விண்டோஇயக்கமுறைமைஅமைவின்நிருவாகி க்கான திறமூல கருவிகள்

கணினி நிருவாகிகளின் அல்லது கணினி அமைவுநிருவாகிகளின் மென்பொருட்களானவை உள்ளமைவுகள், நிருவாகப் பணிகள், பாதுகாப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக வலைபின்னலில் இணைக்கப்பட்ட கணினி அமைப்புகளில். திறமூல கருவிகள் அமைவுநிருவாகிகளின் பணியை எளிதாக்குகின்றன, அவைகளுள் ஒரு சில சிறந்தவை பின்வருமாறு.
1.PowerShell மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டஇது முதன்முதல் கருத்தில் கொள்ளும் கருவிகளில் ஒன்றாகும். இது கட்டமைப்பு மேலாண்மை , தானியங்கிபணி (குறுக்கு-தளம்) க்கான ஒரு கட்டமைப்பாகும், இது உரைநிரலாக்க மொழியையும் கட்டளை வரி உரைபொதிகளையும் கொண்டுள்ளது. அமைவுநிருவாகிகளுக்கான இந்த திறமூல கருவி விண்டோ, லினக்ஸ் , மேக் ஆகிய இயக்கமுறைமை நிருவாகிகளை கட்டுப்படுத்தவும் தானியங்கியாக செயல்படுத்தவும் நடைமுறையில் செயல்படுகின்ற வலைபின்னல் கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. Get-Module, remote management, Get-Command, Get-Help, போன்ற அமைவுநிருவாகிளுக்கு இது பல்வேறு வசதிவாய்ப்புகளை வழங்குகிறது. இது முதலில் விண்டோஇக்கமுறைமைக்காக வடிவமைக்கப்பட்டது, பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனமானது லினக்ஸிலும் செயல்படுமாறு விரிவாக்கம் செய்தது. தொலைதூரபணிகள், பின்புல பணிகள், திட்டமிடப்பட்ட பணிகள், Steppable pipeline (இது உரைநிலாக்க தொகுதிகளை பிரிக்கலாம்), உரைநிரல் பிழைத்திருத்தம், பிழைகளை கையாளுதல், கட்டுப்படுத்தப்பட்ட இயக்க இடைவெளிகள் (இது PowerShell run காலி இடங்களை கட்டுப்பாடுகள் மூலம் உருவாக்க உதவுகிறது), தாவல் விரிவாக்கம், இணைய அணுகல், இணைய சேவை (PSWS), இணையத்தின் நேரடி புதுப்பித்தல் உதவி, பணிப்பாய்வு, விரும்பிய நிலை கட்டமைப்பு (DSC) ஆகிய பல்வேறு வசதிவாய்ப்புகளை இது வழங்குகின்றது
2. Git இது ஒரு சிறிய கருவியாகும், இது சிறியசெயல்திட்டங்கள்முதல் , பெரிய செயல்திட்டங்கள் வரை அனைத்தையும் சிறந்த செயல்திறனுடன் கையாளக்கூடியது. இது ஒரு திறமூல விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பாகும், இது பயனாளரின் தேவைகளுக்கு ஏற்ப மூலக் குறிமுறைவரிகளை மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது ஒரு கிளையின் மாதிரியைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு அமைவுநிருவாகிக்கும் பல்வேறு வளாக கிளைகளை உருவாக்க உதவுகிறது. பல்வேறு பணிப்பாய்வு, வண்ணக் கட்டுப்பாடுகள், எளிதான நிலைப் பகுதிகள், குறிச்சொற்களுக்கு நல்ல GPG கையொப்பமிடுதல் போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது. இந்த அற்புதமான பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பானது பயனாளருக்கு கட்டண செயல்பாடுகளை வழங்கும் பிற அமைப்புகளைப் போலன்றி செயல்பாடுகளை கட்டணமில்லாமல் வழங்குகிறது. இதன் மூலம் மாற்றங்களைக் கண்காணிப்பது எளிது. ,அதோடு இதன்மூலம் சிக்கல்களை எளிதில் சரிசெய்ய முடியும். , மேலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட களஞ்சியத்தின் காரணமாக இதனஉடைய ஒத்துழைப்பு எளிமையானது.
3. Bootstrap இது முன்னர் ட்விட்டரின்(Twitter) உண்மைநகல் என்று அழைக்கப்பட்டது, மேலும் திறமூல கருவித்தொகுப்புகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான கட்டமைப்பாக ட்விட்டரால் இது உருவாக்கப் பட்டது. பயனாளர்கள் இதன் மூலம் CSS, ஜாவாஸ்கிரிப்ட் , HTML ஆகியவற்றில் பயன்பாடுகளை வடிவமைத்து உருவாக்கலாம். இது பயனாளர்களுக்கு கட்டணமில்லாத வசதிகளை வழங்கும் அமைவு நிருவாகிகளுக்கான திறமூல கட்டமைப்பாகும். இது பொத்தான் கூறுகளையும் , தனிப்பயன் அட்டைகளையும் வழங்குகிறது., இது CSS இன் உப்பி பிபெருக்குவதைக் குறைப்பதற்கான பயன்பாட்டு இனங்களில் கவணம் செலுத்துகிறது. , இது நீட்டிக்கப்பட்ட செயலியின் தனிப்பயன் பயன்பாட்டு இனங்களைக் கொண்டுள்ளது.
