திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!
தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன. மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை. இந்த வாரம் நான் its… Read More »