்தைகளுக்கான உச்சரிப்புகளை பதிவேற்ற முடியும்.
மேலும் அந்தப் உச்சரிப்புகளை நாம் விக்கி தரவு திட்டத்திற்க்காகவும், எந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுக்கு CC-உரிமத்தின் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் மற்ற மொழிக்காரர்கள் ஒரு வார்த்தையை எவ்வாறு உச்சரிப்பது என்பது குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
இச்செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரில் Spell4Wiki என்று தேடுவதன் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கபட்டுள்ள இணைப்பின் மூலமும் பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.
கூகிள் ப்ளே ஸ்டோர் இணைப்பு :
play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki
குறிப்பு : விரைவில் F-Droid-லும் பதிவேற்றபடும்.
செயலியின் வரலாறு
இச்செயலியின் யோசனை, உருவாக்கம், வளர்ச்சி முதல் தற்போதைய நிலை வரை கிழே காணலாம்.
- செயலிக்கான யோசனை
- செயலிக்கான கலந்துரையாடல்கள்
- செயலிக்கான திட்டமிடல்
- செயலிக்கான தொடக்கம்
- செயலியின் வளர்ச்சி
- Wikimedia Hackathon 2020 (Remote)
- செயலியின் தற்போதைய நிலை
செயலிக்கான யோசனை
கணியம் அறக்கட்டளையின் திட்ட யோசனைகள் பக்கத்தில் இச்செயலிக்கான யோசனையை சீனிவாசன் அவர்களால் அக்டோபர் 17, 2018-ல் எழுப்பபட்டது.
திட்ட யோசனைகள் பக்கம் : github.com/KaniyamFoundation/ProjectIdeas/wiki/Project-Ideas#intermediate
செயலிக்கான கலந்துரையாடல்கள்
கணியம் அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவரான கலில் ஜாகிர் மூலம் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் செயலியை உருவாக்க கலந்துரையாடல் மூலம் திட்டமிடப்பட்டது.
செயலிக்கான திட்டமிடல்
செயலியை தொடங்குவதற்க்கு முன் தொழில்நுட்ப மற்றும் விக்கி நுட்ப தேவைகள், உதவிகள் குறித்து திட்டமிடப்பட்டு பிறகு தொடங்கப்பட்டது.
செயலி உருவாக்கதிற்க்கான தொழில்நுட்ப உக்திகள் குறித்து கலில் ஜாகிரும், விக்கிமீடியா மற்றும் அதன் நுட்பம் குறித்து சீனிவாசனும் ஆலோசனைகளை வழங்கியதோடு தகவல் உழவன்(தமிழ் விக்கிபீடியன்) அவர்களையும் மணிமாறனுடன் அறிமுகபடுத்தினார்.
செயலிக்கான தொடக்கம்
அனைத்து விதமான திட்டமிடலுக்கு பிறகு, நவம்பர் 27, 2018-ல் மணிமாறன் அவர்களால் இந்த ஆன்ராய்டு செயலி வெற்றிகரமாக தொடங்கபட்டது.
செயலியின் வளர்ச்சி
ஆரம்பக்கட்டத்தில் செயலி சாதாரண இடைமுகப்புடன், .wav வடிவ ஒலிப்புகோப்புகளை பதிவேற்றுவதாகவும், விக்சனரி, விக்கிமீடியா பொதுவக பகுப்பில் இணைப்பதில் பல பிரச்சினைகள் உடனும் இருந்தது. பிறகு அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுக சிறுக குறைத்து மெருகூட்டப்பட்டு தற்போது ஒரு முழு செயலியாக பயன்படுத்தும் அளவிற்கு உருவெடுத்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
- விக்சனரி-ல் “அறுபட்ட_கோப்பு_இணைப்புகள்_உள்ள_பக்கங்கள்” என்ற பகுப்பிலிருந்து வார்த்தைகள் எடுக்கபட்டது. அதில் சில பிரச்சனைகள் இருந்தன. பிறகு தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை எனும் ஒரு புதிய பகுப்பை தகவலுழவன் அவர்கள் தயார் செய்து கொடுத்தார் பிறகு வேலை சற்று எளிதானது.
- சீனிவாசன் அவர்களால் தொடர்ச்சியான முறையில் செயலியின் நிலை குறித்தும், தேவை குறித்தும் அறிந்து உதவிகளையும், குறிப்புகளையும், ஊக்குவிப்புகளையும் அவ்வபோது கொடுத்து தொடர்ந்து செயலியை மேம்படுத்த உதவினார்.
- கட்டற்ற மென்பொருள் ஆர்வலரான கணேஷ், செயலிக்கான சின்னம் உருவாக்கி கொடுத்ததுடன், இடைமுக(UI), பயனர் தொடர்பு(UX) வடிவமைப்பு பற்றி எடுத்துகூறினார்.
- கலில் ஜாகிர் மற்றும் ராகுல்காந்த் முறையே மொபைல் மற்றும் API தொழில்நுட்பம் குறித்து உதவிகளை வழங்கினர்.