4. Kubernetes இது தனியாக வடிவமைத்து உருவாக்கியதாகும், இது அமைவுநிருவாகிகளுக்கு கிடைமட்ட அளவை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாகும். CPUஇன் பயன்பாட்டின் படி, ஒற்றை கட்டளையின் உதவியுடன் (பயனாளர் இடைமுகத்தின் மூலம்) அவர்கள் ஒரு பயன்பாட்டை அளவிட முடியும். Apt-get அல்லது yum போன்ற எந்தவொரு தொகுப்பு நிருவாகியுடனும் பயனாளர்கள் இதனை நிறுவுகை செய்திடலாம். இந்த திறமூல கருவி கொள்கலன் வலைபின்னலை உள்ளமைக்க உதவும் முனைமங்கள் எனப்படும் வெவ்வேறு சேவையகங்களைக் கொண்டுள்ளது இந்த முனைமங்கள் ஒவ்வொன்றும் ஒரு கொத்தான குழுவை ஒரு kubelet மூலம் தொடர்பு கொள்கின்றன., மேலும் தரவுகளை முன்கூட்டியே, கலப்பின மேககணினி, பொது மேககணினி ஆகியவற்றின் உள்கட்டமைப்பிற்குள் நகர்த்த முடியும். இது தானியங்கி திட்டமிடலை வழங்குகிறது. , இது ஒரு சுய சேவை திறனைக் கொண்டுள்ளது. , பயனாளர்கள் செயல்முறைக்கு தானியங்கி rollouts களைப் பயன்படுத்தலாம், மேலும் இதன்வாயிலாக மேம்படுத்துதல், உருவாக்குதல் ,பரிசோதனை, ஆகியவற்றிற்கு பயனாளர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பெறுவார்கள்.
5. SystemRescueCD விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான இந்த திற மூல கருவி ஒரு லினக்ஸ் அடிப்படையிலான தொகுப்பு ஆகும், இது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் கணினிகளை சரிசெய்ய பயன்படுகிறது. இதனைபயன்படுத்தி கொள்வதற்காகவென இதனுடைய ISO கோப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், இதன் மூலம் துவக்கக்கூடிய யூ.எஸ்.பி ஐ உருவாக்க அதைப் பயன்படுத்தலாம். இது btrfs, xfs, ext2 / ext3 / ext4, vfat, ntfs, reiserfs, nfs , samba போன்ற பல்வேறு கோப்பு வடிவங்களை ஆதரிக்கிறது. இது கோப்பில் திருத்தம் செய்தல், துவக்க பதிவேற்றுதல் மறுசீரமைப்புசெய்தல் பிணைய த்தினைசரிசெய்தல் ஆகியவற்றிற்கான கருவிகளை வழங்குகிறது. வட்டு பகிர்வு அட்டவணையைத் திருத்துவதற்கு இது fdisk எனும் ஒரு வசதியைக் கொண்டுள்ளது. , இது வட்டுகளின் நினைவகங்களைப் பிரிப்பதற்கும் இந்த பகிர்வுகளின் அளவை மாற்றுவதற்கும் GParted , GNU ஆகிய பிரிக்கப்பட்ட திறன்களை வழங்குகிறது. , மீட்டெடுக்கக்கூடிய தரவுகளைப் பிரித்தெடுப்பதற்கு ஒரு rescue வசதி இதில் உள்ளது. ,இது காப்பகப்படுத்தல், ஒதுக்கப்படாத திறன்களை வழங்குகிறது.
6. Docker விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான சிறந்த திறமூல கருவிகளில் இதுவும் ஒன்றாகும், ஏனெனில் இதன்வாயிலாக பயன்பாடுகளை உருவாக்கி மெய்நிகர் கொள்கலன்களில் இயக்க முடியும். இதில் – Docker சமூக பதிப்பு (DCE) , Docker நிறுவன பதிப்பு (DEE) ஆகிய இரண்டு வெவ்வேறு பதிப்புகள் உள்ளன. DCE பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கருவிகளை வழங்குகிறது, மேலும் DEE ஆனது தகவல்தொழில்நுட்பத் துறைகளுக்கு பல்வேறு கட்டமைப்பு செயல்பாடுகளை வழங்குகிறது. இதில் குறைந்த மேல்நிலைகளையும் , நெகிழ்வுத்தன்மையை யும்வழங்குகின்ற சிறிய தடம் உள்ளது. இதுபயன்படுத்த எளிதானது விரைவான உள்ளமைவை வழங்குகிறது. , இது உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகின்றது , இது பயன்பாட்டு தனிமைப்படுத்தலை வழங்குகிறது. இது ஒரு சிறந்த பாதுகாப்பு மேலாண்மைகருவியாக உள்ளது.
