Author Archive: இரா. அசோகன்

ட்ரீஸ்டே நகரம் கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது

இத்தாலியில் ட்ரீஸ்டே நகர நிர்வாகம் தாங்கள் பயன்படுத்த முடியாத கணினிகளில் திறந்த மூல மென்பொருட்களை நிறுவி இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. Stock market building in Trieste ஒரு கணினி, கணினித்திரை, விசைப்பலகை மற்றும் தேவையான மின் இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்கணினிகளில் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். முன்னர்…
Read more

மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும்…
Read more

இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது

அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு…
Read more

தரவு உரிமையாளர்களின் கைகளை வலுப்படுத்துக – ஆதார், ஜிஎஸ்டி தொழில்நுட்ப ஆலோசகர்

ஆதார் திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளராகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருப்பவர் பிரமோத் வர்மா. புதிய ஜிஎஸ்டி வரி செலுத்த வழிவகை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமாகிய ஜிஎஸ்டி பிணையத்தின் (GSTN) ஆலோசகரும் ஆவார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிபுணரான வர்மா பல பொறுப்புகளை ஏற்றுள்ளார். இவர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ள ஏக்ஸ்டெப் (EkStep)…
Read more

இலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்

அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் –…
Read more

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க…
Read more

டெவோபீடியா: நிரல் பயிலுநர்களுக்கான விக்கிபீடியா இந்தியாவில் உருவாகிறது

தொலைத் தொடர்புத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அரவிந்த் பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருட்களின் இணையத்துக்கு (Internet of Things, IoT) ஒரு திறன்பேசி செயலியை உருவாக்க விரும்பினார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொண்ட அவர் இணையத்தில் நிரலாக்க மொழியில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். இது செயலியை உருவாக்க அவசியமாக இருந்தது. ரியாக்ட்…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 21. திறந்த மூல மென்பொருளை வைத்து வணிகம் செய்வது எப்படி

எவரும் தங்கள் முதல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை என்னுடைய நிறுவனம் லூசிட்ஒர்க்ஸ் (Lucidworks) 2008 ல் முதல் சுற்று துணிகர முதலீடு பெற்றிருந்தது, எங்கள் முதல் விற்பனையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அபாச்சி சோலார் (Apache Solr) ல் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதவி தேடும் ஒரு வருங்கால வாடிக்கையாளருடன் தொலைபேசி…
Read more

கிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி

கிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார். …
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 20. திட்டங்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு வழுக்களைத் தேடுங்கள்

திறந்த மூலத்தில் புதிதாகத் தொடங்கும்போது இம்மாதிரி கேள்விகள் உங்களுக்குத் தோன்றும்: எனக்கு இன்ன நிரலாக்க மொழி தெரியும். உதவி செய்வதன்மூலம் அதன் நடைமுறைகளில் பயிற்சி பெற விரும்புகிறேன். நான் பங்களிக்கக் கூடிய திறந்த மூலத் திட்டத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? ம்ம் … எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையே. இது சிக்கலானதாகத் தோன்றுகிறதே. நான் இதே கேள்வியை…
Read more