Tag Archives: விக்கிப்பீடியா

மதுரையில் தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு

பெண்ணியம் நாட்டார் மரபு 2025 போட்டியை ஒட்டி தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு பெண்ணியம் நாட்டார் மரபு போட்டியை ஒட்டி, விக்கிப்பீடியத் தகவல்களில் பாலினப் பாகுபாட்டைக் குறைக்கவும், மதுரை சார்ந்த பண்பாட்டுத் தரவுகளை அதிகரிக்கவும், தமிழ் விக்கிப்பீடியா வழங்கும் ஒருநாள் பயிலரங்கு. நாள்:பிப்ரவரி 22, 2025 (காலை 9:30 முதல் 5:30 வரை) இடம்:Blaze Web Services, கண்மாய் கரை சாலை, காளவாசல், மதுரை 625016 கட்டணமில்லை ஆனால் முன்பதிவு அவசியம்  ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி

அனைவருக்கும் வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான ‘அடிப்படை நிலை’ பயிற்சி ஒன்றினை இணையம் வழியே வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். தமிழில் எழுதும் ஆர்வமுள்ள, தாய்மொழிக்கு பங்களிப்புத் தரும் விருப்பமுள்ள உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும் அழைப்புகளை அனுப்பிவையுங்கள்! நன்றி 💐 இவ்வாரத்திற்குரிய நிகழ்வில் கலந்துகொள்வோரின் ஆர்வத்தின் அடிப்படையில், கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், அடுத்தடுத்து நிகழ்வுகளை நடத்துவோம்.… Read More »

விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள் – பிப் 14 2021 மாலை 4 மணி

தமிழ்ஊடகவளங்களை_மேம்படுத்துவோம்! இன்று 14.02.2021 இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். அன்புடன்,முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91-7299397766 பயிற்சியில் பங்கேற்க:Join Zoom Meetingmoe-singapore.zoom.us/j/87863712875Meeting ID: 878 6371 2875Passcode: 999459 பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

மதுரையில் விக்கிப்பீடியா நிகழ்வு – நவம்பர் 30 2019

வணக்கம், இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு மதுரையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில்… Read More »

விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம் வளாகத்தில் இன்று தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெற்றது. விக்கிப்பீடியர் நீச்சல்காரன், இந்த முழுநாள் தொகுப்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில், உதயக்குமார்,… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 2

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா? அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே? எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் “உரையாடல்” என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள். பிறகு வரும் உரையாடல் பக்கத்தில் “தலைப்பைச் சேர்” என்ற இணைப்பை அழுத்துங்கள். பிறகு, உங்கள் செய்தியை இட்டுச் சேமியுங்கள். தமிழ்… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக ! முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் ! விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி, விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். விக்கிப்பீடியாவின் தேர்தெடுத்த கட்டுரைகளை… Read More »