- Spell4Wiki-மூலம் பதிவேற்றபடும் கோப்புகளை ஒருசேர ஒருக்கிணைக்கவும், Spell4Wiki-க்கான விளக்க பக்கதினை விக்கி-பொதுவகத்தில் தகவலுழவன் உருவாக்கி கொடுத்தார். விக்கி நுட்ப ரீதியில் அவர் செய்த உதவிகள், ஆலோசனைகள் அளப்பரியது.
- மணிமாறனும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இச்செயலிக்காக கணிசமான முறையில் செயல்பட்டு செயலியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார்.
- விக்கிமீடியா தொழில்நுட்ப குழுக்களுடன் அறிமுகம் ஏற்படுத்தி கேள்விகள் எழுப்பியதன் பலனாக பலர் உதவிகரம் நீட்டி பதில் அளித்தனர். மேலும் பலர் பரிசேதனையாக பயன்படுத்தி அவர்களது கருத்துகளையும் தெரிவித்தனர்.
- பல மாத போராட்டங்களுக்கு பிறகு .ogg வடிவ ஒலிப்புகோப்புகளை பதிவேற்ற வழிகிடைத்தது, செயலியும் ஒரு நல்ல நிலைக்கு மேம்படுத்தபட்டது.
Wikimedia Hackathon 2020 (Remote)
Wikimedia Hackathon என்பது உலக அளவில் உள்ள விக்கிமீடியர்கள் பலர் ஒன்றிணைந்து விக்கிமீடியாவிற்கு கருவிகள், பயன்பாடுகளைக் குழுவாக அமர்ந்து உருவாக்க வருடாவருடம் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.
இது இவ்வருடம் 2020ல் மே, 9 முதல் 11 வரை Remote Hackathon-ஆக நடைபெற்றது. இதில் நமது Spell4Wiki செயலியும் பங்குபெற்றது. மே 10, 2020 இரவு 10.30 க்கு இதனைப் பற்றிய விளக்கக்காட்சியினை(Presentation/Showcase) மற்ற விக்கிமீடியர்களுக்கு அளிக்கப்பட்டது. பல விக்கிமீடியர்கள் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். Wikimedia Hackathon-ல் மொத்தம் 16 கருவிகள்பற்றி விளக்கக்காட்சி வழங்கப்பட்டது அதில் நமது செயலியும் காட்சிப்படுத்தப்பட்டது.
காட்சிவிளக்க வீடியோவை காண : www.youtube.com/watch?v=E19-sDvjXD8&t=1980
செயலியின் தற்போதைய நிலை
கிட்டதட்ட இரண்டு வருட பல்வேறுதரபட்ட மக்களின் உழைப்பின் பலனாக தற்ப்போது(ஜீன் 21, 2020) ஒரு முழு செயலியாக பயன்படும் நிலையில் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மேம்படுத்தவேண்டியுள்ளது.
விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் இவ்விணைப்புகளை காணவும் :
- github.com/manimaran96/Spell4Wiki
- github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md#spell4wiki-contribution-guidelines
இதுபோன்ற விக்கிமீடியா, தமிழ், சமுக மேம்பாடு மற்றும் அறிவியல் சார்ந்த கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவ எண்ணுபவர்கள் நன்கொடை கொடுத்து உதவுங்கள்.
github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/DONATION.md#donation–spell4wiki-app
பங்களிப்பாளர்கள்
மணிமாறன் – செயலி உருவாக்குநர்.
சீனிவாசன், தகவலுவழன், கலீல் ஜாகீர், கணேஷ், ராகுல்காந்த், சிவராம், Gergo Tisza, bawolff, Jan Ainali ஆகியோர் தொழில்நுட்ப உதவிகளைச் செய்துள்ளனர்.
செயலி முன்தோற்றம்
SOURCE : – upload.wikimedia.org/wikipedia/commons/1/1b/Spell4Wiki_App_Screenshots.gif
செயலி மூலம் எவ்வாறு பங்களிப்பது ?
App link : play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki
விளக்க காணொளிகள்
Tamil(தமிழ்) – youtu.be/4y5I1sUW1ys
English – youtu.be/IMku3FL7s3I and youtu.be/Fu4kQcv04kA
Spell4Wiki செயலியை பயன்படுத்தி விக்சனரி சொற்களுக்கு உங்கள் குரலை பங்களிக்க உங்களை அழைப்பதில் கணியம் மகிழ்ச்சியடைகிறது.
மேலும் அறிய :
- Telegram Group : t.me/spell4wiki
- commons.wikimedia.org/wiki/Commons:Spell4Wiki
- github.com/manimaran96/Spell4Wiki
- play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki
- www.slideshare.net/ManimaranK7/spell4wiki-app-intro-and-explanation
- github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md#spell4wiki-contribution-guidelines
- www.kaniyam.com/foundation/
- vglug.org/
- www.youtube.com/watch?v=E19-sDvjXD8
- manimaran96.wordpress.com/2019/01/06/spell4wiki-mobile-app-to-record-upload-audio-for-wiktionary/
- manimaran96.wordpress.com/2020/02/21/spell4wiki-mobile-app-to-record-upload-audio-to-wiki-commons-for-wiktionary-words-part-2/
- commons.wikimedia.org/wiki/Category:Files_uploaded_by_spell4wiki
- wikimedia.7.x6.nabble.com/Need-Help-To-Spell4Wiki-Wiktionary-Audio-App-td5086679.html