இந்த கட்டுரையானது குவாண்டம் கணினித்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திருப்புமுனைகளுக்கான ஒரு தொடக்கநிலை வழிகாட்டியாகும்
பல பத்தாண்டுகளாக, குவாண்டம் கணினிகள், விண்வெளியை விடக் குளிரான வெப்பநிலையில் இயங்க வேண்டிய, எளிதில் பாதிப்படையக்கூடிய ஆய்வகச் பரிசோதனைகளாகவே இருந்துவந்தன. இன்று, 2026-ல், நாம் “தர்க்கரீதியான கியூபிட் சகாப்தத்தின்” பிறப்பைக் காண்கிறோம். நாம் இனி வெறுமனே அதிக கியூபிட்களைச் சேர்க்கவேண்டியதில்லை; வரலாற்றில் முதன்முறையாக அவற்றை நம்பகத்தன்மையுடன் செயல்பட வைக்கின்றோம்.
- “இரைச்சல்(Noisy)” சகாப்தத்தின் முடிவு
சமீப காலம் வரை, குவாண்டம் கணினிகள் NISQ என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற இரைச்சலின் இடைநிலை-அளவு குவாண்டம்(Noisy Intermediate-Scale Quantum ) எனும் சகாப்தத்தில் இருந்தன. இதன் பொருள், நம்மிடம் நூற்றுக்கணக்கான கியூபிட்களைக் கொண்ட கணினிகள் இருந்தபோதிலும், அவை “இரைச்சலானவையாக( noisy)” இருந்துவந்தன—சிக்கலான பணிகளுக்குப் பயன்பட முடியாத அளவுக்கு அவை அதிக தவறுகளைச் செய்தன.
2026-ஆம் ஆண்டின் திருப்புமுனை: கூகிள் , ஐபிஎம் போன்ற முக்கிய நிறுவனங்கள் இறுதியாக “பிழை திருத்த வரம்பை( Error Correction Threshold )” கடந்துவிட்டன. கூகிளின் Willow Chip: 2025-இன் பிற்பகுதியிலும் 2026-இன் முற்பகுதியிலும், ஒரு அமைப்பில் அதிக பருப்பொருளாலான கியூபிட்களைச் சேர்க்கும்போது, பிழை விகிதம் உண்மையில் குறைந்தது என்பதை கூகிள் நிரூபித்தது. இது ஒரு “புனிதக் கோப்பையின்( holy grail )” தருணமாக இருக்கின்றது. பல சிறிய, உடையக்கூடிய பருப்பொருளாலான கியூபிட்களால் ஆன, நிலையான, மெய்நிகர் கியூபிட்களாலான “தர்க்கரீதியான கியூபிட்களை( Logical Qubits )” நம்மால் உருவாக்க முடியும் என்பதை இது நிரூபித்தது.
மைக்ரோசாப்ட்டின் & அணு(Atom) கணினி: அவர்கள் சமீபத்தில் 28எண்ணிக்கையிலான தர்க்கரீதியான கியூபிட்களைப் பயன்படுத்தும் ஒரு அமைவை அறிவித்தனர். இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்தக் கியூபிட்கள், கணக்கீடுகளை பாதியிலேயே “முறிந்து( breaking )” போகாமல் இயக்குவதற்குப் போதுமான அளவு நிலையானவை.
- ஒரு கியூபிட்டை உருவாக்குவதற்கான புதிய வழிகள்
நீண்ட காலமாக, ஒரு குவாண்டம் கணினியை உருவாக்குவதற்கான ஒரே வழி, மீக்கடத்தியின் சுழல்களைப்( Superconducting Loops ) (அதாவது புகைப்படங்களில் நாம் காணும் பிரம்மாண்டமான தங்க “சரவிளக்குகள்” போன்று) பயன்படுத்துவதே ஆகும். 2026-இல் இரண்டு மாபெரும் போட்டியாளர்களின் எழுச்சி காணப்பட்டுள்ளது:
நரம்பணு(Neutral Atom) கணினி: QuEra , Atom Computing போன்ற நிறுவனங்கள் தற்போது தனிப்பட்ட அணுத்துகள்களை அவற்றின் இடத்தில் வைத்திருக்க லேசர் ஒளிக்கற்றைகளை (ஒளியியல் இடுக்கி) பயன்படுத்துகின்றன. அவர்கள் இந்த அமைப்புகளை 6,000 அணுக்களுக்கும் மேலாக வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளனர். தங்க சரவிளக்குகளைப் போன்றில்லாமல், இவை பெரும்பாலும் மிகவும் எளிமையான குளிரூட்டும் அமைப்புகளுடன் இயங்கக்கூடியவை.
Photonic (ஒளி அடிப்படையிலான) கணினி: PsiQuantum போன்ற நிறுவனங்கள் பொருளுக்குப் பதிலாக ஒளித் துகள்களை (photons) பயன்படுத்துகின்றன. அணுத்துகளைப் போன்று ஒளியானது வெப்பத்தை உணராததால், இந்தக் கணினிகள் காலப்போக்கில் அறை வெப்பநிலையில் இயங்கக்கூடும், இது அவற்றை வழக்கமான தரவு மையங்களில் நிறுவுகைசெய்வதை மிகவும் எளிதாக்குகிறது.
