தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2018 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். இயன்ற அளவு பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 20 மார்ச்சு 2019. பரிந்துரைகளை venkat@domesticatedonion.net அல்லது thirumurthi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

 

மூலம் – www.facebook.com/troymurthi/posts/10213319443444006

கனடா தமிழ்த் தோட்டம் விருது பற்றி – en.wikipedia.org/wiki/The_Tamil_Literary_Garden#Information_Technology_in_Tamil_Award

ta.wikipedia.org/s/ifq

 

%d bloggers like this: