Author Archives: ச. குப்பன்

ObjectBox எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகி்யவற்றிற்கான தரவுதளம் ஒருஅறிமுகம்

  ObjectBox என்பது IOT எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகிய சாதனங்களுக்கான தனித்தன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக பொருள் சார்ந்த தரவுத்தளமாகும் . இது சிறிய அளவிலான சாதனங்களுக்கும் விளிம்பு கணினியின் (edge computing) செயலை கொண்டு வருவதுடன் , தரவுவுகளை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக மேலாண்மை செய்து சேமிக்கவும் செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது. , இது 1MB ஐ விட மிகச்சிறியதாக இருப்பதால் இது கைபேசி பயன்பாடுகள், சிறிய IoT சாதனங்கள் IoT நுழைவாயில்களுக்கான… Read More »

கட்டளைவரி வாயிலாக கோப்புகளை பார்வையிடஉதவிடும் கருவிகள்

லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளைவரித்திரையில் கருவிகளின் கட்டளைவரிகளை செயல்படுத்தி கோப்புகளை பார்வையிடலாம் உதாராணமாக README எனும் கட்டளைவரியை கொண்டு ஒரு HTML வகை கோப்பினை ஒரு LaTeX வகைகோப்பினை அல்லது ஏதேனுமொரு உரைக்கோப்பினை பார்வையிடுவதை போன்று lessஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி less கோப்பின்_பெயர்.doc என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிட விரும்பும் கோப்பினை திறந்து கொள்க அதனை தொடர்ந்து விசைப்பலகையிலுள்ள spacebar அல்லதுPgDn அல்லது PgUp ஆகிய விசைகளை அழுத்துவதன் வாயிலாக… Read More »

WriteFreely எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

WriteFreely  எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு நம்முடைய சொந்த வாசகர்குழுவிற்கான அல்லது விவாத குழுவிற்கான கட்டமைவை நாமே உருவாக்கி கொள்ளமுடியும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இந்த உலகில் வாழும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும் ,நம்முடைய அன்றாட பணிகள் அனைத்தையும் முடிப்பதற்கும் இணையத்தை சார்ந்தே வாழவேண்டிய இக்கட்டான நிலையில் தான் நாமனைவரும் வாழ்ந்துவருகின்றோம் . அதாவது தற்போதைய சூழலில் இவ்வாறு தொடர்பு கொள்வதற்கான தளங்கள் ஒவ்வொன்றும்ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றிடுமாறு அதாவது குறிப்பிட்ட தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக… Read More »

QGIS எனும் கட்டற்ற பயன்பாட்டு கருவி ஒரு அறிமுகம்

முதலில் GIS இன் வரையறைபற்றி தெரிந்து கொள்வோம் GIS என சுருக்கமாக அழைக்கப்படும் புவியியல் தகவல் அமைவுகள் (Geographic Information Systems)என்பது ஒரு கணினி அடிப்படையிலான கருவியாகும், இதுபுவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை பகுப்பாய்வு,செய்து வரைபடமாக பார்வையாளர் களுக்கு காண்பிப்பது சேமித்து வைத்திடுவது ஆகிய பணிகளை கையாளுகின்ற ஒரு அமைவாகும் . அதாவது புவியியல் தகவல்களை உருவாக்கி நிருவகித்து பகுப்பாய்வு செய்து அதனை வரைபடமாக திரையில் காண்பிக்கச்செய்து இறுதியாக சேமித்து வைத்திடபயன்படுகின்றது பொதுவாக தற்போதைய சூழலில் பொருட்களுக்கான… Read More »

shell script எனும் குறிமுறைவரிகளின் உதவியுடன் ஒருஇணையபக்கத்தை பார்வையாளர்கள் நன்றாக படித்தறிந்து கொள்வதற்கேற்ப தெளிவுதிறனை மாற்றியமைத்திடலாம்

