Twitter இல் இருந்து Mastodon இற்கு மாறுதல்: அமைவுநிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ட்விட்டரில் இருந்து திறமூல சமூக வலைப்பின்னலான Mastodon க்கு மாறிடும்போது, அதன் வடிவமைப்பிலும் இடைமுகத்திலும் உள்ள சில முக்கியவேறுபாடுகளை கண்டிப்பாக நாம் அறிந்திருக்க வேண்டும். ட்விட்டரில் நாம் பழகிய சில பொதுவான செயல்பாடுகள் மாஸ்டோடனில் சற்று வித்தியாசமாக செய்யப்படுகின்றன என்ற செய்தியைமனதில்கொள்க. ஒருவேளை ஒரு செயலைநம்மால் செய்ய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி அன்று, மாறாக Mastodon இன் இடைமுகத்தில் நாம் அதை எங்கே எவ்வாறு செய்கின்றோம் என்பதேமுக்கியமான செய்தியாகும்.
பதிவுசெய்தல்:Twitter ஆனது மிகச்சரியாக தனிப்பட்டதொரு இணையதளமாகும், ஆனால் Mastodon பொதுச்செயல்முறையின்(ActivityPub) நெறிமுறை மூலம் பல தளங்களின் பிணையமாக (அல்லது “கூட்டமைக்கப்பாக”) உள்ளது. இந்த பொதுச்செயல் முறை (ActivityPub) ஆனது Mastodon ஐ மிகஅதிகவிரிவான செயல் முறையாக பயனாளருக்கு கிடைக்குமாறு செய்கின்றது. புகைப்பட தாரைகள், கானொளி பகிர்வு போன்ற பலவற்றிற்கான பொதுச்செயல்முறை(ActivityPub) தளங்கள்கூட பலஉள்ளன, ஆனால் இது சிறிது வேறுபட்டதாகும்.
புதிய பதிவுகளை ஏற்கும் சேவையாளர்கள் மூலம் உலாவருதல். பதிவு செய்தல் ஆகியன குறிப்பிட்ட சேவையகத்திற்கு மட்டுமென மட்டுப்படுத்தப்படவில்லை (ஏனெனில் இதனுடைய சேவையாளர்கள் இயல்பாகவே ஒன்றோடு ஒன்று கலந்துரையாடுகின்றன), ஆனால் நாம் ஒரு தலைப்பு சார்ந்த சேவையாளரில் பதிவு செய்தால், நம்முடைய சொந்த நலன்களை ஒத்த சமூககுழுவில் நாம் சேரலாம்.அதாவது நமக்கு ஆர்வமுள்ள இடுகைகளை மிக விரைவாகக் காணலாம்.
Mastodonஇன் கையாளுபவர் (handle) : ட்விட்டரில், Twitter.com எனும் ஒரேயொரு சேவையாளர் மட்டுமே உள்ளது Mastodon இல், ஒரே பயனாளர் ஒன்றிற்கு மேற்பட்ட சேவையகங்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்கலாம், எனவே நாம் ஒருவரின் Mastodon இற்கான கையாளுபவரைக் கோரும்போது, அவர்களின் கையாளுபவர் அவர்களின் சேவையகம் ஆகிய இரண்டு தகவல்களைக் கோருகின்றோம்:. இது பொதுவாக @tux@mastodon.example.com போன்று தோற்றமளிக்கின்ற (mastodon.example.com ஒரு உண்மையான தளம் எனக்கொள்க).
Mastodonஇன் இடைமுகத்தில் அவதாரத்தை சொடுக்குதல் செய்வதன் மூலம் நம்முடைய சொந்த Mastodon இன்கையாளுபவரைக் காணலாம்.
மற்றொரு பயனரைப் பின்தொடர்தல்: Mastodon இல் நண்பர்களைக் கண்டறிந்து பின்தொடர மூன்று வழிகள் உள்ளன: 1. நண்பரின் Mastodon இன்கையாளுபவரில் Mastodonஇன் நிகழ்வைப் பெறுதல், 2. Mastodon இடைமுகத்தில் நண்பரின் அவதாரத்தை சொடுக்குதல் செய்தல், 3. நண்பரின் Mastodonஇன் நிகழ்விற்கு செல்லுதல்
ஒவ்வொரு வாய்ப்பும் எவ்வாறு செயல்படுகிறது என இப்போது காண்போம்.
1.கையாளுபவர் மூலம் நண்பரைப் பின்தொடர்தல்: ஒரு நண்பர் அவரின் மாஸ்டோடனின் கையாளுபவரை நமக்குக் கொடுத்தால், அதை நம்முடைய மாஸ்டோடன் நிகழ்வில் தேடலாம், பின்னர் அவரைப் பின்தொடரலாம்.
