Author Archives: srikaleeswarar

இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் தொகுதி 3

இது தொடர்பான இரண்டு தொகுதி கட்டுரைகள், ஏற்கனவே கணியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றையும் வாசகர்கள் அணுகி, இலவச செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 7. தரவு அறிவியல் : கருவி கற்றல் ஏற்கனவே ஹார்ட்வட் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இணைய வகுப்புகள் குறித்து பார்த்து இருந்தோம். அந்த வகையில், இந்த வகுப்பு ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கம் தான். மிகவும் பிரபலமான கருவி கற்றல்(Machine Learning) வழிமுறைகள் குறித்து உங்களால் அறிந்து கொள்ள முடியும். கருவி… Read More »

யாவருக்குமான, எளிய   எலக்ட்ரானிக்ஸ் – அறிமுகம்

பொதுவாக, இயற்பியல் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே, பரிச்சயமான ஒரு துறை தான் எலக்ட்ரானிக்ஸ். இதற்கு ஊடாகவே, பல நூற்றுக்கணக்கான பொறியியல் துறைகள் வலம் வருகின்றன. இன்றளவும் கூட பலருக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான எளிய தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும்! எனும் ஆர்வம் இருக்கும். பள்ளிப் பாட புத்தகங்களைக் கடந்து, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக படித்து தெரிந்து கொள்ள பல வழிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவற்றில் பலவும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன. கற்றுக் கொள்வதற்கு மொழி தடையாக… Read More »

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் (28/07/2024)

காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், வருகிற ஜூலை 28 2024 அன்று நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில்  கூட்டம் நடைபெறும். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை. Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம்,… Read More »

உங்கள் லினக்ஸ் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு

லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அது தொடர்பாக உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பை humble bundle ஏற்படுத்தியிருக்கிறது. லினக்ஸ் தொடர்பான, ஐந்து இணைய புத்தகங்களை(e-books) வெறும் ஒரு அமெரிக்க டாலர் (1$) விலையில் உங்களால் வாங்க முடியும். டிஜிட்டல் காப்புரிமையற்ற, லினக்ஸ் மற்றும் devops குறித்து விரிவாக விளக்கும் இந்த புத்தகங்களை humble bundle by O’Reilly வெளியீடு செய்கிறது. எந்தெந்த புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கவிருக்கின்றன?  வாருங்கள் பட்டியலை பார்க்கலாம்.… Read More »

இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் தொகுதி 2

ஏற்கனவே இலவச செயற்கை நுண்ணறிவு இணைய வகுப்புகள் குறித்து தொகுதி ஒன்று கட்டுரையை பார்த்திருந்தோம். அந்த கட்டுரையை படிக்கவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தி படித்துப் பார்க்கவும். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக மூன்று செயற்கை நுண்ணறிவு இலவச வகுப்புகள் குறித்து பார்க்கலாம். 4.செயல்முறை ஆழ்ந்த கற்றல் (practical deep learning):- Fast ai நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில், உங்களால் செயற்கை நுண்ணறிவு குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.… Read More »

உங்களுக்கு மாற்ற முடியாத லினக்ஸ் (Immutable distro) விநியோகங்கள் குறித்து தெரியுமா?

ஆங்கிலத்தில் IMMUTABLE எனும் வார்த்தைக்கு மாற்ற முடியாதது என்று பொருளாகும். எந்த ஒரு பொருள் மாற்றம் இன்றி இருக்கிறதோ அதுவே IMMUTABLE என்று பொதுவாக அறியப்படுகிறது. இதே அர்த்தத்தை தாங்கி வரக்கூடியது தான்! மாற்ற முடியாத லினெக்ஸ்( immutable distros) விநியோகங்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் பொதுவான விநியோகங்களை(Standard release) நம்மால் மாற்றி அமைக்க(Modification) முடியும். ஆனால் மாற்ற முடியாத  விநியோகங்களால்(Immutable distros) என்ன பலன் இருக்கிறது? அதில் விளைந்திருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி தான், இந்த… Read More »

“செயற்கை நுண்ணறிவு” அறிமுகம் தரும் இலவச இணைய பயிற்சி வகுப்புகள் ( தொகுதி – I )

தற்கால சூழலில், மிகவும் பிரபலமாக இருக்கும் கணினி தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு. பெரும்பாலான மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தொடக்க நிலையில் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது தான். அதை எளிமையாகும் விதமாக, எவ்வித செலவும் இன்றி, முற்றிலும் இலவசமாக! உலகின் சிறந்து பேராசிரியர்கள் நடத்தும் வகுப்புகளை, உங்களால்! உங்கள் வீட்டில் இருந்தே பெற முடியும். அதற்கான வழிமுறைகள் பற்றி தான், இன்றைய கட்டுரை அலசுகிறது. மொத்தம் மூன்று தொகுதிகளாக,… Read More »

இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)

இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக  நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு தான் அதை இணைய உலகில் சிறந்த தரவுதளமாக நீடிக்க செய்திருக்கிறது. 870 க்கும்  விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய… Read More »

கட்டற்ற தரவுகளின் நாயகர் “திரு.ஶ்ரீ பாலசுப்ரமணியன்”

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமான, விக்கிபீடியா குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம். நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து, விக்கிபீடியாவில் இருந்து தான் என்னுடைய அனைத்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கு தரவுகளை சேகரிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகள் தமிழில் கிடைப்பதற்கு அரியதாக இருந்தது. ஆனால், அந்த குறைகளை நீக்கும் விதமாக! பல தமிழ் ஆர்வலர்களும் விக்கிபீடியா இணையதளத்தில் களம் புகுந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை நாயகர் தான் “திரு.ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்”.… Read More »

உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க… Read More »