நமக்கென ஒரு இணையபக்கத்தை உருவாக்கிவிட்டால் போதும் உடன் பார்வையாளர்கள் அனைவரும் நம்முடைய இணைய பக்கத்திற்கு வந்துவிடுவார்கள் என நம்மில் பலர் தவறாக எண்ணிவிடுகின்றோம் பொதுவாக வழக்கமான சாம்பல வண்ண எழுத்துருக்களை வெள்ளை நிற பின்புலத்தில் நம்முடைய இணையபக்கத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தால் நம்முடைய இணையபக்கத்திற்கு வரும் பார்வையாளர்கள் நாம் கூற விழையும் கருத்துகளை படிக்காமல் தாண்டி சென்றிடுவார்கள் அதனால் பார்வையாளர்களனைவரும் நம்முடைய இணையதளபக்கத்தை தெளிவாக படித்து நாம் கூறவிழை.யும் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக நாம் பயன்படுத்திடும் எழுத்துருவிலும் நம்முடைய… Read More »

TiddlyWiki எனும் இணையபக்கம் ஒரு அறிமுகம்

TiddlyWiki என்பது ஒரு பயன்பாடு அன்று ஆயினும் HTML . JavaScript ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெரியஅளவிலான 2எம்பி கொள்ளளவுகொண்டதொரு இணையபக்கமாகும் நாம் நம்முடைய இணையஉலாவியை கொண்டு இதில் திருத்தம் செய்து கொண்டு தனியானதொரு கோப்பாக மறுபெயரிட்டு சேமித்து கொள்ளமுடியும் இதனை கொண்டு குறிப்பெடுத்திடலாம் ,செயல்திட்டத்தை உருவாக்கிகொள்ளலாம் இணைய இதழ்களை வெளியிடலாம் நாம் விரும்பும் இணையபக்கத்தை bookmarkசெய்து சேமித்து கொள்ளலாம் நம்முடைய புதிய இணையபக்கத்தை வெளியிடலாம் நம்முடைய வலைபூவை வெளியிடலாம் என்றவாறான பல்வேறு பணிகளை இதில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்… Read More »

மீப்பெரும் தரவுகள் ஒரு அறிமுகம்

நுண்ணறிவு, போக்குகள், தொடர்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் குறிப்பாக மனித நடத்தையையும் அவர்களுடனான இடைமுகப்பு தொடர்பாகவும் இந்தமீப்பெரும் தரவுத் தொகுப்புகளின் வாயிலாக மிகஎளிதாக கணிப்பாய்வு செய்யலாம், தொழில்துறை ஆய்வாளரான Doug Laney என்பவர் Gartner என்பவருடன் சேர்ந்து தொகுதி(volume) , வேகம் (velocity) , வகைகள் (variety) ஆகிய மூன்று பெரிய Vs சேர்ந்ததே இன்றைய முக்கிய மீப்பெரும் தரவுகளின் வலிமையாகும் என்ற வரையறையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் மாறிலியாகவும்(Variability),சிக்கலானதாகவும்(Complexity) இருக்கும்என்று கூறுகின்றார் , ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக… Read More »

பைத்தான் கணினிமொழியின் உதவியுடன் கோப்புகளைதானாகவே பிற்காப்பு செய்திட முடியும்

நாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக்  கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில்  இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை  எவ்வாறு மீண்டும் உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது ,அடுத்து என்ன செய்வது என  நாம் திகைப்புற்று அப்படியே மலைத்து போய் உட்கார்ந்திடுவோம் அஞ்சற்க… Read More »

FlightGear எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மெய்நிகர் விமாண ஓட்டியாக பயிற்சிபெறமுடியும்

முற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் பின் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டது அதன்பிறகு தற்போது இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது என்பது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஆகிவிட்டது தற்போது அதனை தாண்டி விமாணஓட்டிகளாக வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால சூழ்நிலைக்கு முன்னேறிவிட்டோம் இருந்தாலும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாளாவது சுயமாக விமாணத்தை ஓட்டமுடியுமா என்ற கனவு நம்மில் பெரும்பாலானவர்களின் அடிமனதில் தற்போது… Read More »

இணையத்தில் உலாவரும்போது குறுக்கிடும்விளம்பரங்களை தவிர்ப்பதெவ்வாறு?

  Pi-hole எனும் கட்டற்ற பயன்பாடு நாம் இணைய உலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும். சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய பதிப்புதான் உள்ளது என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் 512MB RAM உடைய Raspberry Pi என்பதை மட்டும் உறுதிபடுத்தி கொள்க. Raspbian… Read More »