நண்பரை கண்டுபிடிப்பதன் மூலம் பின்தொடர்தல் :மாஸ்டோடனில் யாரேனும் இடுகையிடுவதை கண்டால், அவரின் கூடுதல் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்புவதென முடிவு செய்தால், அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற பயனரின் சுயவிவரத்தில் அவரின் அவதாரம்( avatar) அல்லது கையாளுபவரை சொடுக்குதல் செய்க. , அவரைப் பின்தொடரத் துவங்க Follow எனும் பொத்தானைக் சொடுக்குதல் செய்க. .
அவர்களின் சேவையகத்திலிருந்து ஒரு நண்பரைப் பின்தொடர்தல்: நாம் Mastodon இல் பதிவு செய்யும் போது, நம்முடைய Mastodon சேவையாளரில் சுயவிவரப் பக்கத்தைப் பெறுவோம். நம்முடைய சுயவிவரப் பக்கத்தின் முகவரியானது நம்முடைய மாஸ்டோடனின் கையாளுபவர், அதன்தலைகீழி (inverted ) ஆகிய விவரங்களை கொண்டது. எடுத்துக்காட்டக, நம்முடைய மாஸ்டோடனின் கையாளுபவர் @tux@mastodon.example.com எனில், நம்முடைய சுயவிவரப் பக்கம் mastodon.example.com/@tux. என்றவாறு இருக்கும், நம்முடைய சுயவிவரப் பக்கத்திற்குச் சென்று Follow எனும் பொத்தானை சொடுக்குதல் செய்வதன் மூலம் பொதுமக்கள் நம்மைப் பின்தொடரலாம்.
நாம் விரும்பும் அல்லது நமக்கு பிடித்த ஒருஇடுகை : Twitter இல், நாம் ஒரு இடுகையை விரும்பினால் அதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் பார்வையிட்டு மட்டுமே செல்லமுடியும். ஆனால் Mastodon இல், இடுகையின் உள்ளடக்கத்திற்குக் கீழே உள்ள நட்சத்திர உருவப்பொத்தானைசொடுக்குதல் செய்வதன் மூலம் அவ்விடுகையை நாம் விரும்புவதாக குறிப்பிடலாம்.
ஒரு இடுகையை புகழ்ந்திடுதல்: இதற்காக ட்விட்டரில், நாம் ஒரு இடுகையை “re-tweet” செய்யவேண்டும். ஆனால் Mastodon இல், இடுகையின் உள்ளடக்கத்திற்குக் கீழே உள்ள இரட்டை அம்புக்குறி உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்வதன் மூலம் அவ்விடுகையை “புகழ்ந்திடலாம்” .
ஒரு பயனருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புதல் (DM) : ஒரு பயனருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்ப (டிவிட்டரில் நேரடி செய்தி அல்லது DM என அழைக்கப்படுகிறது), செய்தியை உருவாக்கும் போது உலகஉருண்டை போன்ற உருவப்பொத்தானைசொடுக்குதல் செய்க. அந்தஉலக உருண்டை போன்ற உருவப்பொத்தானானது ஒரு இடுகையின் தனியுரிமையை கட்டமைக்கின்றது. இதில் நமக்கு நான்கு வாய்ப்புகள் உள்ளன:
பொதுமக்கள் (Public): உலகில் உள்ள அனைவரும் நம்முடைய இடுகையைப் பார்வையிடலாம்.
பட்டியலிடப்படாதது(Unlisted) : Mastodon இல் உள்ள அனைவரும் இடுகையைப் பார்வையிட முடியும், ஆனால் இடுகைக்கான நேரடி இணைப்புடன் மட்டுமே. பார்வையிடமுடியும்
பின்தொடர்பவர்கள் மட்டும்(Followers only) : நம்மைப் பின்தொடர்பவர்கள் மட்டுமே நம்முடைய இடுகையைப் பார்வையிட முடியும். ,
குறிப்பிடப்பட்டவர்கள் மட்டும்(Mentioned people only ): நம்முடைய இடுகையில் @-எனக்குறிப்பிடப்பட்ட பயனர் மட்டுமே இடுகையைப் பார்வையிட முடியும். இது நேரடியான அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல்செய்திபோன்றதாகும்.