- நடப்பு உலகப் பயன்பாடுகள்: முன்னோடித் திட்டங்கள் முதல் உற்பத்தி வரை
“குவாண்டத்தின் பயன்( Quantum Advantage)” எனும் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை நாம் காண்கிறோம்—அதாவது, ஒரு குவாண்டம் கணினி, ஒரு பாரம்பரிய மீத்திறன்கணினியை விட சிறப்பாகவோ அல்லது வேகமாகவோ ஒரு செயலைச் செய்கிறது.
2026ஆம் ஆண்டில் எந்தெந்ததுறையில் வளர்ச்சி
மருத்துவம்: புரதங்கள் எவ்வாறு மடிப்பாகின்றன என்பதை உருவகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் “குவாண்டம் செய்யறிவை” (Quantum AI) பயன்படுத்துகின்றனர், இது அல்சைமர் போன்ற நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்பை விரைவுபடுத்துகிறது.
ஆற்றல்: குவாண்டம் உருவகப்படுத்துதல்கள், அதிக திறன் கொண்ட மின்கலன்களுக்கான புதிய பொருட்களையும், மேலும் திறமையான சூரிய மின்கலன்களையும் வடிவமைக்க உதவுகின்றன.
நிதி: JPMorgan Chase போன்ற வங்கிகள் “(Portfolio Optimization)”எனும் குவாண்டம் வழிமுறைகளை பரிசோதித்து வருகின்றன—அதாவது, நொடிகளில் ஆயிரக்கணக்கான நிறுவனபங்குகளின் சரியான சமநிலையைக் கண்டறிகின்றன.
- “இப்போது அறுவடை செய், பிறகு மறைகுறியாக்கம் செய்” என்ற எச்சரிக்கை
2026-ல் ஏற்படும் விரைவான முன்னேற்றத்துடன், இணையப் பாதுகாப்பு (Cybersecurity) தொடர்பான அவசரம் அதிகரித்து வருகிறது. நவீன மறைகுறியாக்கத்தை உடைக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு கணினி வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகக்கூடும் என்றாலும், தாக்குதல்செய்பவர்கள் தற்போது மறைகுறியாக்கப்பட்ட தரவுகளைத் திருடி சேமித்து வருகின்றனர், ஒரு குவாண்டம் கணினி கிடைத்தவுடன் அதை மறைகுறியாக்கம் செய்யத் திட்டமிடுகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு குவாண்டத்தின் பிந்தைய மறைகுறியாக்கத்தின் (Post-Quantum Cryptography – PQC) ஆண்டாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் நமது தரவுகளைப் பாதுகாக்க, அரசாங்கங்களும் வங்கிகளும் தங்கள் பாதுகாப்பை “குவாண்டம்-எதிர்ப்பு” கணிதத்திற்கு மேம்படுத்த போட்டி போடுகின்றன.
- தற்போதுநாம் ஒரு குவாண்டம் கணினியை எவ்வாறு அணுகலாம்
2026-ல் ஒரு குவாண்டம் கணினியைப் பயன்படுத்த நமக்கெனதனியாகவொரு ஆய்வகம் தேவையில்லை. குவாண்டம்-ஒரு-சேவையாக (Quantum-as-a-Service – (QaaS)) என்பதன் மூலம், மடிக்கணினி வைத்திருக்கும் எவரும் Qiskit போன்ற மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதி, மேககணினி வாயிலாக ஒரு உண்மையான குவாண்டம் செயலியில் அதை இயக்கலாம்.
IBMஆனது குவாண்டம், மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு கட்டணமற்ற அடுக்கினை (free tier) வழங்குகிறது.
(Amazon Braket) , (Azure Quantum) ஆகியவை, பல்வேறு வகையான குவாண்டம் வன்பொருள்களில் (Ion, அணு(Atom) அல்லது மீத்திறன்கடத்தி) குறிப்பில் காலஅளவிற்கு வாடகைக்கு எடுக்க வணிகநிறுவனங்களுக்கு அனுமதிக்கின்றன.
குவாண்டம் கணினி என்பது இனி வெறும் கோட்பாடு அன்று. நாம் “இரைச்சலால்(noisy)” ஆன இயந்திரங்களை உருவாக்குவதிலிருந்து, நம்பகமான, பிழை திருத்தப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கு நகர்ந்துவந்துள்ளோம். நாம் இன்னும் இணையத்தில் உலாவவோ அல்லது விளையாடவோ அவற்றைப் பயன்படுத்தவோயில்லை என்றாலும், வேதியியல், ஆற்றல்,தளவாடங்கள் போன்ற துறைகளில் உலகின் மிகவும் கடினமான கணிதப் பிரச்சனைகளை அவை தீர்க்கத் தொடங்கியுள்ளன.
இப்போது “குவாண்டம் தசாப்தம் (Decade)” அதிகாரப்பூர்வமாகவேத் தொடங்கிவிட்டது.