Author Archives: ச. குப்பன்

PlantUML எனும் கட்டற்றகருவி

PlantUml என்பது ஒரு எளிய உரை விளக்க மொழியைப் பயன்படுத்தி ஒரு சில UML வரைபடத்தை விரைவாக உருவாக்க அனுமதிக்கின்ற ஒரு திறமூல கருவியாகும். இது எளிய மனிதர்களால் படிக்கக்கூடிய உரை விளக்கத்தை மட்டுமே பயன்படுத்தி UML வரைபடங்களை வரைய உதவுகின்றது. இதில் வரைபடத்தினை வரையும்போது மிககவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் சீரற்ற வரைபடங்களை வரைவதிலிருந்து இது நம்மைத் தடுக்காது (எடுத்துக்காட்டாக, இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று மரபுரிமையாகக் கொண்டிருப்பது போன்றவை). எனவே இது ஒரு மாதிரி கருவியை விட… Read More: PlantUML எனும் கட்டற்றகருவி »

eXp OSஎனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

eXp OS என சுருக்கமாக அழைக்கப்பெறும் செயல்முறையிலான இயக்க முறைமை (eXperimental Operating System) என்பது இணைய வாயிலான நேரடி கல்வி தளமாகும், இது ஒரு சிறிய பல்லடுக்கு நிரலாக்க இயக்க முறைமையாகும் . , இது ஒரு புதிய இளங்கலை கணினி அறிவியல் மாணவனை ஒரு சில மாதங்களில் புதிய இயக்கமுறைமை ஒன்றினை உருவாக்கி செயல்படுத்தி பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கிறது, அதாவது இது புதிய இளங்கலை மாணவர்களுக்கு ஒரு இயக்க முறைமைஎவ்வாறு செயல்படுகின்றது என நேரடியாக… Read More: eXp OSஎனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம் »

அருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது

அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என கவலைப்பட வேண்டாம்; அதற்கான தீர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக நாம் அனைவரும் 2G / 3G இலிருந்து Wi-Fi எனும் அருகலைக்கு மேம்படுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சினையும் உடன்துவங்கிவிட்டது. .தனிப்பட்ட கைபேசியில் 2 ஜி / 3 ஜி இணைப்பைக் காட்டிலும் அருகலை அதிக செலவு குறைந்ததாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரேயொருஅருகலை மோடத்தில் 32 சாதனங்கள்வரை நாம் இணைத்து பயன்டுத்திகொள்ள முடியும், அவ்வாறு இணைத்த பின்னரும்… Read More: அருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது »

BlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

BlissRoms என்பது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டற்ற இயக்கமுறைமையாகும் ,இதுஅப்பாச்சி உரிமம் V2.0, குனு பொது உரிமம் 3.0 (GPLv3) ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இது பல தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் உள்ளடக்கியது. நம்முடைய எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான ROM/OS வழங்குவதிலும், எல்லா தளங்களிலும் ஒத்திசைவாக செயல்படுவதன் மூலம் தனிப் பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதிலும் இது முக்கிய கவணம் செலுத்துகின்றது. எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும்… Read More: BlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம் »

இணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு

தனிப்பட்டமுறையில் திறமூல இணைய உலாவல் அனுபவத்தை பெறுவதற்கு  Brave எனும் கட்டற்ற இணைய உலாவி பயன்பாடு பேருதவியாய் விளங்குகின்றது. இது விண்டோ, மேக் லினக்ஸ், ஆண்ட்ராய்டு, iOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. கூகிளின் திறமூல குரோம் செயல்திட்டத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட, Bweb உலாவி என்பது வலைத்தள கண்காணிப்பாளர்களை தானாக முடக்குவதன் மூலமும், தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலமும் நம்முடைய இணைய உலாவல் செயல்பாட்டை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைவிட மேலும்… Read More: இணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு »

gretl எனும் பயன்பாடு ஒருஅறிமுகம்

gretl என சுருக்கமாக அழைக்கப்படும் குனு பின்னடைவு, பொருளாதார அளவியல் கால-தொடர்களின் நூலகம் (Gnu Regression, Econometrics and Time-series Library)என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பொருளாதார அளவீட்டு பகுப்பாய்விற்கான ஒரு குறுக்கு-தள பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு ஆகும். இது இலவசமென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தொரு இலவச, திற மூல பயன்பாட்டு மென்பொருளாகும் . இது குனு பொது மக்களின்பொது உரிமத்தின் (GPL) அனுமதி விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் அல்லது… Read More: gretl எனும் பயன்பாடு ஒருஅறிமுகம் »

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன. ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள் கணினி அறிவியலைக் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் மாபெரும் உதவியாளராக விளங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது… Read More: ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs) »

COVID-19 எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல்திட்டங்கள்

தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா நச்சுயிரைஎதிர்த்துபோராடுவதற்காகபின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன . Opentrons இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய அமைப்புகளுடன் அதன் தயாரிப்புகள் வியத்தகு அளவில் COVID-19 பரிசோதனைக்கு உதவக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. வருகின்ற ஜூலை 2020 இற்குள் 1 மில்லியன்… Read More: COVID-19 எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல்திட்டங்கள் »

Great Cow Graphical BASICஎனும்நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்

Great Cow Graphical BASIC என்பது உருவப்பொத்தான் அடிப்படையிலான ஒரு நிரலாக்கங்களின் பதிப்பாளராகும். மேலும் இது நிரலாக்கங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகவும் திகழ்கின்றது இது பயனாளர்கள் கட்டளைவரிகள் எதையும் மனப்பாடம் செய்யாமலேயே நிரலாக்கங்களை உருவாக்க அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக எந்தெந்த கட்டளைவரிகள் எங்கெங்கு வரவேண்டும் என்ற அடிப்படையை கூட மனப்பாடம் செய்திடாமல் அல்லது அறிமுகமே இல்லாதவர்களும் இதனை பயன்படுத்தி நிரலாளராக வளரமுடியும் அதாவது இதற்கு முன்னர் எந்தவொரு நிரலாக்கத்தையும் செய்யாத புதியவர்களும் அல்லது துவக்க நிலையாளர்களும்… Read More: Great Cow Graphical BASICஎனும்நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம் »

WinCDEmu எனும் கட்டற்ற கருவி

WinCDEmu என்பது ஒரு கட்டற்ற குறுவட்டு / நெகிழ்வட்டு / BD இன் முன்மாதிரி கருவிஆகும். இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோ ர் எனும் இணையஉலாவியில் சொடுக்குவதன் மூலம் வன்தட்டுகளில் imageஐபதிவேற்றம் செய்திட அனுமதிக்கின்றஒரு கருவியாக திகழ்கின்றது. ஏதேனுமொரு ISO image ஐபதிவிறக்கம் செய்து அதை காலியான வெற்று வட்டில் பதிவுசெய்திடாமல்நேரடியாக பயன்படுத்த விரும்பினால், இந்தWinCDEmu ஆனதுஅவ்வாறான பணியைஎளிதான வழியில்செய்வதற்காக நமக்குகைகொடுக்கின்றது.இதனுடைய பல்வேறு வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG ஆகியவற்றின் image களை ஒரேயொரு… Read More: WinCDEmu எனும் கட்டற்ற கருவி »