நண்பருடன் ஒரு இழையைப் பகிர்ந்துகொள்ளுதல்: சில நேரங்களில் ஒரு நண்பர் இரசிக்கக் கூடும் என நாம் நினைக்கும் இடுகைகளின் திரியைப் குறிப்பிட்ட பதிவிற்குப் பதிலளித்திடுமாறு நண்பருக்கு குறிப்பிடுவதன் மூலம் நண்பரின் கவனத்திற்கு இந்த திரியைக் கொண்டு வரலாம். இது இழையில் கிட்டத்தட்ட நிரந்தரமாக இருக்கும், எனவே இதை குறைவாகவே பயன்படுத்திடுக. ஒரு இழையைப் பற்றி நண்பரை எச்சரிப்பதற்கான சிறந்த வழி, அவ்விழைக்கான இணைப்பைப் பெற்று, நண்பரை அதற்குப் பரிந்துரைப்பதாகும். பொது இடுகைக்கான நேரடி இணைப்பைப் பெற, இடுகை உள்ளடக்கத்தின் கீழ் உள்ள நீள்வட்ட பொத்தானைசொடுக்குதல் செய்து இடுகையிட இணைப்பை நகலெடு( Copy link to post) என்பதைத் தேர்ந்தெடுத்திடுக.
ஒரு சமூககுழுவைக் கண்டறியதல் : ஒரு தலைப்பு அல்லது ஆர்வமிகுசெயலைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட சமூககுழுவினைதை Mastodon இல் தேடுவதாக இருந்தால், முக்கிய சொற்களைத் தேட தேடுதல் புலத்தைப் பயன்படுத்திடுக. எடுத்துக்காட்டாக, Ansible இன் பிற பயனர்களைத் தேடுவதாக கொண்டால், எனக்குறிப்பிட்டுத் தேடுதலை துவங்கிடலாம். அதற்கான முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைகாண, முக்கிய சொல்லைக் குறிப்பிட்டுத் தேடலாம். ஒரே மாதிரியான ஆர்வமுள்ள சிலரை கண்டறிந்ததும், அவர்கள் புகழ்ந்திடுகின்ற இடுகைகளின் அடிப்படையில் மேலும் பலரைக் கண்டறியலாம்.
அமைப்புகள்: ட்விட்டரில் ஒரேயொரு இடைமுகம் மட்டுமேயுள்ளது. ஆனால் Mastodonஆனது இரண்டு பயனாளர் இடைமுகங்களைக் கொண்டுள்ளது
பயனாளர்இடைமுகங்கள்(UI): மாஸ்டோடனில்இயல்புநிலை இணைய இடைமுகம்(default web interface),மேம்பட்ட இணைய இடைமுகம் (advanced web interface )ஆகிய இரு இடைமுகங்கள் உள்ளன., இயல்புநிலை இடைமுகம் என்பது நாம் பின்தொடரும் நண்பர்களின் செயல்பாட்டைக் காட்டும் ஒற்றையான நெடுவரிசைக் காட்சியாகும். அனைத்து மாஸ்டோடன் நிகழ்வுகளின் அறிவிப்புகள் அல்லது செயல்பாட்டைகாண, அந்த பக்கத்தின் வலது புறத்தில் அதற்கானஇணைப்புகள் உள்ளன., மாஸ்டோடனின் விருப்பத்தேர்வுகளைத்(Mastodon preferences) திறக்க நம்முடைய பெயரின் வலது பக்கத்தில் உள்ள வெளிப்படுத்தல்( disclosure) முக்கோணத்தினை சொடுக்குதல் செய்திடுக. விருப்பத்தேர்வுகளின் பலகத்தில், நம்முடைய UI மேம்பட்ட பயன்முறையில் அமைக்க Enable advanced web interface என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்திடுக., மேம்பட்ட இணைய இடைமுகம் என்பது நாம் பின்தொடரும் நண்பர்களின் செயல்பாடு, தனிப்பட்ட அறிவிப்புகள் போன்ற பிற விருப்பங்களைக் காண்பிக்கும் பல நெடுவரிசை தளவமைப்பு ஆகும்.
பரவலாக்கப்பட்ட இணையத்தில் சேருதல்: மாஸ்டோடன் ஆனது தருக்கமேம்படுத்துதல், விளம்பரம் ஆகியவை இல்லாமல் தனித்துவமான பார்வையாளரை அனுமதிப்பதன் மூலம் இணையத்தின்போக்கில் நமக்கான இடத்தை மீட்டெடுக்கும் மிகப் பெரிய முக்கியமான வெற்றிக்கல்லாகும். , Mastodon இல் சேரும்போது திறமூலத்தையும் முழு பயனர் கட்டுப்பாட்டையும் பெறுவோம் .

 

%d bloggers like this: