இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான்.
நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு தான் அதை இணைய உலகில் சிறந்த தரவுதளமாக நீடிக்க செய்திருக்கிறது.
870 க்கும் விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய இணையதளங்கள் இணைய வெளியை நிரப்புகின்றன. இந்த இணையதளங்களில் பலவும் ஆங்கிலத்தையும் கடந்து, பல வேறுபட்ட மொழிகளிலும் தரவுகளை, வாசகர்களுக்கு விருந்தளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, சுமார் 7 கோடி காப்புரிமை அற்ற, திறந்த நிலை(open source) பயன்பாட்டிற்குரிய புகைப்படங்களை கொண்டிருக்கும் Wikimedia commons இணையதளத்தை குறிப்பிடலாம். அதேபோல 72 மொழிகளில், 50 லட்சத்திற்கு அதிகமான கட்டுரைகளைக் கொண்டு மிகப்பெரிய திறந்த நிலை இணைய நூலகமாக திகழ்கிறது Wikisource இணையதளம். Wikidata இணையதளத்தில் உங்களால், பிற விக்கிபீடியா தொடர்புடைய இணையதளங்களில் பயன்படுத்தப்படும், சுமார் பத்து கோடி தரவுகளை அணுக முடியும்.
இவ்வளவு சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லும் விக்கிபீடியா இணையதளமானது, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டது. முதலில், வெறும் பத்து பேரால் தொடங்கப்பட்ட இந்த இணையதளம். தற்பொழுது, லட்சக்கணக்கான பங்களிப்பாளர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. எவ்வித லாப நோக்கமும் இன்றி, தனது உலகளாவிய வாசகர்களுக்கு தரமான நம்பகமான செய்திகள் மற்றும் தரவுகளை வழங்குவதை விக்கிபீடியா உறுதி செய்கிறது. இன்னும் கூட, விக்கிபீடியா தனது கரங்களை நீட்டிக் கொண்டுதான் இருக்கிறது. தினம்தோறும் மேம்படுத்த பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அதனால் தான், உலகில் அதிக அளவில் பார்வையிடப்படும் முதல் 10 இணையதளங்களில் விக்கிப்பீடியாவிற்கு எப்பொழுதும் இடம் உண்டு.
தரவுகளை பதிவிடுவதற்கும், திருத்துவதற்கும்,மேம்படுத்துவதற்கும் எண்ணில் அடங்காத கருவிகளை பயன்படுத்துகிறது விக்கிபீடியா. இதன்மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தும், தரவுகளை உடனுக்குடன் பெற முடியும்.
நீங்கள் விக்கிபீடியா உடன் தொடர்புடைய எந்த இணையதளத்தை, உலாவினாலும், மீடியாவிக்கி(mediawiki) எனப்படும், விக்கிபீடியாவின் அடிப்படை மென்பொருளோடு தொடர்பு கொள்கிறீர்கள். இது விக்கிப்பீடியாவின் தரவுகளை மேம்படுத்தும் அடிப்படை மென்பொருள் ஆகும். இது பல நூற்றுக்கணக்கான கூடுதல் அம்சங்களோடு வருகிறது. அவற்றை நிறுவி வேறு அதிகப்படியான தரவுகளை பெற முடியும். அவற்றை முழுவதுமாக பட்டியலிட நினைத்தால், இந்த கட்டுரை போதாது! சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிடுகிறேன்.
• visual editor: விக்கிப்பீடியாவில் இருக்கும் WYSIWYG தேர்ந்த வார்த்தை மாற்றி(rich text editor)
•wikispace: விக்கிப்பீடியாவில் இருந்து பெறும் தகவல்களை சேமித்து வைக்கும் களஞ்சியம்.
Media wiki
நீங்கள் நினைப்பதை விடவும், விக்கிப்பீடியா மிகவும் பெரிய தரவு தளம். எனவே நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் தங்களது தரவுகளை சேமிக்கவும்,ஒருங்கமைக்கவும் விக்கிபீடியாவை பயன்படுத்துகிறது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய விண்வெளி அமைப்பான நாசா, தனது விண்வெளி தொடர்பான தகவல்களை ஒருங்கமைக்க விக்கிப்பீடியாவை பயன்படுத்துகிறது.
