Author Archives: kaniyan

ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது. ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள். வரும் ஆண்டு முதல் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம்… Read More »

பாண்டாஸ் (Pandas)

எழுத்து: ச.குப்பன் இன்றைய சூழலில், தரவுகள் தான் அனைத்து செயல்களுக்குமான மூலமாக விளங்குகின்றன. அபரிதமாக இணைய பயன்பாட்டு வளர்ச்சியினால், ஒவ்வொரு நொடியும் கணக்கிடமுடியாத அளவிற்கு இந்த தரவுகள் உருவாகிக்கொண்டே உள்ளன . அதற்கேற்ப ஏராளமான நிறுவனங்கள் இந்த தரவுகளைத் திறனுடன் கையாளுவதற்காகப் புதுப்புது வழிமுறைகளையும், மென்பொருள் கருவிகளையும் உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறானவைகளுள் பாண்டாஸ் (Pandas) எனும் திறமூலக் கருவியும் ஒன்றாகும். பைத்தானினுடைய (Python) நம்பி (numpy) எனும் கணித கட்டுகளைகொண்டு அணியினைப் பயன்படுத்தும் போது,… Read More »

PHP Code Sniffer – நிரல் தரம் சோதனைக் கருவி

எழுத்து: பாலவிக்னேஷ் உலகளவில் C, C++ மற்றும் JAVA ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் நிரல் மொழியாக இருப்பது PHP. சிறிய வலைத்தளம் (Website) முதல் பெரிய வலைப் பயன்பாடுகள் (Web Applications) வரை PHP ஆல் உருவாக்கப்பட்டு வருகின்றன. எளிமை, விரைவான பயிற்சி, வலைத்தளங்களுக்கு ஏற்ற வசயிகள் (functionalities) போன்றவைகளே இதன் அதிக பயன்பாட்டிற்கு காரணம். பயன்பாடு அதிகமாகும் போது உருவாகும் முதல் தேவை பராமரிப்பு. தகவல் தொழில்நுட்ப உலகில் உருவாக்கியவரே பராமரிப்பது என்பது… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »

தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக

தமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும். ஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம் வலைதளங்களில் தமிழ் தட்டச்சை பார்த்திரு‍ப்போம். ஆனால் இந்த செயிலி (Application) இயக்கு தளத்தில் இருந்து செயல்படும். வலைதளங்களில் உள்ள தட்டச்சு… Read More »