Telegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூகச் செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்துப் பேசி, மடிக்கணினி கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்தச் செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொரு வகையான கோப்பாக இருந்தாலும், அனுப்பவும் பெறவும் முடியும்… மேலும், தனிநபர் முதல் குழுவானநபர்கள்வரை மட்டுமல்லாது வரையறையற்ற வகையில் எத்தனை நபர்கள் வேண்டுமானலும் குழுவாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் செய்திகளை இந்த Telegram வாயிலாக பரிமாறிகொள்ளமுடியும். மேலும், அவ்வாறான நம்முடைய தொடர்பு நபர்களை அவர்களின் பயனாளர்களின் பெயர்களின் வாயிலாகத் தொகுக்கமுடியும். அதனைதொடர்ந்து இந்த Telegram எனும் வசதியானது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் இணைந்ததொரு புதிய தனிப்பட்ட அல்லது வியாபாரத் தகவல் தொடர்பாளராக உருவாகிவிடுகின்றது .
இந்த Telegram ஆனது மேககணினி அடிப்படையில் செயல்படும் செய்தியாளர் சேவையாகும். அதனால் செல்லிடத்துப் பேசி, மடிக்கணினி, கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து சாதனங்களிலும் இதனை செயல்படுத்திப் பயன்பெறமுடியும். இந்த செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொருவகையானக் கோப்பாக இருந்தாலும் 1.5ஜிபிவரை கையாள முடியும். இது ஒரு கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, வாடிக்கையாளர் பயன்படுத்திடுவதற்கான கட்டணமெதுவும் செலுத்தத்தேவையற்ற செய்தியாளர்சேவைதளமாகும். மேலும், நம்முடைய தேவைக்கேற்ப இந்த தளத்தின் பயன்பாட்டினை நாமே உருவாக்கிவளர்த்து கொள்ளும் கட்டற்றமென்பொருள் வசதியையும் இது அளிக்கின்றது. மேலேகூறிய இதிலுள்ள வசதிவாய்ப்புகளினால் வாட்ஸ்அப்பைவிட இது மிகசிறந்ததாக மிளிருகின்றது.
குறிப்பிட்டச் சாதனங்களில் மட்டும்தான் இதுசெயல்படும் என்றவரையறை எதுவுமில்லாமல் ஐஃபோன்சாதனங்களிலும் iOS(6உம் அதற்குபிந்தையபதிப்பிலும்), ஐபேடுசாதனங்களிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்Android(2.2 உம் அதற்குபிந்தையபதிப்பிலும்), விண்டோஃபோனிலும் இணைய பதிப்பாகவும், விண்டோ ,லினக்ஸ் போன்ற இயக்கமுறைமைகளில் செயல்படும் மேஜைக்கணினி பதிப்பாகவும், இதனைச் செயல்படுத்தி பயன்பெறமுடியும். ஆயினும், எந்த இடத்திலும் நம்முடைய செல்லிடத்துப் பேசியின் எண்ணை மட்டுமே அடிப்படைத் தொடர்பாளராக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது தனிப்பட்ட நபர்களின் விவரங்களை தகவல்களை மூன்றாம் நபருக்குப் பகிர்ந்து கொள்ளாது. அதனால் மற்ற சமூகபயன்பாடுகளை போன்று தொல்லைதரும் விளம்பரங்கள் எதுவும் இதில் இல்லை. அதுமட்டுமல்லாது இதுவியாபார நோக்கமற்ற மக்களுக்கிடையே தகவல்தொடர்பை எளிதாகவும், விரைவாகவும் அமைத்திடும் ஒருசமூகசேவைதளாகவும் இது விளங்குகின்றது என்ற செய்தியை மனதில் கொண்டு, அனைவரும் வருக! இந்த சேவையை வந்த பயன்படுத்தி பயன்பெறுக.
– ச.குப்பன் (kuppansarkarai641@gmail.com)