செயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10
செயற்கூறிய நிரலாக்க அடிப்படைகள் குறித்து கடந்தசிலவாரங்களாக படித்துவருகிறோம். இதனை அன்றாட பயன்பாட்டில் எப்படி பொருத்துவது? இன்றளவிலும் கூட, செயற்கூறிய நிரலாக்கமொழிகளைப் பயன்படுத்தி நிரலெழுதும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால், பெரும்பாலான வலைச்செயலிகள் உருவாக்கும் நிரலர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டை அன்றாடம் பயன்படுத்தி நிரலெழுதுகின்றனர். எனவே, நாம் இதுவரை கற்ற கோட்பாடுகளை ஜாவாஸ்கிரிப்ட்டில் எப்படி பயன்படுத்துவது என இப்பகுதியில் காணலாம். செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு செயற்கூறிய முறையில் நிரலெழுத ஏதுவான, நிலைமாறாத்தன்மை போன்ற, சில அம்சங்களை ஜாவாஸ்கிரிப்ட்டு நமக்குத்தருகிறது. மேலும் சிலவற்றை… Read More »