விக்கிப்பீடியாவை மேம்படுத்துவதில் இணையத்தில் இருக்கும் பல கருவிகளும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. Internet archive bot எனும் கருவியின் ஊடாக பழைய இணைய இணைப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. இதுபோலே நூற்றுக்கணக்கான கருவிகள் நமக்கு கிடைக்கும் தரவை மேலும் மெருகேற்றுகின்றன.
மேலும், விக்கிபீடியாவில் பயனர்களின் ஈடுபாடு அதிகரிக்கும் விதமான நிகழ்ச்சிகள், உலகளாவிய அளவில் நடத்தப்படுகின்றன. அதில் கலந்துகொண்டு அதிகப்படியான கட்டுரைகளை எழுதும் பங்களிப்பாளர்களுக்கு, சிறப்பு பரிசுகளும்,விருதுகளும் வழங்கப்படுவதையும் காணமுடிகிறது.
இதன் மூலம், மிகக் குறுகிய காலத்திலேயே விக்கிப்பீடியாவில் அதிகப்படியான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மேலும், பலரும் விக்கிப்பீடியாவில் எழுதுவது தொடர்பான வகுப்புகளையும் நடத்துகின்றனர்.
Kiwix எனும் கருவி உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் விக்கிப்பீடியாவுக்கான வாசிப்பு கருவி ஆகும். இதைக் கொண்டு, இணைய இணைப்பு இன்றி நம்மால் கட்டுரைகளை வாசிக்க முடியும். இது கல்வி நிலையங்களில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நீங்கள், அடுத்த முறை ஒரு கட்டுரையை படிக்கும் போது கூர்ந்து கவனிங்கள் நாளுக்கு நாள் அந்த கட்டுரையில், புதுப்புது தகவல்கள் இணைக்கப்படலாம். அவை, அனைத்துமே தன்னலம் பாராத, விக்கிபீடியாவின் உலகளாவிய பங்களிப்பாளர்களின் அரும்பணிதான்.
2001 ஆம் ஆண்டு, வெறும் 10 நிரலாக்க அறிஞர்களோடு( developers) தொடங்கப்பட்ட விக்கிபீடியாக்கு, தற்பொழுது கோடிக்கணக்கான பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள், என்பது தான் அதன் சிறப்பு! பலமொழி மொழிபெயர்ப்பாளர்கள், பரிசோதகர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் தொழில்நுட்ப ஆய்வாளர்கள், தொழில்நுட்ப இயக்குனர்கள், வலைதலை இயக்குனர்கள் உட்பட விக்கிபீடியாவில் இருக்கும் முகங்களுக்கு பஞ்சமில்லை.
New developers நடத்திய ஆய்வின்படி, அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இருந்து, அதிகப்படியான விக்கிபீடியா பங்களிப்பாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக வட்டார மொழிகளாக இருக்கும், தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், அதிகப்படியான எழுத்தாளர்கள் விக்கிபீடியாவில் இருப்பதை உணர முடிகிறது. இவர்களின் மூலமாக, வாசகர்களால் தங்களது தாய் மொழியிலேயே தரவுகளை பெற முடிகிறது.
இவ்வளவு சிறப்புகளால் நிரம்பி வழியும், கட்டற்ற தரவு களஞ்சியமான “விக்கிப்பீடியா”வில் நீங்களும் பங்களிக்க விரும்பினால், அது தொடர்பாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேற்படி,இந்த கட்டுரையானது opensource.com இணையதளத்தில் srishti sethi அவர்களால் எழுதப்பட்டது. இதை மொழிபெயர்த்து, எளிமைப்படுத்தி, உங்கள் மத்தியில் வெளியிடுகிறேன்.
இந்தக் கட்டுரையில் ஏதேனும் பிழைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், தயக்கமின்றி என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவியுங்கள்.உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
மொழிபெயர்த்தவர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில்)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ,
கணியம் அறக்கட்டளை.