Category Archives: Migration

எந்தவொரு லினக்ஸ் விநியோகத்தையும் விண்டோ இயக்கமுறைமை போன்ற உணர நான்கு வழிகள்

குறிப்பாக சுட்டியைமட்டுமே பயன்படுத்தமுடியும் கட்டளை வரியைப் பயன்படுத்தத் தயாராக இல்லை என்றால். விண்டோஇயக்கமுறைமையிலிருந்து லினக்ஸுக்கு மாறுவது கடினமானதாக இருக்கலாம், முற்றிலும் புதியவராக இருந்தால், சூழல் பட்டிகளில் இல்லாத ஒரு வாய்ப்பிற்காக அல்லது லினக்ஸில் பிணைக்கப்படாத விண்டோ குறுக்குவழிவிசையைப் பயன்படுத்த முயற்சிக்கும் போதுகண்டிப்பாக அவ்வாறான திசைதிருப்புகின்ற அலையால் பாதிக்கப்பட்டிருப்போம். நல்வாய்ப்பாக, விண்டோஇயக்கமுறைமையிலிருந்து புதிய மாற்றங்களுக்கு மிகவும் வசதியாக எந்தவொரு லினக்ஸ் விநியோகத்தையும் மாற்றியமைக்க பல்வேறுவழிகள் உள்ளன. அது உபுண்டு, ஃபெடோரா அல்லது ஆர்ச் அடிப்படையிலான எந்தவொரு லினக்ஸின் விநியோகமாக… Read More: எந்தவொரு லினக்ஸ் விநியோகத்தையும் விண்டோ இயக்கமுறைமை போன்ற உணர நான்கு வழிகள் »

Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி

பல்வேறு காரணங்களுக்காக தனியுரிம சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து பலரும் மாஸ்டோடான் எனும் கட்டற்ற மென்பொருளுக்கு மாறி வருகின்ற இவ்வேளையில் நண்பர் பாலாஜி இதற்கான அறிமுகக் காணொளியை வெளியிட்டுள்ளார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மாஸ்டோடான் பற்றிய கட்டுரை இங்கே  – www.kaniyam.com/introduction-to-fediverse-mastodon/ Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி   மாஸ்டோடானில் கணியம் – mastodon.social/@KaniyamFoundation  

தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014 கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று உலகில் உள்ள பெரும்பாலான தன்னியக்க வங்கி இயந்திரங்கள் (ATM) Windows XP -ஐ அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.… Read More: தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்? »

திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. “பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின்… Read More: திறவூற்று மென்பொருளுக்கு மாறும் தமிழக அரசு துறைகள் »