7. Clonezilla இது விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான ஒரு திறமூல கருவியாகும், வட்டு உண்மைநகல், உருப்படம்(imaging )ஆகிவற்றிற்கானது. இது ext2, ext3, ReiserFS, xfs , jfs போன்ற பல்வேறு கோப்பு வடிவமைப்புகளை ஆதரிக்கிறது. தவிர, இதுவிண்டோ கணினியில் உள்ள குனு / லினக்ஸ் , விண்டோவின் cloning இயக்க முறைமைகளுக்கான FAT / NTFS கோப்புகளையும் ஆதரிக்கிறது. இந்த கருவி பல வட்டுகளை cloning செய்ய multicast ஐப் பயன்படுத்துகிறது.இதில் – Clonezilla Live , Clonezilla SE.. ஆகிய இரண்டு பதிப்புகள் உள்ளன இது பல்வேறு கோப்பு முறைமை ஆதரவை வழங்குகிறது. , இது தனிப்பயனாக்கக்கூடிய imaging , cloning வழங்குகிறது., இதில்AES-256 குறிக்கம் உள்ளது.
8. லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பு (Windows Subsystem for Linux (WSL)) விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான இந்த திறமூல கருவி விண்டோ 10 இன் புதிய வசதியாகும். இணைய பயன்பாடுகளை உருவாக்குகின்ற அல்லது திறமூலசெயல் திட்டங்களில் பணிபுரிகின்ற மேம்படுத்துநர்கள் இந்த கருவியின் உதவியுடன் சொந்த லினக்ஸ் கட்டளை வரி கருவிகளை விண்டோவில் நேரடியாக இயக்க முடியும். லினக்ஸிற்கான விண்டோ துணை அமைப்பு (WSL) Bash, வெவ்வேறு கட்டளைவரி லினக்ஸ் கருவிகள், ரூபி அல்லது பைதான் கணினிமொழி போன்ற பிற லினக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துகிறது, இதன்வாயிலாக நம்மால் விண்டோவில் உள்ள கருவித்தொகுப்பை எளிதாக பயன்படுத்தமுடியும். விண்டோ பயனாளர்கள் இந்த கருவி மூலம் உண்மையான Ubuntu realspace ஐயும் இயக்கலாம். மேம்படுத்துநர்கள் விண்டோவில் லினக்ஸ் கட்டளை வரி கருவியைப் பயன்படுத்தலாம். , இது விண்டோவிற்கான உபுண்டு லினக்ஸின் கலவையான கருவியாகும். , பயனாளர்கள் விண்டோவில் கருவித்தொகுப்பைப் பயன்படுத்தலாம்.
9. Cordova விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான இந்த திறமூல கருவி கட்டணமில்லாதது அப்பாச்சியால் வழங்கப்படுகிறது. JS, CSS , HTML உடன் கைபேசி பயன்பாடுகளை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த திறமூல கருவி ஒரு மேம்படுத்துநருக்கு iOS, Windows, FireOS, Android, LGwebOS போன்ற பல்வேறு தளங்களுக்கான பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது. இதுவெவ்வேறு தளங்களின் சாதன செயல்பாடுகளை அணுகக்கூடிய சொந்த கொள்கலனில் ஒரு பயன்பாட்டை மடிக்க அனுமதிக்கின்றது. இது ஒரு கட்டளை வரி இடைமுகத்தைக் கொண்டுள்ளது. , இது பயன்பாட்டின் தளத்தை உருவாக்குவதற்கான முக்கிய கூறுகளை வழங்குகிறது. , இது ஒரு நல்ல செருகுநிரல்களைக் கொண்டுள்ளது..
10. Wireshark விண்டோ அமைவுநிருவாகிகளுக்கான இந்த திறமூல கையடக்க பகுப்பாய்விஆனது கட்டணமற்றது மேலும் பகுப்பாய்வு, பிணையத்தினை சரிசெய்தல் தகவல் தொடர்பு நெறிமுறைகளின் மேம்டுத்துதலுக்கு பெரிதும்பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய உண்மையான பெயர் Ethereal ஆகும், ஆனால் வர்த்தக முத்திரை சிக்கல்கள் காரணமாக மே 2006 இல் Wireshark எனும் மறுபெயரிடப்பட்டது. இது TShark எனப்படும் முனைமம் அடிப்படையிலான பதிப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது GNU General Public License எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்படாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை லினக்ஸ், விண்டோஸ், பி.எஸ்.டி, சோலாரிஸ் , மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படுத்திட முடியும். இதன்வாயிலாக மூல யூ.எஸ்.பி போக்குவரத்தை கைப்பற்ற முடியும். , கைப்பற்றப்பட்ட போக்குவரத்தின் வெளியீட்டை வடிகட்டிடும் வசதியை வழங்குகின்ற பல்வேறு வடிப்பான்கள் இதில் உள்ளன. , புதிய நெறிமுறைகளைப் பிரிக்க பயனாளர்கள் செருகுநிரல்களை உருவாக்கலாம். , பயனாளர்கள் பல்வேறு வகையான வலைபின்னல்களிலிருந்து தரவுகளைநேரடியாகப் படிக்கலாம்

%d bloggers like this: