தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?
ஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா? உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும் ஆங்கிலம்தான் பேச வேண்டியிருக்கிறது. மேலும் பிணைப்பு பெருகி வரும் உலகின் குடிமக்களாக ஆக்குவதற்காக அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம்தான் கற்றுக்கொடுக்கிறார்கள்.… Read More »